Sunday, 31 August 2025

வரலாற்றில் மவ்லிதுந்நபி  ‎ﷺ

🌹மவ்லிதுந்நபி  ﷺ 🌹

இப்னு ஜுபைர் அந்தலூஸி ( 540 -614 ஹிஜ்ரி) ,இப்னு பதூதா போன்று இஸ்லாமிய ஆட்சி பகுதிகளிலும்,பிற பகுதகளிலும்  பயணங்கள் மேற்கொண்டு  " ரிஹாலா இப்னு ஜுபைர்" என்ற பயணக்குறிப்பை எழுதியுள்ளார் . கிரானடாவில் இருந்து துவங்கி அலெக்ஸாந்திரயா சென்று பின்னர் எகிப்தின் ,கெய்ரோ நகரை அடைந்தார். அங்கு அப்போது 'பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த '  ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அஷ்அரீ ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள்.
பின்னர் சிஸிலி,மக்கா முகர்ரமா,மதீனா முனவ்வரா,தமாஸ்கஸ்,மொஸுல்,பக்தாத் நகரங்களுக்கு பயணம் செய்தார்.இப்னு ஜுபைர் தமது பயணக் குறிப்புகளில் தாம் பயணம் செய்த இடங்களின் வெகுவான விளக்கத்தையும்,புவியியல் விளக்கங்களையும் குறித்துள்ளார். 

ஹிஜ்ரி 579 ல் மக்கா முகர்ரமாவிற்கு தாம் விஜயம் செய்த பொழுது,கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் பிறந்த வீட்டில் ,ஒரு மஸ்ஜித் எழுப்பப்பட்டு ,தங்கம்,வெள்ளி கொண்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருந்ததென்றும்,ரபீயுல் அவ்வல் மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு ,மக்கள் அனைவரும் அங்கு பரக்கத்தை நாடி செல்வதாகவும்,ஏனெனில் இம்மாதத்தில் ,திங்கட்கிழமை எம்பெருமானார்  ﷺ அவர்களது பிறந்த தினமாக இருப்பதால் என்று எழுதுகின்றார்.

 📚 ரிஹாலா இப்னு ஜுபைர் . 

அப்பாஸிய கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களது தாயார் அல்- கைஸுரான் அம்மையார் அவ்வீட்டினை வாங்கி,மக்கள் தொழவும் ,நாயகம்  ﷺ பிறந்த வீட்டினை வந்து காணவும் அங்கு பள்ளி ஒன்றை எழுப்பினார்.
அப்பாஸிய கலீபா அஹ்மது அல்-நஸீர் அதனை ஹிஜ்ரி 576ல் புனர்நிர்மாணம் செய்தார்.இருபதாம் நூற்றாண்டு வரை அங்கு பள்ளி இருந்தது.

1950ல் உஸ்மானிய கிலாபத்தை ஆங்குலேய ஏகாதிபத்தியத்தின் துணையுடன் வீழ்த்திய அன்றைய ஸவூதி அரசு பல இஸ்லாமிய பாரம்பரிய வரலாற்று கட்டிடங்களை இடித்தது.இந்த நடவடிக்கைகளால் ,அன்றைய மக்கா  மேயர்,ஷெய்கு அப்பாஸ் யூசுப் கத்தான்  ,எம்பெருமானார்  ﷺ பிறந்த வீட்டின் சட்டபூர்வ ஆவணத்தை சமர்பித்து அவ்விடத்தில் ஒரு நூலகத்தை கட்டுவதற்கு 1953ல் ஆவண செய்தார்.

இன்று அங்கு ஒரு நூலகம் உள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...