Wednesday, 16 September 2026

வலிமார்கள் மீதான நேசம்

🌹 அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதான நேசம் 🌹

ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ ஹுரைரா رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் கூறினார்கள்:

" அல்லாஹ் عزوجل ஒரு அடியாரை நேசித்தால், வானவர் கோன் ஜிப்ரீல் عليه السلام அவர்களை அழைத்து, ‘நான் இன்ன அடியாரை நேசிக்கிறேன்; நீரும் அவரை நேசியுங்கள்’ என்று கூறுகிறான்.

அதன்படி, ஸெய்யிதினா ஜிப்ரீல் عليه السلام அவர்களும் அந்த அடியாரை நேசிக்கத் தொடங்குகிறார்கள். பின்னர் ஜிப்ரீல் عليه السلام அவர்கள் வானவர்களிடையே அறிவிக்கிறார்கள் : ‘நிச்சயமாக அல்லாஹ் عزوجل இன்ன அடியாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்’ .

ஆகவே, வானவர்களும் அந்த அடியாரை நேசிக்கத் தொடங்குகிறார்கள். பின்னர் பூமியில் மக்களின் உள்ளங்களில் அந்த அடியாருக்கு மக்பூலியத் (நல்ல வரவேற்பும் அன்பும்) ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், அல்லாஹ் عزوجل ஒரு அடியாரை வெறுத்தால், ஜிப்ரீல் عليه السلام அவர்களை அழைத்து, ‘நான் இன்ன அடியாரை வெறுக்கிறேன்; நீரும் அவரை வெறுங்கள்’ என்று கூறுகிறான்.

அதன்படி, ஜிப்ரீல் عليه السلام அவர்களும் அந்த அடியாரை வெறுக்கத் தொடங்குகிறார்கள். பின்னர் வானவர்களிடையே அறிவிக்கிறார்கள்: ‘நிச்சயமாக அல்லாஹ் عزوجل இன்ன அடியாரை வெறுக்கிறான்; நீங்களும் அவரை வெறுங்கள்’ என்று.

பின்னர் பூமியில் மக்களின் உள்ளங்களில் அந்த அடியாரின் மீது வெறுப்பு ஏற்படுத்தப்படுகிறது.”

ஆதாரம் 📖 நூல்: ஸஹீஹ் முஸ்லிம்
📚 அத்தியாயம்: கிதாபுல் பிர்ரி வஸ்-ஸிலதி வல்-ஆதாப்
🔢 ஹதீஸ் எண்: 2637
📄 பக்க எண்: 215

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...