Monday, 10 November 2025

நபிமார்களைக் கொண்டு வஸீலா

🌹நபிமார்களைக்  கொண்டு வஸீலா 🌹

நாயகத் தோழர் ஹழ்ரத ஸெய்யிதினா அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , 

" அறிவின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்களது தாயார் ஸெய்யிதா பாத்திமா பின்த் அஸத் இப்னு ஹிஷாம் رضی الله عنها அவர்கள் மவ்த்தான பொழுது அங்கு வந்த கண்மணி நாயகம்  ﷺ அவர்கள்  அன்னாரின் தலைமாட்டில் அமர்ந்து,

' என்னுடைய தாயார் அவர்களே !  அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக. என்னுடைய தாயாருக்குப் பின் எனக்கு தாயாக இருந்தீர்கள்.தாங்கள் பசித்திருந்து எனக்கு வயிறார உணவளித்தீர்கள்.தங்களுக்கு ஆடை இல்லாத பொழுது எனக்கு ஆடை அணிவித்தீர்கள்.

நல்ல உணவை தங்களுக்கு தடுத்து எனக்கு ஊட்டினீர்கள்.இவற்றால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் ,மறுமை வெற்றியையும் நாடினீர்கள்." என்றுரைத்தார்கள்.

பின்னர் ஜனாஸாவை குளிப்பாட்டவும்,மூன்று முறை தண்ணீர் ஊற்றவும் பணித்தார்கள்.கற்பூரம் கலந்த நீரால் குளிப்பாட்டும் நேரமான பொழுது தமது திருக்கரங்களால் அவர்கள் மீது ஊற்றினார்கள்.பின்னர் தாம் அணிந்திருந்த சட்டையை கழற்றிக் கொடுத்து அணிவிக்கச் செய்தார்கள்.அதன்மீது கஃபன் ஆடை அணிவிக்கப்பட்டது.

பின்னர் பெருமானார்  ﷺ அவர்கள் ஸஹாபா பெருமக்களான ஹழ்ரத் உஸாமா இப்னு ஜைத்,ஹழ்ரத் அபூஅய்யூப் அன்சாரி ,பாரூக்குல் அஃலம் ஹழ்ரத்  உமர் கத்தாப் மற்றும் ஓர் கருப்பு அடிமைச் சேவகர் ஆகியோரை அழைத்து கப்ரை தொண்டச் சொன்னார்கள்.

அவர்கள் கப்ர் தோண்டினர்.பின்னர் கப்ரின் அடிப்பகுதியானதும் பெருமானார்  ﷺ அவர்கள் கப்ரின் உள்ளே இறங்கி,ஒருக்களித்து சாய்ந்து படுத்துக் கொண்டு , ' அல்லாஹ் உயிர் கொடுப்பவனும்,மரணிக்கச் செய்பவனும் ஆவான்.அவன் நித்திய ஜீவனும்,மரணமற்றவனுமாவான்.

யா அல்லாஹ் ! உன்னுடைய நபிமார்களுடையவும்,எனக்கு முன்னால் வந்த நபிமார்களுடையவும் பொருட்டால் என்னுடைய தாயார் பாத்திமா பின்த் அஸத் அவர்களுக்கு நீ பிழை பொறுத்தருள்வாயாக ! 

அவர்களுக்கு ( கப்ரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல) ஆதாரத்தை மொழியச் செய்வாயாக ! அவர்கள் புகுமிடத்தை நீ விசாலப்படுத்துவாயாக ! நிச்சயமாக கருணையாளர்களில் நீயே கருணையாளன் " ( என்று துஆ செய்து விட்டு ) நான்கு முறை தக்பீர் சொல்லி தொழ வைத்தார்கள்.

பின்னர் பெருமானார்  ﷺ அவர்களும்,ஸெய்யிதினா அப்பாஸ் رضي الله عنه அவர்களும் ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் رضي الله عنه அவர்களும் சேர்ந்து கப்ருக்கள் ஜனாசாவை வைத்தனர்.

ஆதார நூல் 📕 இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ ,முஃஜமுல் கபீர் ,ஹதீஸ் எண் 871,முஃஜமுல் அவ்ஸத் ,ஹதீஸ் எண் 189

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...