கதீர் கும் ஹதீதில் உள்ள மவ்லா என்னும் சொல்லின் விளக்கம் ,
முஹக்கிக் இமாம் ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது லம்ஆத் அல் தன்கீஹ் ( மிஷ்காத் ஷரீபின் ஷரஹ் ) ல் எழுதுகின்றார்கள் , ஹதீதில் வரும் ' மவ்லா' என்ற சொல்லின் பொருள் உதவியாளர் அல்லது நேசர் என்பதாகும் .
ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மேலும் ,ஸுரா மாய்தாவின் 55 ஆயத்தின் மவ்லா அலீ كرم الله وجهه அவர்கள் குறித்து இறங்கியது என்றும் கூறுகின்றார்கள்.
சிராஜுல் ஹிந்து ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி ஸூபி காதிரி قدس الله سره العزيز அவர்கள் ஹதீதில் வந்துள்ள மௌலா என்றால் நேசர் என்று தமது தப்ஸீர் அஜீஜியாவில் என்று விவரிக்கின்றார்கள்.
சைபே சிஷ்தியா நூலின் மூலம் காதியானிகளை விரட்டி அடித்த கண்மணி நாயகத்தின் திருப்பேரர் ஸெய்யது பீர் மெஹர் அலீ ஷாஹ் சிஷ்தீ கோல்ராவீ قدس الله سره العزيز தமது தப்ஸீர் மா பயன
ஸுன்னி வஷியா வில் மவ்லா என்றால் நேசர் அல்லது உதவியாளர் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். நிச்சயமாக தலைவர் அல்லது ஸர்தார் அல்ல
இமாமே அஹ்லே ஸுன்னத் அஃலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் காதிரி قدس الله سره العزيز ,அவர்கள் முஹத்திஸ் இமாம் பத்ருத்தீன் அய்னீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களை மேற்கோள் காட்டி மவ்லா என்றால் உதவியாளர் என்று பொருள் என்று குறிப்பிடுகின்றனர்.
இன்னும் இந்தாளை " ஈதே கதீர் " என்றழைக்கும் வழக்கம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான கொள்கை உடையவர்களான ஷியா ராபிழியாக்களது வழிமுறையாகும்.
இமாம் முஹம்மது பின் யஹ்யா மாலிக் ( மறைவு ஹிஜ்ரி 741) அவர்கள் எழுதுகின்றனர்,
" ஷியாக்கள் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது ஷஹாதத் நாளை ஈத் நாளாக கடைபிடித்து அதற்கு " ஈதே கதீர் " என்றழைத்தனர்.
ஈதே கதீர் என்று கொண்டாடும் பழக்கம் ஸஹாபிகளை தூற்றும் ஷியாக்களது வழிமுறை .பித்அத் வாதிகளது வழிமுறைக்கு மாற்றமாக நடப்பது தான் சத்திய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாத்தின் வழிமுறை.
ஆதார நூல் 📕 தம்ஹீத் அல் பயான்
பீ மகாலத் ஷஹீத் அல் உஸ்மான் ,பாகம் 1, பக்கம் 186
No comments:
Post a Comment