🌹 வஸீலாவை முதன்முதலில் மறுத்தவர் இப்னு தைமிய்யா ஆவார்! 🌹
இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமீ رحمه الله அவர்களும், இமாம் தகிய்யுத்தீன் அஸ்-ஸுப்கீ رحمه الله (ஹிஜ்ரி 756) அவர்களும் கூறுகிறார்கள்:
“அறிந்து கொள்ளுங்கள்! அண்ணல் நபி ﷺ அவர்களை வஸீலாவாகக் கொண்டு அல்லாஹ் தஆலாவிடம் தவஸ்ஸுல் (இறைவனிடம் நெருங்குவதற்கான வழிமுறையாக ஆக்குதல்), இஸ்திகாஸா (உதவி தேடுதல்), ஷஃபாஅத் (பரிந்துரை) கோருதல் ஆகியவை அனுமதிக்கப்பட்டவை மட்டுமல்ல; மாறாக, சிறப்பானவையும் ஆகும்.
இதன் அனுமதியும் சிறப்பும் மார்க்கப் பற்றுள்ள ஒவ்வொருவருக்கும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இது நபிமார்கள் மற்றும் இறைத்தூதர்களின் நடைமுறையிலும், ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைகளிலும், முஸ்லிம்களின் அறிஞர்கள் மற்றும் பாமர மக்கள் ஆகிய இருசாராரின் நடைமுறைகளிலும் நன்கு அறியப்பட்டதாகும்.
புனித தீனைப் பின்பற்றுபவர்களில் எவரும் இதனை மறுத்ததில்லை. எந்தக் காலத்திலும் இதனை மறுத்ததாகவும் கேள்விப்பட்டதில்லை.
இறுதியாக இப்னு தைமிய்யா தோன்றும் வரை! அவர் இந்த விவகாரத்தில் இத்தகைய கருத்துக்களை முன்வைத்தார். அவை குறைந்த அறிவுடையவர்களையும், எளிதில் ஏமாறக்கூடியவர்களையும் சந்தேகத்தில் ஆழ்த்தின. மேலும், அவருக்கு முன்பு எந்தக் காலத்திலும் எவரும் கூறியிராத ஒரு புதிய கருத்தை (பித்அத்தை) உருவாக்கினார்.
இப்னு தைமிய்யா அவர்கள் இஸ்திகாஸா மற்றும் தவஸ்ஸுலை மறுத்திருப்பது, அவருக்கு முன்பு எந்த ஓர் அறிஞரும் கூறாத கருத்தாகும் என்பதே உங்களுக்குப் போதுமான சான்றாகும். இந்தக் கருத்தின் காரணமாகவே அவர் இஸ்லாமியர்களிடையே இழிவுக்கும் அவப்பெயருக்கும் ஆளானார்.”
📚 நூல் ஆதாரங்கள்:
1. இமாம் அஸ்-ஸுப்கீ رحمه الله ஷிஃபாஉஸ் ஸிகாம் ஃபீ ஸியாரத்தி கைரில் அனாம் (شفاء السقام في زيارة خير الأنام), பக்கம்: 357.
2. இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமீ رحمه الله அல்-ஜவ்ஹருல் முனழ்ழம் (الجوهر المنظم), பக்கம்: 148.
No comments:
Post a Comment