Wednesday, 26 November 2025

முஹத்திஸீன்களது வஸீலா

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ  رَحِمَهُ ٱللَّٰهُ  மற்றும் இமாம் தஹபீ رَحِمَهُ ٱللَّٰهُ   ஆகிய இரு மகத்தான முஹத்திஸ்களும், ஹதீஸின் உஸூல்கள் மற்றும் அஸ்மாஉர்ரிஜால் அறிவின் அடிப்படையில் வலிமார்களிடம் உதவி கோருவது மற்றும் அவர்களை வஸீலா ஆக்குவது பற்றி விளக்கிய அகீதா (நம்பிக்கை) பின்வருமாறு:

ஹஜ்ரத் அபூ அலீ நைஷாபூரீ رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு: 349 ஹிஜ்ரீ) அவர்கள் கூறுகிறார்கள்:

“நான் மிகவும் கடுமையான கஷ்டத்திலும் துன்பத்திலும் இருந்தேன். அப்போது எனக்கு கனவில் அண்ணல் நபி ரசூலுல்லாஹ்  ﷺ அவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அப்போது ஏந்தல் நபி  ﷺ  அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

‘யஹ்யா பின் யஹ்யா அவர்களின் கப்றிடம் செல், அங்கு நீ இஸ்திஃபாரும் (பாவமன்னிப்புக் கோருதலும்) செய், அவரை வஸீலாவாக வைத்து உதவி கோரு; அப்போது உன் கஷ்டம் நீங்கிவிடும்.’

நானும் அவ்வாறே செய்தேன்; மறுநாளே என் துன்பம் நீங்கிவிட்டது.”

( இமாம் யஹ்யா பின் யஹ்யா رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் மறைவு : 226 ஹிஜ்ரீ)

ஆதார  நூல் 📕தஹ்தீபுத் தஹ்தீப், தொகுதி 4, பக்கம் 398

இப்போது எந்த வஹ்ஹாபியோ, தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரோ அல்லது அஹ்லே ஹதீஸ் உடையவராவது இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ மற்றும் இமாம் தஹபீ ஆகியோரை கப்ரு வணக்கம் செய்பவர்கள்,ஷிர்க் செய்பவர்கள் ( நவூதுபில்லாஹ் ) என்று  ஃபத்வா கொடுக்கத் துணிவாரா?


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...