📌 பைத்துல் முகத்தஸை வெற்றிகொண்ட வீரர் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களது அகீதா 📌
வரலாற்றாசிரியர் இமாம் தகிய்யுத்தீன் அல்-மக்ரீஸீ அவர்கள் எழுதுகிறார்கள்:
அகீதா (இறைநம்பிக்கைக் கொள்கை) தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை, சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி رحمه الله அவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஷெய்கு அபுல் ஹஸன் அல்-அஷ்அரீ رحمه الله (அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதா இமாம்) அவர்களின் அகீதாவைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார்கள்.
எகிப்தில் தாம் ஏற்படுத்திய வக்ஃப் நிறுவனங்களின் நிபந்தனைகளில் இதையும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அவற்றுள் ஒன்று, அல்-கராஃபா பகுதியில், இமாம் ஷாஃபிஈ رضي الله عنه அவர்களின் அடக்கஸ்தலத்திற்குப் பின்னால் அமைந்திருந்த அல்-மத்ரஸத்துன் நாஸிரிய்யா ஆகும்.
📚 நூல்: அல்-மவாஇழ் (Al-Mawāʿiẓ)
தொகுதி: 4
No comments:
Post a Comment