Thursday, 17 September 2026

கியார்வி,பாத்திஹா ஹாஜி இம்தாதுல்லாஹ் ஸாஹிப்

  கியார்வீ, நியாஸ், தோஷா, 10ஆம் நாள், 20ஆம் நாள், ஹல்வா, உரூஸ் — இவை குறித்து  ஹாஜி சாஹிபின் ஃபத்வா!

அனைத்து தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத்தினராலும் தமது ஷெய்காக கருதப்படும்
ஹழ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ رحمه الله அவர்கள், 1317 ஹிஜ்ரியில் எழுதுகிறார்கள்:

“இது வெறும் வெளிப்படையான, நடைமுறையில் வழக்கத்தில் உள்ள ஈஸாலே ஸவாப் முறையாகும்; இது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் மட்டும் உரியதல்ல.

கியார்வீ ஷரீஃப் — ஹஸ்ரத் ஃகௌஸே பாக் காதிர் رضي الله عنه அவர்களுக்காக நடத்தப்படுவது,

10ஆம் நாள், 20ஆம் நாள், செஹ்லும், ஷஷ்மாஹி, ஸாலானா (உரூஸ்) போன்றவை,

தோஷா — ஹஸ்ரத் ஷெய்கு அஹ்மத் அப்துல் ஹக் ருதௌல்வீ رحمه الله (837 ஹிஜ்ரி) அவர்களுக்காக நடத்தப்படுவது,

சே மனீ (நியாஸ்) — ஹஸ்ரத் ஷெய்கு பூ அலீ ஷாஹ் கலந்தர் رحمه الله (724 ஹிஜ்ரி) அவர்களுக்காக நடத்தப்படுவது,

மேலும் ஷபே பராஅத் ஹல்வா மற்றும் ஈஸாலே ஸவாப் செய்வதற்கான பிற வழிமுறைகளும் இதே அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

இந்த விஷயத்தில் ஃபகீரின் அணுகுமுறை என்னவென்றால், ஃபகீர் இந்த வெளிப்படையான நடைமுறையைப் பின்பற்றுபவர் அல்ல. ஆனால் இதைச் செய்பவர்களை அவர் மறுப்பதில்லை.”

ஆதார நூல்:ஃபைஸலா ஹஃப்த் மஸ்அலா,தொகுதி 1, பக்கம் 31



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...