Sunday, 31 August 2025

மஷாயிகுமார்களது மீலாத்

அஷ்ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் மவ்லீத்  மறுப்பாளர்கள் மற்றும் வஹாபிச கொள்கையை ஏற்று தடம் புரண்ட
தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி,மவ்லவி காஸிம் நானொத்வி,மவ்லவி அஷ்ரப் அலி தானவி ஆகியோர் பைஅத்தும்,கிலாபத்தும்  பெற்றனர்.

அவர்கள் தமது வஹாபிச கொள்கையை பரப்பிட மவ்லீது கொண்டாடுவது கூடாது,ஷிர்க் ,பித்அத் என்று வஹாபிச பத்வாக்கள் அளித்து குழப்பம் விளைவித்த பொழுது அஷ்ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மற்றொரு கலீபாவான அல்லாமா முப்தி முஹம்மது அப்துல் சமீ சஹரான்பூரி رَحِمَهُ ٱللَّٰهُ மவ்லித் மறுப்பாளர்களான தமது சக தோழர்களுக்கு மறுப்பரையாக எழுதிய நூல் " அன்வாரே சாத்தியா" .இதற்கு ஷெய்கு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

அதன்பின்னர் , தமது மாணவர்களிடையே உண்டான கொள்கை வேறுபாட்டில் ,தமது நிலைப்பாட்டை விளக்கி எழுதிய நூல் " பைஸ்லா ஹப்த் மஸலா" .

இதில் குறிப்பாக மீலாத் குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்கள், 

" மீலாதுந் நபி  ﷺ ஷரீப் கொண்டாடுவது இம்மை ,மறுமையின் கைர்-பரக்கத்திற்கான அமல்.இதனை பித்அத்தான செயல் என்று கூறுபவர் கெட்ட நஸீபுக்காரன்" 

📕 பைஸ்லா ஹப்த் மஸலா,பக்கம் 22-23

இந்நூல் வெளியானதும் அவரது மவ்லவி மாணவர் ரஷீத் அஹ்மது கங்கோஹி இந்நூலை எரித்ததோடு மட்டுமில்லாமல் ,ஆலிமல்லாத நபரிடம் ஆலிமாக தான் பைஅத் எடுத்ததைப் பற்றி வருந்தினார்.

ஆனால் இத்தகைய கடும்போக்கு வஹாபிகளை இறைநேசர்களாக தேவ்பந்திகளை ஆதரிக்கும் போலியா தரீக்காக்கள் ( ஆரணி தரீக்கா,நூரிஷா தரீக்கா போன்றவை) பிரச்சாரம் செய்வதோடு தமது நூற்களில் பகிரங்கமாக எழுதியும், மவ்லவி ரஷீத் அஹ்மது உண்மையைத்தான் எழுதினார் என கூசாமல் துணிந்து நாங்களும் தரீக்கத்வாதிகள் என்று  வஹாபிய பிரச்சாரம் செய்து வருகின்றனர். நவூதுபில்லாஹ் ! 

இதன் தொடர்ச்சியாகவே தேவ்பந்த் பத்வாக்கள் மீலாத் கொண்டாடுவது கூடாது என்று இன்றும் இணையதளத்திலும் உள்ளது .


இவர்கள் ஷெய்குக்கு மாற்றமாக நடக்கும் முரீது பற்றி ஸுலூக்கு உடைய கிரந்தங்களை அல்லது குறைந்தபட்சம் குத்பே வேலூர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பத்வாவையாவது படிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...