🌹 ஹயாத்துல் அன்பியா 🌹
இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதியுள்ளார்கள்:
وَالْأَنْبِيَاءُ عَلَيْهِمُ السَّلَامُ بَعْدَمَا قُبِضُوا رُدَّتْ إِلَيْهِمْ أَرْوَاحُهُمْ فَهُمْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ كَالشُّهَدَاءِ
"நபிமார்கள் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்களின் ரூஹ் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படுகின்றன. ஆகவே அவர்கள் தங்கள் இறைவனிடம் ஷுஹதாக்களைப் போல உயிரோடு இருக்கின்றனர்."
(ஆதார நூல் 📕 அல்-இஃதிகாத் லில்-பைஹகீ, பக்கம் 415)
இங்கு இமாம் பைஹகீ தெளிவுபடுத்துவது என்னவென்றால், நபிமார்களின் உயிரோடு இருப்பதை சாதாரண மக்கள் பர்ஸக் வாழ்வில் இருப்பது போல புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, அவர்களின் ரூஹ் அவர்களின் உடலுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது.
இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ஷாஹ் அப்துல் ஹக் முஹதீஸ் தெஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாமாகக் கருதப்படுபவர்கள், இவ்வாறு எழுதியுள்ளார்கள்:
"நிச்சயமாக நபிமார்கள் உயிரோடு இருக்கின்றனர். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்களின் வாழ்வு உலக வாழ்வைப் போன்ற உடல் சார்ந்த (ஜிஸ்மானி) வாழ்வாகும்; ஷுஹதாக்களைப் போன்ற ரூஹானி வாழ்வு அல்ல."
[ஆதார நூல் 📕 அஷ்இஆத்துல்-லம்ஆத் – தொகுதி 1, பக்கம் 574]
இந்த விளக்கம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நம்பிக்கையை தெளிவாக விளக்குகிறது.
No comments:
Post a Comment