அன்னார் பாந்தா நகரில் அக்டோபர் 24,1848 ல் பிறந்தார்கள்.ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிமிக்க வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஃபிரங்கிமஹல் குடும்பத்தில் இருந்து வந்தார்கள்.தமது 11வது வயதில் குர்ஆனை மனனம் செய்து,தமது 17 வது தீனின் அனைத்து உலூம்களையும் ( ஸர்ப் முதல் தப்ஸீர் பைளாவி வரை) கற்றுத் தேர்ந்தார்கள்.
தமது தகப்பானர் அல்லாமா அப்துல் ஹலீம் அவர்களிடமும் ,அன்னாரது ஆசிரியர் மவ்லானா முஹம்மது நிஃமதுல்லாஹ் அவர்களிடமும் மார்க்க கல்வி கற்றார்கள்.ஹதீஸ்களின் இஜாஸத்தை முப்தியே மக்கா அல்லாமா ஜைனீ தஹ்லான் மக்கீ ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் பெற்றார்கள்.மக்காவின் ஹன்பலி முப்தி முஹம்மது இப்னு அப்துல்லாஹ் மற்றும
ஷாஹ் அப்துல் கனி முஹத்திஸ் திஹ்லவி ஆகியோரிடமும் இஜாஸத் பெற்றார்கள்.
மத்ஹப் மறுப்பாளர்களான அஹ்லே ஹதீஸ் என்னும் நவீன பித்அத்தான கூட்டத்தாரின் இமாமான நவாப் சித்தீக் ஹசன் போபாலிக்கு மறுப்புரையாக " ரஸாயில்" ஒன்றினை எழுதினார்கள்.
அன்னார் 109 புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.அவற்றுள் நான்கு குறிப்படத்தக்க புத்தகங்கள் நான்கு தனித்துவமான உலூம்களில் எழுதப்பட்டவை.அன்னார் இந்த நான்கு புத்தகங்களை மட்டுமே எழுதியிருந்தாலும் ,அவை மட்டும் அன்னாரது இஸ்லாமிய ஆளுமையை பறைசாற்ற போதுமானது.
இதில் இல்முல் கலாமுடைய புத்தகமான " மி்ஸ்பாஹ் அல்துஜா" - ( மீர் ஜாஹித் எழுதிய "ரிஸாலா குத்பியா நூலின் விளக்கவுரை) .
அன்னாரது மற்றுமிரண்டு புகழ்பெற்ற கலாமுடைய நூற்கள் " ஹவாஷி அல் கியாலிய்யா ஷரஹ் அல் அகாயித் " மற்றும் " ஷரஹ் அகாயித் அல் நசபிய்யா" ஆகியவற்றின் மீதான அன்னாரின் விளக்கவுரைகள்.
தமது 38 வது வயதில் ரபீயுல் அவ்வல் ,ஹிஜ்ரி 1304ல் மரணத்தை தழுவினார்கள்.
இஸ்லாமிய ஆளுமையான அல்லாமா அப்துல் ஹய் லக்னவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள், பரேலியுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர், ஆனால் பரேலவி, தேவ்பந்தி, வஹாபி, கைர் முகல்லித் ஆகிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவருடைய ஃபதாவாக்களில் இவ்வாறு எழுதியுள்ளார்கள்:
அதாவது, இந்த உண்மை (மீலாது ஷரீஃப்) நபிகள் நாயகம் ﷺ மற்றும் சஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) காலத்தில் இருந்தது, இருப்பினும் இந்தப் பெயர் இல்லை. ஹதீஸ் வல்லுநர்களுக்கு இது மறைவாக இருக்காது, சஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) அறிவுரை மற்றும் கல்வி மஜ்லிஸ்களில் நபிகளின் பெருமைகளையும், அஹ்மது நபி ﷺ பிறப்பின் தன்மையையும் குறிப்பிட்டார்கள்.
[ 📕 மஜ்மூஆத்துல் ஃபதாவா, அல்லாமா அப்துல் ஹய் லக்னவி (رَحِمَهُ ٱللَّٰهُ), தொகுதி 1, பக்கம் 60]
இதன் மூலம், மீலாது மஜ்லிஸ் நபிகளின் காலத்தில் மட்டுமல்ல, சஹாபாக்களின் காலத்திலும் இருந்தது என்பது தெரியவருகிறது.
No comments:
Post a Comment