தஃப்திழிகள்
இமாமே ரப்பானி முஜத்திதே அல்பதானி அஹ்மத் சிர்ஹிந்தி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகிறார்கள் :
“ஞானத்தின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலி رضي الله عنه அவர்கள், ஸித்தீகுல் அக்பர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அபூபக்கர் சித்தீக் رضي الله عنه அவர்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவர் என்று கூறுபவர் அஹ்லுஸ்-சுன்னத் வல் ஜமாத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.
பின்னர், தன்னை உயர்ந்தவராகக் கருதுபவனின் நிலை என்னவாக இருக்கும்? மேலும், இந்தக் குழுவில் (அதாவது சூஃபியாக்களில்) ஒரு ஸாலிக் தன்னை ஒரு தாழ்ந்த நாயை விட உயர்ந்தவராகக் கருதினால், அவர் இந்த ஆன்மீக ஆசான்களின் பரிபூரணங்களிலிருந்து வஞ்சிக்கப்படுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நபிமார்களுக்கு (அலைஹிமுஸ்-ஸலவாத் வத்-தஸ்லீமாத்) பிறகு,அமீருல் முஃமினீன் ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா ஹழ்ரத் அபூபக்கர் رضي الله عنه அவர்கள் அனைவரையும் விட அந்தஸ்த்தில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையின் மீது ஸலபுஸ் ஸாலிஹீன்களின் ஒருமித்த கருத்து (இஜ்மா) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒருமித்த கருத்தை எதிர்ப்பவன் ஒரு முட்டாள் ( அஹ்மக்) ஆவான்.
- மக்தூபாத் இமாம் ரப்பானி, பாகம் 1, பக்கம் 202.
No comments:
Post a Comment