Friday, 21 November 2025

பூமான்   ‎நபி ‎அவர்களை ‎நிந்தனை ‎செய்ததற்கான ‎தீர்ப்பு



  இஸ்லாமிய கிலாபத்தில் பூமான் நபி  ﷺ அவர்களை நிந்தனை செய்ததற்கான மார்க்கத் தீர்ப்பு : 

பிரசித்திபெற்ற முஃபஸ்ஸிர் ஹழ்ரத் ஷெய்கு இஸ்மாயில் ஹக்கீ رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள், சூரா அபஸா-வின் முதல் ஆயத்தின் தஃப்ஸீரில் எழுதுகிறார்கள்:

பாரூக்குல் அஃலம் அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه  அவர்களின் கிலாஃபத்தில் , ஒரு முனாஃபிக் மஸ்ஜித் இமாம் ஒரு பழக்கம் வைத்திருந்தான். அவன் பெரும்பாலும் ஃபஜ்ர் தொழுகையில் சூரா அபஸா (சூரத் அபஸா வ தவல்லா) ஓதுவான்.

 இதன் மூலம் அவன் உள்ளத்தில் இப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்திக் கொள்வான்: “இந்த சூரா அல்லாஹ் தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கண்டிப்புச் செய்த சூராவாகும்” (மஆஸல்லாஹ்).

இந்த விஷயம் ஹஸ்ரத் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களுக்கு தெரிய வந்தபோது – முனாஃபிக்குகளில் ஒருவன் தன் சமூகத்திற்கு இமாமத்து செய்து, ஜமாஅத்துடன் தொழுகையில் எப்போதும் சூரா அபஸா ஓதி வருகிறான் என்று – உடனே அவனை அழைத்து வரச் செய்தார்கள். 

மேலும் எந்த விசாரணையும் செய்யாமல், அந்த அல்லாஹ்வின் ஹபீபை அன்றாடம் நிந்தனை செய்வதை தமது கடமையாகவே வைத்திருந்த இமாமின் கழுத்தை துண்டித்தார்கள்.

**குறிப்பு :**  
வெளிப்பார்வைக்கு அவன் குர்ஆனைத்தான் ஓதினான். ஆனால் ஆயத்தின் தவறான அர்த்தத்தை எடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்ணியத்தை தாழ்த்தும் நோக்கத்துடன் செய்தான். அதனால் அவனுக்கு இந்த முடிவு ஏற்பட்டது. அவனுடைய குர்ஆன் ஓதுதலும், மஸ்ஜித் இமாமாக இருந்ததும் எதுவும் உதவவில்லை. ஏனெனில் அவன் ஈருலகின் இரட்சர் அண்ணல் நபி   ﷺ அவர்களை அவமரியாதை செய்தவன் ஆவான்.

ஆதார நூல் 
தஃப்ஸீர் ரூஹுல் பயான்  
பாகம் 10, பக்கம் 336

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...