Tuesday, 1 September 2026

மீலாதுந்நபி

🌹 மவ்லிதுந் நபி  ﷺ 🌹

  இமாம் இப்னு கஸீர்
(பிறப்பு: கி.பி. 1031 – மறைவு: கி.பி. 1372)
அவர்கள் எழுதுகிறார்கள்:

“மீலாத் ஷரீஃப் பல்வேறு மார்க்க நலன்களையும் பயன்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அமலாகும். இதன் காரணமாகவே உலமாக்கள் இதனை முஸ்தஹப் (மிகவும் சிறப்பான நற்செயல்) என்று தீர்ப்பளித்துள்ளனர்.”

1⃣ மீலாத் ஷரீஃபின் மஜ்லிஸ்கள், ரஸூலுல்லாஹ் ﷺ அவர்களின் கண்ணியம் மற்றும் கௌரவத்தை வெளிப்படுத்துகின்றன.

2⃣ ஏந்தல் நபி ﷺ அவர்களின் சுன்னத் மற்றும் சீரத் பற்றிய அறிவைப் பெறுவதற்கான ஒரு வழியாகும்.

3⃣ ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள்மீது கொண்ட அன்பில் ஆர்வத்தையும், உள்ளார்ந்த நேசத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

4⃣ அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வழியாகும்.

5⃣ தப்லீக், தஃவத் மற்றும் சமூகச் சீர்திருத்தத்திற்கான ஒரு தளமாகும்.

6⃣ மார்க்க உணர்வுகள் வளர்ச்சியடைவதற்குக் காரணமாக அமைகிறது.

7⃣ ஸதகா மற்றும் தர்மங்களின் மூலம் ஏழைகள் மற்றும் தேவையுடையவர்களுக்கு உதவுவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

இந்த அனைத்து செயல்களும் ஷரீஅத்தில் விரும்பத்தக்கவையாகும்.

📚 மீலாத் இப்னு கஸீர், பக்கம் 11–12

இமாம் ஹாபிழ் இப்னு கஸீர் رَحِمَهُ ٱللَّٰهُ மீலாத் மறுப்பாளர்களான  ஸலபி வஹாபிகளாலும் ,தேவ்பந்திகள்,அஹ்லே ஹதீஸ்,ஜமாத்தே இஸ்லாமி கூட்டத்தாருலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இமாம்.

அவர்கள் மீதும் ஷிர்க்,குப்ர்,பித்அத் பத்வாக்களை இந்த பத்வா வியாபாரிகள் வீசுவார்களா ? நவூதுபில்லாஹ் !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...