Tuesday, 12 August 2025

மிலாதுந் நபி ‎ﷺ ‏யின் ‎போது ‎அழுது ‎புலம்புவது



மிலாதுந் நபி ﷺ  யின் நாளில் அழுது புலம்புவோரின் முன்னோடி யார் ?  

கைர் முகல்லித் வஹாபிகளும்,தேவ்பந்தி தப்லீக்  வஹாபிகளும் ஈத் மிலாதுந் நபிﷺ அன்று ஏன் அழுது புலம்புகிறார்கள்?

இமாம் அபு காசிம் சஹ்லி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு 581 ஹிஜ்ரி) கூறுகிறார்கள்:
‎أن إبليس رن أربع رنات حين لعن وحين أهبط وحين ولد رسول الله صلى الله عليه وسلم وحين أنزلت الفاتحة

"இப்லீஸ் (ஷைத்தான்) நான்கு முறை அழுதான்: முதலாவதாக, அவன் மீது சாபமிடப்பட்டபோது, பின்னர் அவன் சுவனபுரியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, ரசூலுல்லாஹ்ﷺ அவர்களின் புனிதப் பிறப்பு நிகழ்ந்தபோது, மற்றும் சூரதுல் ஃபாத்திஹா இறக்கப்பட்டபோது."

📚 ஹாஃபிழ் இப்னு கசீர் رَحِمَهُ ٱللَّٰهُ (776 ஹிஜ்ரி), அல்-பிதாயா வந்-நிஹாயா, கெய்ரோ பதிப்பு, தொகுதி 2, பக்கம் 166]

எம்பெருமானார் கண்மணி நாயகம்  ﷺ அவர்களது மீலாதை மறுக்கும் வஹாபிகள் ,தங்களது நவீன கூட்டத்தின் ஸ்தாபகர் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் நஜ்தி தமீமியின் பிறந்தநாளை ஒரு வாரத்திற்கு கொண்டாடலாம் என்று தமது நூலான " மஜ்மு பத்வா"  வழங்கிய தமது கூட்டத்தின் ஆகப்பெரிய அறிஞரான உதைமீன் மீது பத்வா வழங்காதது ஏன் ? முனாபிக்தனத்தின் உச்சமல்லவா இது ? 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...