“அஃயூனூனி யா இபாதல்லாஹ்” இந்த ஹதீஸ் முஸாஃபிர்களுக்கு மிகவும் அவசியமானது. மேலும் இது அனுபவத்தில் பரீட்சிக்கப்பட்ட அமலாகும்.
இமாம் முல்லா அலீ காரீ رَحِمَهُ ٱللَّٰهُ (வஃபாத் 1014 ஹி.) எழுதுகிறார்கள்:
" அல்-ஹிஸ்னுல் ஹஸீனில் நூலில் இமாம் முஹத்தித் அல் ஜசரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : “ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் அவர் கூறட்டும்: “அஃயூனூனி யா இபாதல்லாஹ்” (அல்லாஹ்வின் அடியார்களே, உதவி செய்யுங்கள்) (3 முறை).
இதை இமாம் தபரானீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் , நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா உத்பா பின் ஃகஸ்வான் رضي الله عنه அவர்களிடமிருந்து ரிவாயத் செய்துள்ளார்கள்.
சில உலமாக்கள் கூறினார்கள்: “இந்த ஹதீஸ் ஹஸன் ஆகும் மற்றும் முஸாஃபிர்களுக்கு மிகவும் அவசியமானது. மேலும் மஷாயிக்களிடமிருந்தும் ரிவாயத் உள்ளது இது அனுபவம் வாய்ந்த அமல் ஆகும், இது மகிழ்ச்சியுடன் செய்யப்படுகிறது.
(ஆதார நூல் 📕 மிர்காத் அல்-மஃபாதீஹ்: ஷர்ஹ் மிஷ்காத் அல்-மஸாபீஹ்” பக்கம் 295)
No comments:
Post a Comment