Saturday 6 January 2024

ஹபீபின் மஹ்பூப்

🌹ஹபீபின் மஹ்பூப் 🌹

கலீபத ரஸூல்லல்லாஹ் ,ஸித்தீகுல் அக்பர், அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்கள் ஜமாதுல் ஆகிர்,பிறை 22,ஹிஜ்ரி 13  அன்று வபாத் ஆனார்கள்.

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்கள் தமது இறுதி நேரத்தில் ,பூமான் நபி  ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழாஷரீபின் முன் தமது உடலை வைத்து, " அல்லாஹ்வின் தூதரே !   அபூபக்கர் தங்களது திருச்சன்னிதானம் வர அனுமதி கோருகின்றேன்.ரவ்ழா ஷரீபின் கதவுகள் திறக்கபட்டால் ,என்னை கண்மணி நாயகம்  ﷺ அவர்களது சங்கைமிகும் கப்ருஷரீப் அருகே அடக்கம் செய்யவும்,இல்லையென்றால் ஜன்னத்துல் பகீயில் அடக்கம் செய்திட வேண்டும் " என்று வஸீயத் செய்தார்கள்.

ஷெய்குல் இஸ்லாம் இமாம் பக்ருத்தீன் ராஜி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் , 

" அபூபக்கர் ஸித்தீக் அவர்களது ஜனாசா ,கண்மணி நாயகம்  ﷺ அவர்களது  புனித மிகும் ரவ்ழா ஷரீபிற்கு முன்னர் வைக்கப்பட்டு ,வஸீயத்தின் பிரகாரம் அனுமதி கோரப்பட்டது.' அஸ்ஸலாமு அலைக்கும் ,யா ரஸூல்லல்லாஹ் ! அபூபக்கர் இங்கு உள்ளார்' .ரவ்ழா ஷரீபின் கதவுகள் தானாக திறந்தது. ரவ்ழா ஷரீபில் இருந்து ,' நேசரை நேசரிடம் அனுப்பி வையுங்கள்.தமது நேசரை சந்திக்க நேசர் ஆர்வமுடன் உள்ளார் ' என்று கூறப்பட்டது .


📚 தப்ஸீர் கபீர்,ஸூரா கஃப்,வசனம் 9,பக்கம் 88,பாகம் 21.

📚கஸாயிஸுல் குப்ரா,இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ

📚தாரீக் மதீனத் திமிஷ்க்,இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ

📚 லிசான் அல் மீசான்,ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ رَحِمَهُ ٱللَّٰهُ

📚கன்சூல் உம்மால்,இமாம் முத்தக்கி ஹிந்தி رَحِمَهُ ٱللَّٰهُ

📚நுஸ்கத் அல் மஜாலிஸ்,அஸ் ஸபூரி رَحِمَهُ ٱللَّٰهُ

📚ஸீரா அந்நபவிய்யா,இமாம் ஹலபி رَحِمَهُ ٱللَّٰهُ

📚 ஜாமிஆ கராமாதில் அவ்லியா,இமாம் யூசுபுந்நபஹானி رَحِمَهُ ٱللَّٰهُ 

இச்சம்பவம் மூலம் கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் ஹயாத்துந்நபியாக இருக்கின்றார்கள் என்பதும்,இதுவே ஸஹாபா பெருமக்களது அகீதா என்பதும் தெளிவாக தெரிகின்றது 

Friday 5 January 2024

நபிமார்களுக்குப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர்!

🌹நபிமார்களுக்குப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர் 🌹

அறிவின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்கள் கூபாவின் மிம்பரில் நின்று தப்தீழிகளுக்கு (  ஷெய்கைன்களது அப்தழீயத்தை மறுப்பவர்கள்)  அறைகூவல் விடுக்கின்றார்கள் 

" நிச்சயமாக கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்குப் பின்னர் மனிதர்களில் தலைசிறந்தவர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்களும்,பின்னர் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் ஆகியோர் தான்" .

📚 முஸ்னத் அஹ்மது,ஹதீஸ் # 833-837 ,ஸஹீஹ் ஸனது

Monday 1 January 2024

இமாம் ஷாபிஈயும் வஸீலாவும்

🌹இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه வும்,வஸீலாவும் 🌹

இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " 
நான் இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்களிடம் இருந்து பரக்கத் பெறுவேன் ,இன்னும் தினமும் அவர்களது மக்பராவை ஜியாரத் செய்வேன். எப்பொழுதாவது எனது குறிப்பிட்ட தேவைகள் இருக்கும் போது ,இரண்டு ரக்அத்துகள் தொழுது ,பின்னர் இமாமுல் அஃலம் அவர்களது மக்பராவிற்கு வந்து ,அல்லாஹ்விடம் எனது தேவைகளை முறையிடுவேன். சிறிது நேரத்தில்  எனது தேவைகள் நிறைவேறி விடும் " 

📚 இமாம் கதீப் அல் பக்தாதி رَحِمَهُ ٱللَّٰهُ, தாரீக் பக்தாத் ,பாகம் 1 ,பக்கம் 134
Related Posts Plugin for WordPress, Blogger...