Tuesday, 17 February 2026

தராவீஹ் தொழுகை

🌹  தராவீஹ் தொழுகை 🌹

أخبرنا أبو طاهر الفقية، قال: أخبرنا أبو عثمان البصري، قال: حدثنا أبو أحمد: محمد بن عبد الوهاب، قال: أخبرنا خالد بن مخلد، قال: حدثنا محمد بن جعفر، قال: حدثني يزيد بن خصيفة، عن السائب بن يزيد، قال: كنا نقوم في زمان عمر بن الخطاب بعشرين ركعة والوتر

ஹழ்ரத் ஸயீப் இப்னு யஸீத் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள் , " பாரூக்குல் அஃலம் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களது கிலாபத்தின் போது மக்கள் இருபது ரக்அத் தராவீஹ் தொழுகையுடன் ,வித்ர் தொழுகையையும் தொழுதார்கள் " .

ஆதார நூல் 📕 மஃரிபத் அல் ஸுனன் வல் அதர் ,இமாம் பைஹகீ رضي الله عنه ,பாகம் 4,பக்கம் 42,ஹதீஸ் எண் : 5409


பூமான் நபி  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " எனது ஸுன்னத்தை உறுதியாக பற்றிப்பிடியுங்கள; இன்னும் குலஃபாயே ராஷிதீன்களது ஸுன்னத்தையும் பற்றிப்பிடியுங்கள்" 

📕 ஸுனன் அபூ தாவூத்,பாகம் 2,பக்கம் 635 ; ஸுனன் திர்மிதி ,பாகம் 2,பக்கம் 108; ஸுனன் தாரிமி,பாகம் 1,பக்கம் 43; ஸுனன் இப்னு மாஜா 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...