🌹 புண்ணியமிகு ஷஃபான் 🌹
நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா உசாமா பின் ஸைத் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் ஹபீப் ﷺ அவர்களிடம் நவின்றேன் ,
" யா ரசூலல்லாஹ் ﷺ ! நீங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதைப் போல, வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நான் பார்ப்பதில்லை.
அதற்கு அண்ணல் நபி ﷺ கூறினார்கள்: "ரஜப் மற்றும் ரமழான் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு மாதம் உள்ளது. மக்கள் அதைப் பற்றி கவனமற்றவர்களாக இருக்கின்றார்கள். அந்த மாதத்தில் மக்களின் அமல்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் உயர்த்தப்படுகின்றன. எனவே, எனது அமல்கள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்படுவது எனக்கு மிகவும் பிடித்தமானது."
ஆதார நூல் 📕 ஸுனன் நஸாஈ, பக்கம் 267, கிதாபுஸ் ஸவ்ம், பாப் 70: நபியவர்களின் நோன்பு நோற்பது பற்றிய விளக்கம், ஹதீஸ் எண்: 2358
ஆதாரமாக சமர்பித்துள்ள ஹதீஸ் நூலின் தஹ்கீக் செய்தவர் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கையுடைய நவீன கால வஹாபிகளின் இமாம் நஸீருத்தீன் அல்பானி .
மேலே உள்ள ஹதீதில் ஷஃபான் மாதம் நமது அமல்கள் அல்லாஹ் سبحانه و تعالى அளவில் உயர்த்தப்படுகின்றன என்பது நபிமொழி மூலம் அறிகின்றோம்.
இனி எந்த நாளில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன குறித்தும் ஹதீதுகளில் வந்துள்ளன.
No comments:
Post a Comment