Sunday, 25 January 2026

ஷஃபான் - ஷபே பராஅத்

🌹 புண்ணியமிகு ஷஃபான் 🌹

நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா உசாமா பின் ஸைத் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:  

நான் அல்லாஹ்வின் ஹபீப்  ﷺ அவர்களிடம் நவின்றேன் , 

" யா ரசூலல்லாஹ் ﷺ ! நீங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதைப் போல, வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நான் பார்ப்பதில்லை.  

அதற்கு அண்ணல் நபி ﷺ கூறினார்கள்: "ரஜப் மற்றும் ரமழான் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு மாதம் உள்ளது. மக்கள் அதைப் பற்றி கவனமற்றவர்களாக இருக்கின்றார்கள்.  அந்த மாதத்தில் மக்களின் அமல்கள்  அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் உயர்த்தப்படுகின்றன. எனவே, எனது அமல்கள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்படுவது எனக்கு மிகவும் பிடித்தமானது."  

ஆதார நூல் 📕 ஸுனன் நஸாஈ, பக்கம் 267, கிதாபுஸ் ஸவ்ம், பாப் 70: நபியவர்களின் நோன்பு நோற்பது பற்றிய விளக்கம், ஹதீஸ் எண்: 2358  

ஆதாரமாக சமர்பித்துள்ள ஹதீஸ் நூலின் தஹ்கீக் செய்தவர் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கையுடைய நவீன கால வஹாபிகளின் இமாம் நஸீருத்தீன் அல்பானி .

மேலே உள்ள ஹதீதில் ஷஃபான் மாதம் நமது அமல்கள் அல்லாஹ்  سبحانه و تعالى அளவில் உயர்த்தப்படுகின்றன என்பது நபிமொழி மூலம் அறிகின்றோம்.

இனி எந்த நாளில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன குறித்தும் ஹதீதுகளில் வந்துள்ளன.

Tuesday, 20 January 2026

மிஃராஜ்

பெருமானார்  ﷺ அவர்களது மிஃராஜ் பயணத்தின் பொழுது ஸெய்யிதுல் அன்பியாவாக  நபிமார்களுக்கு இமாமத் செய்து தொழ வைத்தல் .

இமாம் குர்துபி (மறைவு  671 ஹிஜ்ரி) எழுதியுள்ளார்கள்:

அல்லாஹ்வின் ஹபீப் நபி கரீம் ﷺ அவர்களின் பின்னால் அனைத்து நபிமார்களும்  عليه السلام அவர்களும் ஏழு  வரிசைகளில்  நின்றிருந்தார்கள். 3 வரிசைகள் ரசூல்களுடையது, 4 வரிசைகள் நபிமார்களுடையது.

நபி கரீம் ﷺ அவர்களின் முதுகுக்கு நேராக  ஸெய்யிதினா இப்ராஹீம் நபி عليه السلام அவர்கள் இருந்தார்கள். வலது பக்கத்தில் ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلام அவர்களும், இடது பக்கத்தில் ஸெய்யிதினா இஸ்ஹாக் عليه السلام அவர்களும் இருந்தார்கள். பின்னர் ஸெய்யிதினா மூஸா عليه السلام அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் மற்ற ரசூல்கள் இருந்தார்கள்.

ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் இரண்டு ரக்அத்  தொழுதார்கள். தொழுகை முடிந்த பிறகு ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்: என் ரப் எனக்கு வஹீ அருளினான் – “நபிமார்களிடம்   நான் கேட்க வேண்டும்: உங்களில் யாராவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையாவது இபாதத் செய்யும்படி அழைத்த ரசூல் அனுப்பப்பட்டார்களா?” என்று.

அப்போது இறைத்தூதர்கள்  கூறினார்கள்: யா ரசூலல்லாஹ் ﷺ! நாங்கள் சாட்சியம் கூறுகிறோம் – நாங்கள் அனைவரும் ஒரே தாவத்துடன் (அழைப்புடன்) அனுப்பப்பட்டோம். அது لا إله إلا الله (லா இலாஹ இல்லல்லாஹ்) ஆகும்.

அல்லாஹ் ﷻ இன் தாத்தை தவிர வேறு யாரையும் இபாதத் செய்வது அனைத்தும் பொய்யானது. நீங்கள் ﷺ காத்தமுல்-நபிய்யீன் (நபிமார்களின் முத்திரை) ஆவீர்கள், ஸெய்யிதுல்-முர்சலீன் (ரசூல்களின் தலைவர்) ஆவீர்கள். நீங்கள் ﷺ எங்களுக்கு இமாமத் செய்தீர்கள் – இதன் மூலம் எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது, உங்களுக்குப்  பிறகு கியாமத் வரை வேறு எந்த நபியும் இல்லை.

மேலும் ஸெய்யிதினா ஈஸா عليه السلام அவர்களுக்கு உத்தரவு செய்யப்பட்டது: அவர்கள் உலகிற்கு மீண்டும் வரும் பொழுது  , நபி கரீம் ﷺ அவர்களின் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

முடிவுரை 
இதிலிருந்து தெரிய வருகிறது: அனைத்து நபிமார்களும், ரசூல்களும்  ஜீவனுடன் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உதாரணமாக, பாலஸ்தீனத்தில் உள்ள மஸ்ஜிதுல்-அக்ஸாவில் அனைத்து நபிமார்களும் மிஃராஜ் தினத்தன்று  ஒன்று கூடினார்கள், அனைவரும் பேசினார்கள், அல்லாஹ்வின் ஹபீப் ﷺ அவர்களின் பின்னால்  தொழுதார்கள்.

ஆதார  நூல்  📕 அல்-ஜாமி லி அஹ்காமில் குர்ஆன் லில் குர்துபி,  பாகம்  19, பக்கம் 70


Sunday, 11 January 2026

ஹயாத்துல் அன்பியா

🌹 ஹயாத்துல் அன்பியா 🌹

 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதியுள்ளார்கள்:  

وَالْأَنْبِيَاءُ عَلَيْهِمُ السَّلَامُ بَعْدَمَا قُبِضُوا رُدَّتْ إِلَيْهِمْ أَرْوَاحُهُمْ فَهُمْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ كَالشُّهَدَاءِ  

"நபிமார்கள் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்களின் ரூஹ் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படுகின்றன. ஆகவே அவர்கள் தங்கள் இறைவனிடம் ஷுஹதாக்களைப் போல உயிரோடு இருக்கின்றனர்."  
(ஆதார நூல் 📕 அல்-இஃதிகாத் லில்-பைஹகீ, பக்கம் 415)  

 இங்கு இமாம் பைஹகீ தெளிவுபடுத்துவது என்னவென்றால், நபிமார்களின் உயிரோடு இருப்பதை சாதாரண மக்கள் பர்ஸக் வாழ்வில் இருப்பது போல புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, அவர்களின் ரூஹ் அவர்களின் உடலுக்கு  திருப்பி அளிக்கப்படுகிறது.   

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த்  ஷாஹ் அப்துல் ஹக் முஹதீஸ் தெஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாமாகக் கருதப்படுபவர்கள், இவ்வாறு எழுதியுள்ளார்கள்:  

"நிச்சயமாக நபிமார்கள் உயிரோடு இருக்கின்றனர். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்களின் வாழ்வு உலக வாழ்வைப் போன்ற உடல் சார்ந்த (ஜிஸ்மானி) வாழ்வாகும்; ஷுஹதாக்களைப் போன்ற  ரூஹானி வாழ்வு அல்ல."  

[ஆதார நூல் 📕  அஷ்இஆத்துல்-லம்ஆத் – தொகுதி 1, பக்கம் 574]  

இந்த விளக்கம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நம்பிக்கையை தெளிவாக விளக்குகிறது.

Thursday, 8 January 2026

இக்லாஸ் இல்லாதவர்


இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:

“ ஸெய்யிதினா இப்ராஹீம் பின் அத்ஹம் رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் கூறினார்கள்:  

‘யார் புகழை விரும்புகிறாரோ, அவர் அல்லாஹ்விடம் உண்மையான நேர்மையுடன் (இக்லாஸ் கொண்டு) இருக்கவில்லை.’”  

[ ஆதார நூல் 📕 தஃப்தீல் அல்-ஃபக்ர் - அல்-காதி அபீ யஃலா தொகுப்பிலிருந்து]

Monday, 5 January 2026

துஆ கேட்பதன் அதபு

🌹 துஆ கேட்பதன் அதபு 🌹

இமாம் அபுல் கைர்  ஷம்ஷுத்தீன் அல் ஜசரீ அஷ்ஷாபிஈ அஷ்அரீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் (மறைவு 833 ஹிஜ்ரி) தமது உலகப் புகழ்பெற்ற 'ஹிஸ்னுல் ஹஸீன்' நூலில் எழுதுகின்றார்கள் ,

துஆக்களின் அதபு குறித்த பாடத்தில் எழுதுகின்றார்கள் ,

وأن يتوسل إلى الله تعالى بأنبيائه والصالحين من عباده 

ஒவ்வொரு மனிதனும் துஆவில் நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களது வஸீலாவாக்கி ( இடைபொருளாக்கி) துஆ கேட்க வேண்டும் .
 

ஆதார நூல் 📕 அல் ஹிஸ்னுல் ஹஸீன் மின் கலாம் ஸெய்யதில் முர்ஸலீன் ,பக்கம் 25 மற்றும் 148
Related Posts Plugin for WordPress, Blogger...