Thursday, 23 April 2026

ஹயாத்துல் அன்பியா

🌹 ஹயாத்துல் அன்பியா 🌹

ஸெய்யிதினா ஹழ்ரத் தானியால் عَلَيْهِ ٱلسَّلَامُ தமது கப்ரில் தஸ்பீஹ் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

முஹத்தீஸ் இமாம் கபீர் இப்னு அபீ துன்யா رَحِمَهُ ٱللَّٰهُ (இமாம் புகாரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களின் மாணவர், அவருடைய மாணவர் இமாம் இப்னு மாஜா رَحِمَهُ ٱللَّٰهُ ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :  

ஹஸ்ரத் இப்ராஹீம் பின் அப்துர் ரஹ்மான் رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களிடமிருந்து ரிவாயத் செய்கிறார்கள்: ஒரு முறை ஸெய்யிதினா  யஹ்யா நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்கள், ஸெய்யிதினா  தானியால் நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களின் கப்ருக்கு அருகில் சென்றபோது, கப்ரிலிருந்து ஒரு சப்தம் கேட்டது. ஹழ்ரத் தானியால் நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ  கப்ரின் உள்ளே அல்லாஹ்வின் தஸ்பீஹ் மற்றும் தக்தீஸில் இந்த வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்:  

**سبحان من تعزز بالعزة وقهر العباد بالموت.**  

ஹழ்ரத் யஹ்யா நபி  عَلَيْهِ ٱلسَّلَامُ இந்த தஸ்பீஹ் வார்த்தைகளைக் கேட்டு முன்னேறிச் சென்றார்கள். அப்போது அசரீரி ஒலித்தது:  

**انا الذي تعززت بالعزة وقهرت العباد بالموت من قالهن استغفرت له نسماوات والأرض ومن فيهن.**  

ஆதார நூல் 📕  இமாம் இப்னு அபீ துன்யா, எண் 546;  ஹயாதுல் ஹயவான்,10/1

அஹ்லேபைத்துகள் மற்றும் ஷெய்கைன்களது நேசம்

🌹  அஹ்லேபைத்துகள் மற்றும்  ஷெய்கைன்களது நேசம்  🌹

ஸித்தீகுல்  அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه மற்றும் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் குறித்து  இமாம் அபூ ஹனீஃபா رضي الله عنه, பூமான் நபி  ﷺ அவர்களது திருப்பேரர் இமாம் ஸெய்யது முஹம்மது பாகிர் رضي الله عنه   அவர்களுடனான உரையாடல்:

இமாம் அபூ ஹனீஃபா رَحِمَهُ ٱللَّٰهُ  கூறினார்கள்: நான் அபூ ஜாஃபர் முஹம்மது இப்னு அலீ (இமாம் பாகிர்) அவர்களைச் சந்தித்தேன். நான் கேட்டேன்: “ஸெய்யிதினா அபூபக்கர் மற்றும் ஸெய்யிதினா உமர் அவர்களைப் பற்றி தங்களது கூற்று யாது  ?” 

அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்  سبحانه و تعالى ஸெய்யிதினா அபூபக்கர் மற்றும் ஸெய்யிதினா  உமர் அவர்களுக்கு ரஹ்மத் புரிவானாக !”

நான் கூறினேன்: “எங்கள் ஈராக் நகரில் (சிலரால்) உங்களைப் பற்றி கூறப்படுகிறது — நீங்கள் அவர்களிடமிருந்து தூரமாகி விடுகிறீர்கள் என்று.”

இமாம் ஜாபர் ஸாதிக் رضي الله عنه அவர்கள் வியப்புடன்  கூறினார்கள்: “அல்லாஹ் தடுக்கட்டும்! என்னைப் பற்றி இதைச் சொன்னவன் பொய் சொன்னான். அல்லது உங்களுக்குத் தெரியாதா?

 அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப்  كرم الله وجهه  அவர்கள் தங்கள் மகள் ஸெய்யிதா உம்மு குல்ஸூம் رضی الله عنها  அவர்களை , அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் இப்னு கத்தாப் رضي الله عنه  அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். 

அந்தப் பெண்ணின் (உம்மு குல்ஸூம்) பாட்டனார் அல்லாஹ்வின் ஹபீப்  ரஸூலுல்லாஹ்  ﷺ  அவர்களும், பாட்டியார் ஸெய்யிதா உம்முல் முஃமினீன் அன்னை  கதீஜா رضی الله عنها அவர்களுமாவார்கள்.”

[ஆதார நூல் 📕 அல்-முன்தஸம் ஃபீ தாரீகில் உமம் வல் முலூக், பாகம்  7, பக்கம் 161

குறிப்பு:
இமாம் இப்னு ஜவ்ஸி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் தங்கள் இந்த வரலாற்று நூலில் பொதுவாக ஆதாரங்களை (ஸனத் உடன்) கூறும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். மேலே உள்ள ரிவாயத் (செய்தி) அவர்கள் இமாம் அபூ ஹனீஃபா அவர்களிடமிருந்து நேரடியாக, உறுதியாகக் கூறியுள்ளார்கள். இதிலிருந்து, இமாம் இப்னு ஜவ்ஸி அவர்கள் இந்தச் செய்தியை இமாம் அபூ ஹனீஃபா அவர்களின் சொந்த நூலிலிருந்து படித்து எடுத்திருக்கலாம் என்பது அதிக சாத்தியமாகத் தெரிகிறது. இமாம் இப்னு ஜவ்ஸி அவர்கள் தாங்கள் இமாம் அபூ ஹனீஃபா அவர்களின் பல நூல்களை ஜாமிஉ நிஸாமிய்யா நூலகத்திலிருந்து பெற்றிருப்பதாகக் கூறியுள்ளார்கள்.

அதாவது, இமாம் ஸெய்யது முஹம்மது  பாகிர் رضي الله عنه அவர்கள் முதலாவதாக, ஈராக்கில் ராஃபிழிகள் (ராஃபிழி/ஷியாக்கள் ) தங்கள் பெயரால் பரப்பிய பொய்யைத் தெளிவாக மறுத்தார்கள்.

 இரண்டாவதாக, ஒரு  அறிவு சார்ந்த ஆதாரத்தையும் முன்வைத்தார்கள்:

உறவுமுறையில்  ஹழ்ரத்  உமர் கத்தாப்  رضي الله عنه அவர்கள் ஹழ்ரத் அலீ மற்றும் ஹழ்ரத் ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் மருமகன் ஆவார்கள்.

 அவர்களின் மனைவியின் (உம்மு குல்ஸூம்) பாட்டனார் ரஸூலுல்லாஹ்  ﷺ அவர்களும், பாட்டியார் அன்னை கதீஜா رضی الله عنها அவர்களுமாவார்கள். இப்படிப்பட்ட திருமண உறவாகிய ஹழ்ரத் உமர் கத்தாப் رضي الله عنه  அவர்களைப் பற்றி “மஆதல்லாஹ்” (அல்லாஹ் தடுக்கட்டும்) தான் எப்படி ராபிழியாக்கள் பொய்யாக கூறுவது போல் தூரமாக்க முடியும்.
 

இதிலிருந்து இன்னொரு முக்கியமான செய்தியும் தெரிகிறது: இமாம் பாகிர் அவர்கள் ஸெய்யிதா உம்மு குல்ஸூம் رضی الله عنها அவர்களை ஹழ்ரத் உமர் கத்தாப் رضي الله عنه  அவர்களின் மனைவியாக இருந்ததால், ஹழ்ரத் உமர் அவர்களைத் தூரமாக்குவது     அசாத்தியம் என்று கருதினார்கள்.

அப்படியிருக்க, ராஃபிளிகள் /ஷியாக்கள்  சிறிதும் அறிவற்ற முறையில்  உம்முல் முஃமினீன் அன்னை ஸெய்யிதா  ஆயிஷா رضی الله عنها  அவர்களைப் பற்றி குறை கூறுகிறார்கள்.  அன்னை அவர்கள்  ரஸூலுல்லாஹ்  ﷺ  அவர்களின் மிகவும் பிரியமான மனைவியாக இருந்தார்கள்  என்பதை அறிந்தும்
கூட இத்தகைய இழிவான செயலில் ஈடுபடுகின்றார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...