🌹 அகிலங்களின் அருட்கொடை ! 🌹
நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா ஜாபிர் இப்னு ஸபூரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள், பூமான் நபி ﷺ அவர்கள் நவின்றார்கள்,
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، حَدَّثَنِي سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنِّي لأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَىَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لأَعْرِفُهُ الآنَ " .
" நான் மக்காவில் உள்ள ஓர் கல்லை அறிவேன். அந்த கல்லாகிறது நுபுவ்வத்திற்கு முன்பிருந்தே எனக்கு ஸலாம் உரைத்தது. நான் இன்றும் அதனை அடையாளம் காண இயலும் "
ஆதார நூல் 📕 ஸஹீஹ் முஸ்லிம் ,ஹதீஸ் எண்:2277
அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
حَدَّثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ أَبِي ثَوْرٍ، عَنِ السُّدِّيِّ، عَنْ عَبَّادِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَكَّةَ فَخَرَجْنَا فِي بَعْضِ نَوَاحِيهَا فَمَا اسْتَقْبَلَهُ جَبَلٌ وَلاَ شَجَرٌ إِلاَّ وَهُوَ يَقُولُ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ .
" நான் அண்ணல் நபி ﷺ அவர்களுடன் மக்கா முகர்ரமாவில் இருந்தேன். நாங்கள் சில பகுதிகளுக்குச் சென்றோம்; அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்களைச் சந்தித்த ஒவ்வொரு மலையும்,மரமும், "அஸ்ஸலாமு அலைக்கும் ,யா ரஸூல்லல்லாஹ் ! - அல்லாஹ்வின் தூதரே, உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று கூறின.
ஆதார நூல் 📕 ஜாமியுத் திர்மிதி, ஹதீஸ் எண் : 3626
உயிரற்ற கல்லும் ,மரங்களும் ,மலைகளும் அல்லாஹ்வின் ரஸூல் ﷺ மீது அளவற்ற நேசம் கொண்டிருந்தன என்பது ஹதீஸ்களில் இருந்து தெரிய வருகின்றது .
No comments:
Post a Comment