Wednesday, 31 December 2025
வலிமார்களின் கூற்றில் நாயகத் தோழர் ஸெய்யிதினா முஆவியா رضي الله عنه
Sunday, 28 December 2025
பூமான் நபி ﷺ அவர்களது சமர்
Tuesday, 23 December 2025
ஹதீஸ்களை கற்பதில் கவனம்
🌹 ஹதீஸ்களை கற்பதில் கவனம் 🌹
இமாம் ஹாபிழ் கதீப் பக்தாதி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு ஹிஜ்ரி 463) அவர்கள் முழு ஸனதுடன் அறிவிக்கின்றார்கள் ,
أخبرنا علي بن محمد بن عبدالله المعدل أنا محمد بن عمر الرزاز أنا محمد بن عبد الملك الدقيقي قال ثنا محمد بن إسماعيل السكري الكوفي قال ثنا حماد بن زيد قال دخلنا
على أنس بن سيرين في مرضه فقال : اتقوا الله يا معشر الشباب وانظروا عمن تأخذون هذه الأحاديث فإنها من دينكم .ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் பின் ஸிரீன் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " ஓ இளைஞர்களே ! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் ; இன்னும் நீங்கள்
யாரிடம் இருந்து ஹதீஸ்களை கற்றுக் கொள்கின்றீர்கள் என்பது குறித்து கவனமாக இருங்கள் ,ஏனெனில் இது உங்கள் மார்க்கம் "
ஆதார நூல் 📕 கிஃபாயா பீ இல்ம் அல் ரிவாயா ,பக்கம் 113
Wednesday, 26 November 2025
முஹத்திஸீன்களது வஸீலா
Friday, 21 November 2025
பூமான் நபி அவர்களை நிந்தனை செய்ததற்கான தீர்ப்பு
Monday, 10 November 2025
நபிமார்களைக் கொண்டு வஸீலா
Saturday, 8 November 2025
பூமான் நபி ﷺ அவர்களது கன்னிப் பேச்சு
Thursday, 30 October 2025
அக்கிரக்காரனும்,அவனது உதவியாளர்களும்
Tuesday, 28 October 2025
முஸாபிர்களின் அமல்
Saturday, 25 October 2025
பெருமானாரின் முஃஜிஸாத்
Wednesday, 22 October 2025
ஈஸால் ஸவாப்
🌹ஈஸால் ஸவாப் 🌹
இமாம் அஹ்மது பின் ஹன்பல் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் , " நீங்கள் கப்ரஸ்தானில் நுழைந்தால், பாத்திஹா ஸுரா,மூன்று குல் ஆகியவற்றை ஓதி அதன் வெகுமதியை மண்ணறையில் அடங்கியுள்ளவர்களுக்கு சமர்பிக்கவும்.அது அவர்களை சென்றடையும் "
📕 தபகாத்துல் ஹனாபிலா,காழீ அபூ யஃலா رَحِمَهُ ٱللَّٰهُ
Tuesday, 7 October 2025
வலிமார்களிடம் வஸீலா
Sunday, 5 October 2025
வரலாற்றின் வெளிச்சத்தில் மீலாதுந்நபி
Monday, 29 September 2025
தப்தீழி
Monday, 15 September 2025
முஹத்திஸீன்களின் மவ்லித்
Friday, 12 September 2025
முஹத்திஸீன்களின் மவ்லித்
🌹 முஹத்திஸீன்களின் மவ்லித் 🌹
முஹத்திஸே ஹரமைன் இமாம் ஷெய்கு ஸெய்யது முஹம்மது பின் அலவி அல் மாலிகி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு 1426) அவர்கள் சமீபகாலத்தில் இஸ்லாமிய உம்மத்தின் பெரும் அறிஞராக அறியப்பட்டவர்கள்.
எம்பெருமானார் ﷺ அவர்களது திருப்பேரர் சுவனத்து இளைஞர்களின் தலைவர் ஸெய்யிதினா ஹஸன் رضي الله عنه அவர்களது பாரம்பரித்தில் வந்தவர்கள்.
அன்னவர்களது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக மக்கா முகர்ரமாவில் மாலிகி மத்ஹபின் இமாமாக மக்களுக்கு பணிபுரிந்தனர்.
இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பாட்டனார் ஸெய்யது அப்பாஸ் அலவி அல்மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மக்கா முகர்ரமாவின் முப்தி மற்று காழீயாகவும்,இமாமாகவும்,கதீபாகவும் மார்க்கப் பணியாற்றினார்கள்.
அன்னார் இப்பணிகளை உஸ்மானிய கிலாபத்தின் போதும்,பின்னர் ஹாஷிமியாக்களது ஆட்சியலும்,அதன் பின்னர் இன்று 200 வருடங்கள் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட நவீன சவூது ஆட்சியிலும் தொடர்ந்தனர். அன்றைய மன்னர் அப்துல் அஜீஸ் பின் சவூது இவர்பால் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.
இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது ,தகப்பனார் ஸெய்யது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நாற்பதாண்டு காலம் மக்கா முகர்ரமாவில் பல்வேறு இஸ்லாமிய உலூம்களை கற்பித்துக் கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.
தமது தகப்பனாரிடம் இஸ்லாமிய கல்வியை கற்ற இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,தமது 15 வது வயதில் ஹதீஸ் மற்றும் பிக்ஹ் உடைய கல்வியை ஹரம்ஷரீபில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
ஆரம்பகால கல்வியை கற்ற பின்னர்,தமது 25 வது வயதில் உலகப் புகழ்பெற்ற ' அல் அஸ்கர்' பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சியானார்கள்.
இஸ்லாமிய உலகெங்கும் பயணித்து மக்ரிப் முதல் மஷ்ரிக் வரை மார்க்கக் கல்வியை பல்வேறு உலமாக்களிடம் கற்றார்கள்.
மவ்லிதுந்நபி ﷺ ஏன் கொண்டாடுகிறீர்கள் ? ,மற்றும் இன்னபிற ஆட்சேபனைகளுக்கு இரத்தின சுருக்கமாக பின்வருமாறு தமது மவ்லிது குறித்து நூலில் பதிலுரைத்தார்கள்,
" நான் மவ்லிதுந்நபி கொண்டாடுகின்றேன் ஏனெனில் நபி ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன், நான் நபி ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன் ஏனெனில் நான் நபி ﷺ அவர்களை நேசிக்கின்றேன், நான் நபி ﷺ அவர்களை நேசிக்கின்றேன் ஏனெனில் நான் ஒரு முஃமின் "
📕 ஹவ்ல் அல்இக்திபால் பீ திக்ரி மவ்லித் அல்நபி அஷ்ஷரீப்,இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ
Wednesday, 10 September 2025
லைலத்துல் கத்ர் இரவை விட சிறந்த மவ்லிதுந்நபி இரவு !
Monday, 8 September 2025
மவ்லிதுந்நபி குறித்து ஹாபிழ் இப்னு கதீர் رَحِمَهُ ٱللَّٰهُ
மவ்லிதுந்நபியின் இன்றைய கொண்டாட்ட நடைமுறை பாத்திமி ஷியாக்களுடையது என்றும், பைத்துல் முகத்தஸை வென்றெடுத்த சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அஷ்அரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மைத்துனர் ஷாஹ் மலிக்குல் முஸப்பர் குறித்தும் வஹாபிகள் மோசடியான திரிக்கப்பட்ட கருத்துகளை - அம்மன்னர் பாஸிக்காகவும்(பாவி),கொடுங்கோலன் என்றும்,பித்அத்தி என்றும் வாய் கூசாமல் அல்லாஹ்,ரஸுலுக்கு அஞ்சாமல் பொய் பரப்புகின்றனர்.
வஹாபிகள் ஏற்றுக் கொள்ளும் இமாம் ஹாபிழ் இப்னு கதீர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,மன்னர் ஷாஹ் மலிக்குல் முஸப்பர் பற்றி பின்வருமாறு தமது நூலில் எழுதுகின்றனர்,
أحد الاجواد والسادات الكبراء والملوك الامجاد له آثار حسنة وقد عمر الجامع المظفري بسفح قاسيون وكان قدهم بسياقه الماء إليه من ماء بذيرة فمنعه المعظم من ذلك واعتل بأنه قد يمر على مقابر المسلمين بالسفوح وكان يعمل المولد الشريف في ربيع الاول ويحتفل به احتفالا هائلا وكان مع ذلك شهما شجاعا فاتكا بطلا عاقلا عالما عادلا رحمه الله وأكرم مثواه وقد صنف الشيخ أبو الخطاب ابن دحية له مجلدا في المولد النبوي سماه التنوير في مولد البشير النذير فأجازه على ذلك بألف دينار وقد طالت مدته في الملك في زمان الدولة الصلاحية وقد كان محاصر عكا وإلى هذه السنة محمودالسيرة والسريرة قال السبط حكى بعض من حضر سماط المظفر في بعض الموالد كان يمد في ذلك السماط خمسة آلاف راس مشوى وعشرة آلاف دجاجة ومائة ألف زبدية وثلاثين ألف صحن حلوى
அவர் அளவற்ற ஈகைபுரிபவர், வல்லமைமிக்க எஜமானர், மற்றும் புகழ்பெற்ற ஆட்சியாளர்; அவரது செயல்கள் மிகவும் சிறப்பானவை. அவர் காசியூன் அருகில் ஜமியா அல் முழஃபரி என்னும் அரபுக் கல்லூரியைக் கட்டினார். ரபிஉல் அவ்வல் மாதத்தில் அவர் மவ்லித் அஷ் ஷரீஃபை (يعمل المولد الشريف في ربيع الاول) பெரிய கொண்டாட்டத்துடன் நடத்துவது வழக்கம். மேலும், அவர் அன்புள்ளவர், தைரியமானவர், ஞானமுள்ளவர், அறிஞர், மற்றும் நீதியுள்ள நபர் . அன்று வாழ்ந்து வந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞரான ஷெய்கு அபுல் கத்தாப் (رَحِمَهُ ٱللَّٰهُ ) மன்னரின் வேண்டுகோளை ஏற்று மவ்லித் அந் நப்வி பற்றிய ஒரு நூலை எழுதினார், அதன் பெயர் “அல்-தன்விர் ஃபி மவ்லித் அல் பாஷிர் அல் நஸீர்”, அதற்காக மலிக்குல் முஸப்பர் அவருக்கு 1000 தினார்கள் வழங்கினார். அவரது ஆட்சி சலாஹியா ஆட்சி வரை நீடித்தது, அவர் அகா நகரை கைப்பற்றினார், மற்றும் அவர் மரியாதைக்குரிய நபராக இருந்தார்.
அல்-சப்த் என்பார் கூறுகிறார், முஸப்ஃபர் நடத்திய மவ்லித் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் அங்கு மன்னரின் விருந்தோம்பலை விவரிக்கையில் : மன்னர் மலிக்குல் முஸப்பர் 5000 நன்கு வேகவைக்கப்பட்ட ஆடுகளை, 10,000 கோழிகளை, 100,000 பால்கிண்ணங்களை (பால்) மற்றும் 30,000 மிட்டாய் தட்டுகளை (இனிப்புகள்) மேசையில் நிரப்புவது வழக்கம் என்று கூறினார்.
[ நூல் : தாரீக் இப்னு கதீர், அல் பிதாயா வந்நிஹாயா,பாகம் 13,பக்கம் 174 ]



