🌹 வஸீலா 🌹
ஹாஃபிழ் அபூர் ரபீஃ இப்னு ஸாலிம் رَحِمَهُ اللهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஹழ்ரத் அபூ முஹம்மத் இப்னு உபைதுல்லாஹ் رَحِمَهُ اللهُ அவர்கள் மரணித்த காலத்தில் கடுமையான வறட்சி நிலவியது.
அவர்களுடைய ஜனாஸா நல்லடக்கத்திற்காக மண்ணறையின் அருகில் வைக்கப்பட்டபோது, மக்கள் அவர்களை வஸீலாவாகக் கொண்டு அல்லாஹ் தஆலாவிடம் மழையையும் உதவியையும் வேண்டி துஆச் செய்தனர்.
அதன் விளைவாக, அன்றிரவே அவர்கள் மீது கனமழை பொழிந்தது. தொடர்ந்து ஒரு வார காலம் வரை மக்கள் அவர்களுடைய கப்ரை ஸியாரத் செய்ய வரும்போதெல்லாம், சேற்றிலும் ஈரமான மண்ணிலும் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
ஆதாரங்கள்:
1. இமாம் இப்னுல் அப்பார் (ஹிஜ்ரி 658) அவர்கள் எழுதிய அத்-தக்மிலா லி கிதாபிஸ் ஸிலா, பாகம் 3, பக்கம் 81.
2. இமாம் ஷம்ஸுத்தீன் அத்-தஹபீ رَحِمَهُ اللهُ அவர்கள் எழுதிய ஸியர் அஃலாமின் நுபலா, பாகம் 21, பக்கம் 252.
No comments:
Post a Comment