🌹 வலிமார்களிடம் வஸீலா 🌹
கடுமையான சிரமத்தில் இருக்கும்போது, அவ்லியாக்களின் ஜியாரத்திற்கு சென்று துஆச் செய்யுங்கள்!
இமாம் ஹாகிம் நைஸாபூரி رحمه الله (ஹிஜ்ரி 405) அவர்கள் கூறுகிறார்கள்:
“நான் கடுமையான சிரமத்திலும் துயரத்திலும் இருந்தபோது, கனவில் அண்ணல் நபி கரீம் ﷺ அவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
அப்போது அண்ணல் நபி ﷺ அவர்கள் என்னிடம் கூறுவது போன்று இருந்தது:
‘யஹ்யா இப்னு யஹ்யா அவர்களின் அடக்கஸ்தலத்திற்குச் செல். அங்கு இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்புத் தேடுதல்) செய். மேலும், அல்லாஹ் தஆலாவிடம் உனது தேவையை நிறைவேற்றித் தருமாறு வேண்டிக்கொள்.’
அறிவிப்பாளர் கூறுகிறார்:
‘நான் அவ்வாறே செய்தேன். அதன் பின்னர் என்னுடைய தேவை நிறைவேறியது.’”
ஆதாரம் 📕 ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி رحمه الله, தஹ்தீபுத் தஹ்தீப் – பாகம் 11, பக்கம் 299.
இமாம் தஹபி رحمه الله
,தாரீகுல் இஸ்லாம் – பாகம் 16, பக்கம் 463.
இமாம் நைஷாபூரிرحمه الله, ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் மீதும் ஷிர்க், குப்ர் பத்வா ( நவூதுபில்லாஹ்) சுமத்துவார்களா பட்டங்களில் பொதி சுமக்கும் கழுதைகளான போலி மார்க்க அறிஞர்கள்.
இவர்களும் பரேல்விகளா ?
ஆக அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை நவீன கால இந்தியாவில் தகர்கப்பட முனைந்த பொழுது அதனை எதிர்த்து சமர் செய்வதவர்கள் ,கொள்கையை காத்தவர்கள் பரேலி உலாமக்கள் என்பது இவர்களது வாக்குமூலம்
No comments:
Post a Comment