Thursday 13 September 2018

உரூஸ்,கந்தூரி நடத்தலாமா - 1 ?


ஷூஹதாக்கள்,அவ்லியாக்கள் என்றும் ஜீவனுள்ளவர்கள் . பயமோ,சஞ்சலமோ அவர்களுக்கு இல்லை. இம்மையிலும்,மறுமையிலும் அவர்களுக்கு சுபம் உண்டு என்பதாய் குர்ஆனும்,ஹதீதும் கூறுகுன்றன. அத்தகைய மகான்கள் வபாத்தான நாளை உரூஸ் தினமாக உலகம் கொண்டாடி வருகின்றது.


                                       (உத்குரு மஹாஸின மவ்த்தாக்கும் )


கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் ஷுஹதாக்களுடைய கபூர் ஷரீபுகளை ஜியாரத்து செய்ய வருடம் தோறும் போய் வந்ததாகவும் ,அருமை ஸஹாபா பெருமக்களும் ஜியாரத்துச் செய்வதற்காக அவ்வாறே வருடந்தோறும் போய் வந்ததாகவும் ஹதீதுகளில் வந்திருப்பதாக இமாம் ஸுயூத்தி رضي الله عنه   அவர்கள் 
'தப்சீர்  துர்ரு மன்தூரிலும்' ,இமாம் இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه   அவர்கள்    'ஹுஸ்னு தவஸ்ஸுலிலும் ' வரைந்திருப்பதாய் மவ்லானா மவ்லவி நதீர் அஹ்மத் கான் ஸாஹிப் அஹ்மதாபாதீ ,குஜராத்தீ  அவர்கள் 'மஜ்மஅத்துர் ரஸாயில் பீ தஹ்கீக்கில் மஸாயில் ' நூலில் 24வது பக்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்கள் .


மேலும் இமாம் இப்னு ஆபிதீன்    رضي الله عنه   அவர்கள்  'ரத்துல் முஹ்த்தார் ' ,1வது பாகம் , 665வது பக்கத்திலும் , இமாம் இப்னு ஹுமாம்  رضي الله عنه   அவர்கள் 'தப்சீர் கபீரிலும்' எடுத்துரைப்பதாய் அல்லாமா ஸெய்யித் அமீர் அலவீ அஜ்மீரி அவர்கள் 'இஹ்லாக் குல் வஹ்ஹாபியீனில் ' கூறுகின்றார்கள் .

மேலும் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி  رضي الله عنه   அவர்கள் ,'தப்சீர் துர்ரு மன்தூரில் ' ,

    سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى الدَّارِ

 " நீங்கள் (உங்கள்    வாழ்க்கையில் கஷ்டங்களை ) பொறுமையுடன் சகித்துக்கொண்ட காரணமாக உங்களுக்குச் சாந்தியும் ,சமாதானமும் உண்டாகுக ! (உங்களுடைய ) கடைசி வீடு மிக்க நல்லதாயிற்று ! (என்று சொர்க்கவாதிகளை நோக்கி மலக்குகள் கூறுவார்கள் ) " [அல் குர்ஆன் 13:24]  

என்ற ஆயத்தின் கீழ் , ஹழ்ரத் அனஸ் رضي الله عنه   அவர்களைக் கொண்டு ,இப்னு முன்திர் رضي الله عنه   அவர்களும் , இப்னு மர்தவிய்யா رضي الله عنه   அவர்களும் ரிவாயத்துச் செய்துள்ளார்கள் என்று பின்வருமாறு வரைந்துள்ளார்கள் ,

" ரஸூலுல்லாஹி  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் ஒவ்வொரு வருடமும் உஹது மலைக்கு சென்று அங்குள்ள ஷுஹதாக்களுக்கு ஸலாம் கூறி நீங்கள் மேற்கொண்ட மேலான பொறுமையின் பொருட்டால் நீங்கள் பெற்றிருக்கின்ற சொர்க்க வீடே மேலாம்பரமான வீடு என்று உரைப்பார்கள் " என்பதாக .

மேலே கண்ட விஷயத்தை வரைந்து இவ்வாறே குலபாயே ராஷிதீன்களான ஸித்தீகுல் அக்பர் அமீருல் முஃமினீன்  ஹழ்ரத் அபூபக்கர் رضي الله عنه   அவர்களும் , பாரூக்குல் அஃலம்  அமீருல் முஃமினீன்  ஹழ்ரத் உமர் رضي الله عنه   அவர்களும் , ஜாமிஉல் குரான் அமீருல் முஃமினீன்  ஹழ்ரத் உஸ்மான் கனீ رضي الله عنه   அவர்களும்  , ஹைதரே கர்ரார் அமீருல் முஃமினீன்  ஹழ்ரத் அலீ இப்னு அபுதாலிப் رضي الله عنه   அவர்களும் செய்து வந்தார்கள் என்பதாய் ஹழ்ரத் முஹம்மது இப்னு இப்ராஹீம் رضي الله عنه   அவர்களைக் கொண்டு , ஹழ்ரத் இப்னு ஜரீர் رضي الله عنه   அவர்கள் ரிவாயத்துச் செய்கின்றார்கள் .

இன்னமும் ஸெய்யிதா பாத்திமா ஜொஹ்ரா  رضي الله عنه   அவர்கள் ,ஸெய்யிதுஷ் ஷுஹதா ஹழ்ரத் ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப்   رضي الله عنه   அவர்களது கப்ரை வருடந்தோறும் சென்று ஜியாரத்து செய்தார்கள் என்றும் ,அவ்வழக்கத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வந்தார்கள் என்றும் ரிவாயத்துச் செய்யப்பட்டிருக்கின்றது .

,
فيدخل فيسلم ثم ينصرف، رواه ابن جرير. ورواه ابن أبي حاتم من حديث إسماعيل بن عياش، عن أرطاة بن المنذر عن أبي الحجاج يوسف الألهاني قال: سمعت أبا أمامة، فذكر نحوه. وقد جاء في الحديث أن رسول الله صلى الله عليه وسلم كان يزور قبور الشهداء في رأس كل حول، فيقول لهم: { سَلَـٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَىٰ ٱلدَّارِ } وكذلك أبو بكر وعمر وعثمان
[தப்சீர் இப்னு கதீர் ]   

இது போன்று இமாம் றாஜீ  , அபூஸஊது , இப்னு கதீர்  رضي الله عنه   ஆகியோரது தப்சீர்களில் கூறப்பட்டுள்ளன .      

அல்லாமா ஷெய்கு அஹ்மது இப்னு முஹம்மது பாரூக்கி  رضي الله عنه   அவர்கள் 'தவ்ளீஹுல் ஹுதா' வில் சொல்லியிருப்பதாக 'பத்ஹுல் ஹக் ' கூறுவதாவது : -

" அல்லாஹ்வின் உகப்புக்குச் சொந்தமான நல்லடியார்கள் , உலமாக்கள் ,ஷெய்குமார்கள் ஆகியோருடைய கபுறுகளில் கூட்டமாகக் கூடியிருக்க நாம் கண்டோம் .அவ்வாறு அங்கு அவர்கள் கூடியிருக்க காரணம் குர்ஆன் ,பாத்திஹா ஓதவும் , துஆக்கள் கேட்கவும் , தீனியத்து சம்பந்தமான தங்களது கோரிக்கைகள் நிறைவேற ,அந்த கபுராளிகளின் ருஹைக் கொண்டு உதவி தேடுவதற்கே .இவ்வழிகளில்  பலமுறை அவர்கள் பெரிதும் ஜெயம் பெற்று அனுபவத்தில் உணர்ந்துள்ளனர் .

குறிப்பாக உரூஸ் நாட்களில் தான் தங்களின் அந்தரங்கமான பிரயோஜனங்களை அவர்கள் பெற்றுள்ளனர் . இக்காரணம் பற்றியே அவர்கள் ,அந்த கபுராளிகளின் ரூஹ் பிரிந்த வபாத் நாட்களில் அங்கு திரள் ,திரளாக தீவிர அபிலாஷை கொண்டு ,ஹிம்மத்தோடு வந்து கூடி , பாத்திஹா முதலியன ஓதுகின்றார்கள் . சாமானிய ஜனங்களும் அவ்வாறே அங்கு கூட்டம் கூடி பாத்திஹா முதலியன ஓதி ,தங்களின் தீனியத்தான கோரிக்கைகளையோ ,துன்யா சம்பந்தப்பட்ட நாட்ட தேட்டங்களோ  நிறைவேற அந்த கபுராளிகளைக் கொண்டு உதவி தேடுகின்றார்கள் " என்பதே .

இன்னும் பற்பல வகைகளில் இவற்றுக்குச் சான்றாக உள்ள ஹதீதுகளை அநேகம் இருக்கின்றன . அவற்றைக் கொண்டே இமாம்கள் எல்லாம் ஆதாரம் தேடியுள்ளார்கள் . மேற்கண்ட சான்றுகளைக் கொண்டு தீனுல் இஸ்லாத்தில் உரூஸ் நடத்த பலமான ஆதாரங்கள் உள்ளன என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது என்பதாய் மேலே மூன்று பாராக்களில் குறிப்பிடப்பட்டவற்றையும் மேற்கோளாக காட்டி மவ்லானா ,மவ்லவி ஷஹாபுத்தீன் அஹ்மது கோயா ஷாலியாத்தீ    رضي الله عنه   அவர்கள் ஹிஜ்ரி 1371ஆம் ஆண்டு பத்வா கொடுத்துள்ளார்கள் .

இந்த பத்வாவைச்   சரி கண்டு மதறாஸ் முப்தி  அல்ஹாஜ் முஹம்மது ஹபீபுல்லாஹ் ஸாஹிப் (கவர்மெண்டு தலைமை காஜி ) ,முஹம்மது கலீலுர் ரஹ்மான் காதிரி ரிஜ்வி பீகாரி ஸாஹிப்  , நாஸிருத்தீன் முஹம்மது இப்னு காஜீ உபைதுல்லாஹ் ஸாஹிப் ,  அல்லாமா காதிர் அலி ஸாஹிப் (முதர்ரிஸ், மத்ரஸா முஹம்மதீ ) ,மவ்லானா முஹம்மது இப்ராஹீம்  பாசில் தேவ்பந்த் (முதர்ரிஸ் , மத்ரஸா ஜமாலிய்யா )   ஆகியவர்களும் , இன்னும் பல உலமாக்களும் கையொப்பம் வைத்துள்ளார்கள் .

நபி பெருமானார்     صَلّى اللهُ عليهِ واٰله وسلّم   அவர்கள் வபாத்தாகி இரு தினங்கள் வரையில் கலீஃபா நியமனத்திலும் ,அடக்க ஸ்தலம் நிர்ணயிப்பதிலும் கால தாமதமாகி ,கடைசியாக ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக்  رضي الله عنه   அவர்கள் கலீபாவாக   தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنه   அவர்களது இல்லத்தின் அறையிலேயே தபன் (அடக்கம் ) செய்யப் பெற்றார்கள் . 

அன்று மதீனாவிலுள்ள ஜனங்கள் அனைவருக்கும் அமீருல் முஃ மினீன்  ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக்  رضي الله عنه   அவர்கள், 'ஈஸால்  தவாஃபுக்காக' வேண்டி , உணவு தயார் செய்தார்கள் . யாது காரணத்திற்கா இவ்விதம் செய்கின்றார்கள் என்று ஜனங்கள் வினவியதற்கு இன்று ரஸூலுள்ளாஹி      صَلّى اللهُ عليهِ واٰله وسلّم   அவர்களது உரூஸ் என்பதாய் விஷயம் அறிந்தவர்கள் விடை அளித்தார்கள் என்பதாக குத்வத்துஸ் ஸாலிஹீன் , ஷாஹ் ஷர்புத்தீன் இப்னு அஹ்மது யஹ்யா முனீரி  رضي الله عنه   அவர்கள் 'மல்பூஜாத்' தில் சொல்வதாக ,அல்லாமா முப்தி ஸெய்யித் அமீர் அலவீ அஜ்மீரி 
رضي الله عنه   அவர்கள் ' இஹ்லாக்குல் வஹ்ஹாபியீனிலும்' ,
நூறு ஒட்டகங்கள் அறுத்து உரூஸ் நடத்தியதாக மதராஸ் முப்தி மஹ்மூது ஸாஹிப் அவர்கள் 'பத்ஹுல் ஹக்' கிலும் குறிப்பிட்டிருக்கின்றார்கள் .

"உரூஸ் உடைய நாட்களைப் பேணி ஜியாரத்துச் செய்வதில் மிகுதமான பிரயோஜனங்கள் உண்டு " என்பதாய் ஷெய்கு அஹ்மது இப்னு முஹம்மது பாரூக்கி  رضي الله عنه   அவர்கள் ,'தவ்ளீஹுல் ஹுதா' விலும்  , ஷெய்கு அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி 
  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم   அவர்கள்   'மா தபத்த பிஸ் ஸுன்னா' விலும்  , அல்லாமா முப்தி மஹ்மூது ஸாஹிப்  மத்ராஸி  அவர்கள் 'பத்ஹுல் ஹக்' கிலும்     கூறுகின்றார்கள் .

"உரூஸ் தினத்தைப் பேணி ஜியாரத்துச் செய்வது முக்கியமாகும் " என்று 'மஜ்மூஉர்   ரிவாயத்திலும் ' , 'பதாவா தன்பதா' விலும்  , வருகின்றது என்பதாக       அல்லாமா முப்தி மஹ்மூது ஸாஹிப்  மத்ராஸி  அவர்கள் 'பத்ஹுல் ஹக்' கில்      கூறுகின்றார்கள் .                  

  
தில்லியில் கோலோச்சும் மஹ்பூபே இலாஹி ஷெய்கு நிஜாமுத்தீன் ஜிஸ்தி رضي الله عنه   அவர்கள் ,குத்வத்துல் அவ்லியா ஷெய்கு நஸீருத்தீன் ஷீறாகீ  رضي الله عنه   அவர்கள் , ஸுல்தானுல் அவ்லியா முஹம்மது ஹுசைன் பந்தா நவாஸ் رضي الله عنه   அவர்கள் , வலிய்யுல் காமில் ஷெய்கு  பஹாவுத்தீன் ஜகரிய்யா     رضي الله عنه   அவர்களும் இன்னும் மற்ற அவ்லியாக்களும் ,உலமாக்களும் அவர்களது ஷெய்குமார்கள் ,பாட்டன்மார்கள் ,தாய் ,தந்தையர்கள் முதலானோர்கள் வபாத்தான உரூஸ் நாட்களில் 'பாத்திஹா' கத்தம் செய்திருப்பதாய் ஷாஹ் முஹையத்தீன் ஸாஹிபு வேலூரி رضي الله عنه   அவர்கள் 'பஸ்லுல் கிதாப் ' , 50வது பக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்கள் .     

    

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...