📝அக்கிரமக்காரனும் ,அவனது உதவியாளர்களும்
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்களது மாணவர் ஹழ்ரத் அபூ பக்ர் அல்-மரூதீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள்:
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் رضي الله عنه அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறைக்காவலர் வந்து அவரிடம் :
“ஓ அபூ அப்துல்லாஹ், அக்கிரமக்காரர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் பற்றிய ஹதீஸ் உண்மையா?” என்று வினவினார்.
இமாம் அவர்கள் கூறினார்கள்:
“ஆம். அது உண்மை தான்”
சிறைக்காவலர் கூறினார்:
“நான் அக்கிரமக்காரர்களின் உதவியாளர்களில் ஒருவனா?”
இமாம் அஹ்மத் கூறினார்கள் :
“அக்கிரமக்காரர்களின் உதவியாளர்கள் என்போர் உனக்காக முடி வெட்டுபவர்கள், உடைகளைத் துவைப்பவர்கள், உணவு தயாரிப்பவர்கள், உன்னிடமிருந்து வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆவர், நீயோ அக்கிரமக்காரர்களில் ஒருவனே.”
[ஆதார நூல் 📕 மனாகிப் அபீ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹம்பல் - பக்கம் 431 ]
No comments:
Post a Comment