Saturday, 8 November 2025

பூமான் நபி ‎ﷺ ‏அவர்களது கன்னிப் பேச்சு

🌹 பூமான் நபி  ﷺ அவர்களது கன்னிப் பேச்சு 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஃபத்ஹுல் பாரீ ஷர்ஹு ஸஹீஹில் புகாரியிலும், இமாம் அல்வாஃகிதீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது ஸீராவிலும் குறிப்பிடுகிறார்கள்:

“அல்லாஹ்வின் நபி ﷺ பிறந்த உடனேயே தொட்டிலில் பேசினார்கள்.”

இமாம் இப்னு ஸபா رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் தமது கஸாயிஸில் குறிப்பிடுகிறார்கள்:

“கண்மணி நாயகம் ﷺ அவர்களின்  தொட்டில் மலக்குகளின் அசைவோடு அசைந்து கொண்டிருக்கும்.”

அல்லாஹ்வின் ஹபீப்  ﷺ   அவர்கள் பால் கழித்தவுடன் முதல் முறையாக உச்சரித்த திக்ர் ! 

இமாம் பைஹஃகீ رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நாயகத் தோழர் ஸெய்யிதுனா இப்னு அப்பாஸ் رضي الله عنه வழியாக அறிவிக்கிறார்கள்:

அன்னை ஸய்யிதா ஹலீமா رضی الله عنها அவர்கள் கூறினார்கள்:

 “நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுக்கு முதல் முறையாக பால் கழித்த போது, அவர்கள் பேச ஆரம்பித்து இவ்வாறு கூறினார்கள்:

 **‘அல்லாஹு அக்பர் கபீரா’**  
(அல்லாஹ் மிகப் பெரியவன், மகத்தான பெரியவன்)  
**‘வல்ஹம்து லில்லாஹி கஸீரா’**  
(அல்லாஹ்வுக்கே மிகுதியான புகழ் அனைத்தும்)  
 **‘வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதன் வ அஸீலா’**  
 (காலையிலும் மாலையிலும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்).

இந்த வார்த்தைகளால் அவர்கள் பேசினார்கள். அவர்கள் வளர்ந்து கொண்டே வந்த போது, வெளியே சென்று குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பார்கள், ஆனால் அவர்களை விட்டு விலகியே இருப்பார்கள்.”

[ஆதார நூல் 📕 இமாம் கஸ்த்தலானி رَحِمَهُ ٱللَّٰهُ,  அல்-மவாஹிபுல் லதுனிய்யா, தொகுதி 1, பக்கம் 81]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...