Monday, 29 September 2025

தப்தீழி


தஃப்திழிகள் 

இமாமே ரப்பானி முஜத்திதே அல்பதானி அஹ்மத் சிர்ஹிந்தி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகிறார்கள் :

“ஞானத்தின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா  அலி رضي الله عنه  அவர்கள்,  ஸித்தீகுல் அக்பர் அமீருல் முஃமினீன்  ஸெய்யிதினா  அபூபக்கர்  சித்தீக் رضي الله عنه  அவர்களை விட அந்தஸ்த்தில்  உயர்ந்தவர் என்று கூறுபவர் அஹ்லுஸ்-சுன்னத் வல் ஜமாத்தில் இருந்து  வெளியேற்றப்படுவார்.

பின்னர், தன்னை உயர்ந்தவராகக் கருதுபவனின் நிலை என்னவாக இருக்கும்? மேலும், இந்தக் குழுவில் (அதாவது சூஃபியாக்களில்) ஒரு ஸாலிக்  தன்னை ஒரு தாழ்ந்த நாயை விட உயர்ந்தவராகக் கருதினால், அவர் இந்த ஆன்மீக ஆசான்களின்  பரிபூரணங்களிலிருந்து வஞ்சிக்கப்படுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நபிமார்களுக்கு (அலைஹிமுஸ்-ஸலவாத் வத்-தஸ்லீமாத்) பிறகு,அமீருல் முஃமினீன் ஸித்தீகுல் அக்பர்  ஸெய்யிதினா ஹழ்ரத்  அபூபக்கர்  رضي الله عنه அவர்கள் அனைவரையும் விட அந்தஸ்த்தில்  உயர்ந்தவர்கள் என்ற உண்மையின் மீது ஸலபுஸ் ஸாலிஹீன்களின் ஒருமித்த கருத்து (இஜ்மா) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒருமித்த கருத்தை எதிர்ப்பவன் ஒரு முட்டாள் ( அஹ்மக்) ஆவான்.

- மக்தூபாத் இமாம் ரப்பானி, பாகம்  1, பக்கம் 202.



Monday, 15 September 2025

முஹத்திஸீன்களின் மவ்லித்

9ஆம் நூற்றாண்டின் முஜத்தித் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رضي الله عنه அவர்கள் மவ்லிதுந்நபி குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்கள், 


أن أصل عمل المولد الذي هو اجتماع الناس وقراءة ما تيسر من القرآن ورواية الأخبار الواردة في مبدأ أمر النبي صلى الله عليه وسلم وما وقع في مولده من الآيات ثم يمد لهم سماط يأكلونه وينصرفون من غير زيادة على ذلك هو من البدع الحسنة التي يثاب عليها صاحبها لما فيه من تعظيم قدر النبي صلى الله عليه وسلم وإظهار الفرح والاستبشار بمولده الشريف

" மவ்லித் யதார்த்தம்  என்னவென்றால், மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி, தங்களுக்கு எளிதான அளவில் குர்ஆனை ஓதுகிறார்கள், மேலும் அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிய அறிவிப்புகளையும் , அவர்களின் பிறப்பின் போது நிகழ்ந்த அடையாளங்களையும் விவாதிக்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது, மேலும் அவர்கள் இந்த "பித்அத் ஹசனா"வுக்கு வேறு எதையும் சேர்க்காமல் திரும்பிச் செல்கிறார்கள். இதை ஏற்பாடு செய்பவர், பூமான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை மதித்து, அவர்களின் பிறப்புக்கு நன்றி செலுத்துவதற்காக தவாப் (நற்பலன்) பெறுகிறார். 


[ 📕 இமாம் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ , அல் ஹாவி லில் ஃபதாவி, தொகுதி 1, பக்கம் 292, மக்தபா அல் அஸ்ரிய்யா, பெய்ரூத், லெபனான் வெளியீடு]

Friday, 12 September 2025

முஹத்திஸீன்களின் மவ்லித்

🌹 முஹத்திஸீன்களின் மவ்லித் 🌹

முஹத்திஸே ஹரமைன் இமாம் ஷெய்கு ஸெய்யது  முஹம்மது பின் அலவி அல் மாலிகி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு  1426) அவர்கள் சமீபகாலத்தில் இஸ்லாமிய உம்மத்தின் பெரும் அறிஞராக அறியப்பட்டவர்கள்.


எம்பெருமானார்  ﷺ அவர்களது திருப்பேரர் சுவனத்து இளைஞர்களின் தலைவர் ஸெய்யிதினா ஹஸன் رضي الله عنه  அவர்களது பாரம்பரித்தில் வந்தவர்கள்.

அன்னவர்களது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக மக்கா முகர்ரமாவில் மாலிகி மத்ஹபின் இமாமாக மக்களுக்கு பணிபுரிந்தனர்.

இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பாட்டனார் ஸெய்யது அப்பாஸ் அலவி அல்மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மக்கா முகர்ரமாவின் முப்தி மற்று காழீயாகவும்,இமாமாகவும்,கதீபாகவும் மார்க்கப் பணியாற்றினார்கள்.

அன்னார் இப்பணிகளை உஸ்மானிய கிலாபத்தின் போதும்,பின்னர் ஹாஷிமியாக்களது ஆட்சியலும்,அதன் பின்னர் இன்று 200 வருடங்கள் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட நவீன சவூது ஆட்சியிலும் தொடர்ந்தனர். அன்றைய மன்னர் அப்துல் அஜீஸ் பின் சவூது இவர்பால் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.

இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது ,தகப்பனார் ஸெய்யது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நாற்பதாண்டு காலம் மக்கா முகர்ரமாவில் பல்வேறு இஸ்லாமிய உலூம்களை கற்பித்துக் கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

தமது தகப்பனாரிடம் இஸ்லாமிய கல்வியை கற்ற இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,தமது 15 வது வயதில் ஹதீஸ் மற்றும் பிக்ஹ் உடைய கல்வியை ஹரம்ஷரீபில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஆரம்பகால கல்வியை கற்ற பின்னர்,தமது 25 வது வயதில் உலகப் புகழ்பெற்ற ' அல் அஸ்கர்' பல்கலைக்கழகத்தில்  முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சியானார்கள்.

இஸ்லாமிய உலகெங்கும் பயணித்து மக்ரிப் முதல் மஷ்ரிக் வரை மார்க்கக் கல்வியை பல்வேறு உலமாக்களிடம் கற்றார்கள்.

மவ்லிதுந்நபி  ﷺ ஏன் கொண்டாடுகிறீர்கள் ? ,மற்றும் இன்னபிற ஆட்சேபனைகளுக்கு இரத்தின சுருக்கமாக பின்வருமாறு தமது மவ்லிது குறித்து நூலில் பதிலுரைத்தார்கள்,



"  நான் மவ்லிதுந்நபி  கொண்டாடுகின்றேன் ஏனெனில் நபி  ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன், நான் நபி  ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன் ஏனெனில் நான் நபி  ﷺ அவர்களை நேசிக்கின்றேன், நான் நபி  ﷺ அவர்களை நேசிக்கின்றேன் ஏனெனில் நான் ஒரு முஃமின் "

📕 ஹவ்ல் அல்இக்திபால் பீ திக்ரி மவ்லித் அல்நபி அஷ்ஷரீப்,இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ


Wednesday, 10 September 2025

லைலத்துல் கத்ர் இரவை விட சிறந்த மவ்லிதுந்நபி இரவு !

இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது சமகாலத்தவரும்,ஸஹீஹ் புஹாரியின் புகழ்பெற்ற விளக்கவுரையான " இர்ஷாத் அல்சாரி பீ ஷரஹுல் புஹாரி" யின் எழுத்தாளருமான மிஸ்ர் நாட்டைச் சார்ந்த இமாம் ஷஹாபுத்தீன் அபுல் அப்பாஸ் கஸ்த்தலானி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள்( மறைவு 924 ஹிஜ்ரி)  தமது உலகப் புகழ்பெற்ற நூலான அல்மவாஹிபுல்லதுனியாவில் 
எழுதுகின்றார்கள்,

எம்பெருமான் முஹம்மது நபி  ﷺ அவர்களின் பிறந்த இரவு மூன்று காரணங்களால் உயர்ந்தது:

முதல் காரணம்:
மவ்லித் இரவில் அண்ணல்  நபி  ﷺ  அவர்கள் இவ்வுலகிற்கு வந்தார்கள், அதேசமயம் லைலத்துல் கத்ர் (விதியின் இரவு) அவர்களது பிறந்த பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே, அண்ணல் நபி  ﷺ அவர்களின் வருகை, அவர்களுக்கு வழங்கப்பட்டவற்றை விட உயர்ந்தது. ஆகவே, மவ்லித் இரவு மிகவும் புண்ணியமானது.

இரண்டாவது காரணம்

லைலத்துல் கத்ர் இரவு புண்ணியமானது, ஏனெனில் அந்த இரவில் மலக்குகள் (வானவர்கள்) இறங்குகின்றனர். ஆனால், மவ்லித் இரவில் பூமான் நபி  ﷺ அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்கள். ஸெய்யிதுல் அன்பியா பூமான் நபி  ﷺ அவர்கள் மலக்குகளை விட உயர்ந்தவர்கள். எனவே, மவ்லித் இரவு மிகவும் உயர்ந்தது.

மூன்றாவது காரணம்:
லைலத்துல் கத்ர் இரவு மூலம் எம்பெருமானார் முஹம்மது  ﷺ  அவர்களின் உம்மத்திற்கு மேன்மை வழங்கப்பட்டது. ஆனால், மவ்லித் இரவு மூலம் அனைத்து படைப்புகளுக்கும் பாக்கியம் வழங்கப்பட்டது, ஏனெனில் காத்தமுந்நபியான முஹம்மது ரஸுல்  ﷺ அவர்கள் உலகங்களுக்கு ரஹ்மத்தாக (கருணையாக)- ரஹ்மதுல்ஆலமீனாக  அனுப்பப்பட்டார்கள் (குர்ஆன் 21:107). ஆகவே, இந்த ரஹ்மத்  அனைத்து படைப்புகளுக்கும் பொதுவானதாக ஆனது.

📕 ஆதார நூல் : இமாம் கஸ்தல்லானி (رَحِمَهُ ٱللَّٰهُ) அல்-மவாஹிப் அல்-லதுனிய்யா, தொகுதி 1, பக்கம் 145. மேலும், இமாம் ஸர்கானி (رَحِمَهُ ٱللَّٰهُ) அவர்களின் ஷரஹு அல்-முவாஹிப் லுதுன்னியா, தொகுதி 1, பக்கங்கள் 255-256-ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இமாம் கஸ்தல்லானி (رَحِمَهُ ٱللَّٰهُ) மேலும் கூறினார்கள. : 
"நபியவர்களின் பிறந்த மாதத்தின் இரவுகளை கொண்டாட்டமாக மாற்றுபவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! இதன் மூலம், இதயத்தின்  நோய் மற்றும் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் குறையும்." [அல்-மவாஹிப், தொகுதி 1, பக்கம் 148]

Monday, 8 September 2025

மவ்லிதுந்நபி குறித்து ஹாபிழ் இப்னு கதீர் ‎رَحِمَهُ ٱللَّٰهُ‏


மவ்லிதுந்நபியின் இன்றைய கொண்டாட்ட நடைமுறை பாத்திமி ஷியாக்களுடையது என்றும், பைத்துல் முகத்தஸை வென்றெடுத்த சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அஷ்அரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மைத்துனர் ஷாஹ் மலிக்குல் முஸப்பர் குறித்தும் வஹாபிகள் மோசடியான திரிக்கப்பட்ட கருத்துகளை - அம்மன்னர் பாஸிக்காகவும்(பாவி),கொடுங்கோலன் என்றும்,பித்அத்தி என்றும் வாய் கூசாமல் அல்லாஹ்,ரஸுலுக்கு அஞ்சாமல் பொய் பரப்புகின்றனர்.

வஹாபிகள் ஏற்றுக் கொள்ளும் இமாம் ஹாபிழ் இப்னு கதீர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,மன்னர் ஷாஹ் மலிக்குல் முஸப்பர் பற்றி பின்வருமாறு தமது நூலில் எழுதுகின்றனர், 


أحد الاجواد والسادات الكبراء والملوك الامجاد له آثار حسنة وقد عمر الجامع المظفري بسفح قاسيون وكان قدهم بسياقه الماء إليه من ماء بذيرة فمنعه المعظم من ذلك واعتل بأنه قد يمر على مقابر المسلمين بالسفوح وكان يعمل المولد الشريف في ربيع الاول ويحتفل به احتفالا هائلا وكان مع ذلك شهما شجاعا فاتكا بطلا عاقلا عالما عادلا رحمه الله وأكرم مثواه وقد صنف الشيخ أبو الخطاب ابن دحية له مجلدا في المولد النبوي سماه التنوير في مولد البشير النذير فأجازه على ذلك بألف دينار وقد طالت مدته في الملك في زمان الدولة الصلاحية وقد كان محاصر عكا وإلى هذه السنة محمودالسيرة والسريرة قال السبط حكى بعض من حضر سماط المظفر في بعض الموالد كان يمد في ذلك السماط خمسة آلاف راس مشوى وعشرة آلاف دجاجة ومائة ألف زبدية وثلاثين ألف صحن حلوى


அவர் அளவற்ற ஈகைபுரிபவர், வல்லமைமிக்க எஜமானர், மற்றும் புகழ்பெற்ற ஆட்சியாளர்; அவரது செயல்கள் மிகவும் சிறப்பானவை. அவர் காசியூன் அருகில் ஜமியா அல் முழஃபரி என்னும் அரபுக் கல்லூரியைக்  கட்டினார். ரபிஉல் அவ்வல் மாதத்தில் அவர் மவ்லித் அஷ் ஷரீஃபை (يعمل المولد الشريف في ربيع الاول) பெரிய கொண்டாட்டத்துடன் நடத்துவது வழக்கம். மேலும், அவர் அன்புள்ளவர், தைரியமானவர், ஞானமுள்ளவர், அறிஞர், மற்றும் நீதியுள்ள நபர் . அன்று வாழ்ந்து வந்த புகழ்பெற்ற மார்க்க அறிஞரான ஷெய்கு அபுல் கத்தாப் (رَحِمَهُ ٱللَّٰهُ )  மன்னரின் வேண்டுகோளை ஏற்று  மவ்லித் அந் நப்வி பற்றிய ஒரு நூலை எழுதினார், அதன் பெயர் “அல்-தன்விர் ஃபி மவ்லித் அல் பாஷிர் அல் நஸீர்”, அதற்காக மலிக்குல் முஸப்பர் அவருக்கு 1000 தினார்கள் வழங்கினார். அவரது ஆட்சி சலாஹியா ஆட்சி வரை நீடித்தது, அவர் அகா நகரை  கைப்பற்றினார், மற்றும் அவர் மரியாதைக்குரிய நபராக இருந்தார்.

அல்-சப்த் என்பார் கூறுகிறார், முஸப்ஃபர் நடத்திய மவ்லித் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் அங்கு மன்னரின் விருந்தோம்பலை விவரிக்கையில் : மன்னர் மலிக்குல் முஸப்பர்  5000 நன்கு வேகவைக்கப்பட்ட ஆடுகளை, 10,000 கோழிகளை, 100,000 பால்கிண்ணங்களை (பால்) மற்றும் 30,000 மிட்டாய் தட்டுகளை (இனிப்புகள்) மேசையில் நிரப்புவது வழக்கம் என்று கூறினார்.

[ நூல் : தாரீக் இப்னு கதீர், அல் பிதாயா வந்நிஹாயா,பாகம் 13,பக்கம் 174 ] 




Related Posts Plugin for WordPress, Blogger...