Friday 22 March 2024

தராவீஹ் பலவீனமான ஆதாரங்கள் !

🌹எட்டு ரக்அத் தராவீஹ் தொழுகைக்கான ளயீபான ஆதாரம் 🌹

இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது ஹதீதுக் கிரந்தமான "முவத்தா"  வில் வருகின்ற எட்டு ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றி விபரம் 

இமாம் காழீ அப்துல் பர் அந்தலூசி மாலிக்கி  رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு - ஹிஜ்ரி 463 ) கூறுகின்றார்கள் , 

முஹம்மது பின் யூசுப் அவர்கள் மூலமாக வருகின்ற இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது தராவீஹ் பதினொன்று ( எட்டு + மூன்று)  ரக்அத் என்ற அறிவிப்பு ளயீபானது.

அதே நூலில் முற்பகுதியில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் ஸஹாபாக்களது இருபது ரக்அத் தராவீஹ் தொழுகையை மேற்கோள் காட்டி எழுதுகின்றார்கள், இந்த அறிவிப்புகள் அனைத்தும் இமாம் மாலிக் رضي الله عنه அவர்களது 'முஅத்தா' கிரந்தத்தில் வரும் பதினொரு ரக்அத் ( எட்டு + மூன்று) ளயீபானது என்பதை குறிக்கின்றது.

ஸஹீஹான ரிவாயத் என்பது இருபது ரக்அத்துகள் வரும் அறிவிப்பேயாகும். 

📚 அல் இஸ்தித்கார் லீ மத்ஹப் உலமா ,இமாம் அப்துல் பர் رَحِمَهُ ٱللَّٰهُ ,பாகம் 5,பக்கம் 156

Sunday 17 March 2024

ஸஹாபாக்களது தராவீஹ்

🌹சத்திய சீலர்கள் ஸஹாபாக்களது இஜ்மா தராவீஹ் 🌹

இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அறிவிக்கின்றார்கள் , " ஹழ்ரத் ஸயீப் பின் யஸீத் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களது கிலாபத்தின் போது ,ரழமானில் இருபது ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை தொழுவோம்.இன்னும் கூறினார்கள் , அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது கிலாபத்தில்  மீன் வரை ஓதிவிட்டு ,வெகுநேரம் நின்று ஓதுவதால் உண்டாகும் சிரமம் காரணமாக தமது கைத்தடிகளில் சாய்ந்து கொள்வர் " .

📚 இமாம் பைஹகீ رَحِمَهُ ٱللَّٰهُ ,ஸுனன் குப்ரா,ஹதீஸ் # 4617,ஷெய்குல் இஸ்லாம் இமாம் நவவி رضي الله عنهஇதன் ஸனது  ஸஹீஹ் என்கிறார்கள்.  அல் குலாஸா அல் அஹ்காம்,ஹதீஸ் # 1961

🌹ஸஹாபாக்கள் மற்றும் ஸலபுஸ் ஸாலிஹீன்களது  இஜ்மா தராவீஹ் 🌹

இமாம் திர்மிதி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நவின்றார்கள் , " மார்க்கம் கற்று அறிந்த பெரும்பான்மையோர் ,இருபது ரக்அத்துகள் தராவீஹ் என்பதை ஸெய்யிதினா உமர் رضي الله عنه ,ஸெய்யிதினா அலீ رضي الله عنه மற்றும் ஏனைய ஸஹாபா பெருமக்களது அறிவிப்புகளில் இருந்தும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.ஸலபுகளான ஸெய்யிதினா ஸுப்யானுத் தவ்ரி رَحِمَهُ ٱللَّٰهُ ,இமாம் ஷாபிஈ رضي الله عنه, இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் رضي الله عنه ஆகியோரும் அங்கனமே கூறினர். இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் மக்காவாசிகள் இருபது ரக்அத்துகள் தராவீஹ் தொழுததை தாம் பார்த்ததாக கூறியுள்ளார்கள் " 

📚 இமாம் திர்மிதி رَحِمَهُ ٱللَّٰهُ ,ஜாமிஉத் திர்மிதி,நோன்பின் பாடம்,ரமழானில் கியாம் குறித்த பாகம்,ஹதீஸ் # 806,ஸஹீஹ் ஹதீஸ் .

🌹தராவீஹ் தொழுகையை ஜமாத்துடன் தொழுத ஸஹாபா பெருமக்கள்  🌹

ஹதீஸ் 1 : 
 அப்துல் அஜீஸ் பின் ரபி கூறினார் , " ஸெய்யிதினா உபை இப்னு கஃப் رضي الله عنه  அவர்கள் மதீனாவில் ரமழானில் இருபது ரக்அத் மற்றும் மூன்று ரக்அத் வித்ரு தொழுகைக்காக மக்களுக்கு இமாமத் செய்தனர்

ஹதீஸ் 2 : 
  அபுல் ஹசனா அவர்கள் நவின்றார்கள் , " அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ  كرم الله وجهه இருபது ரக்அத் தொழுகைக்கு இமாமத் செய ய்திட உத்தரவிட்டார்கள்.

ஹதீஸ் 3 : 
  ஸெய்யிதினா நாபி பின் உமர் رضي الله عنه அவர்களிடமிருந்து வகீ அறிவிக்கின்றார்கள் , " ஸெய்யிதினா இப்னு அபீ முலைகா رضي الله عنه அவர்கள் ரமழானில் இருபது ரக்அத் தொழுகையில் எங களுக்கு இமாமத் செய்தார்கள் " 

📚 முஸன்னப் இப்னு அபீ ஷைபா ,ஹதீஸ் # 7766,7763,7765


🌹 ஸஹாபாக்களது தராவீஹ் ஜமாஅத் 🌹

ஹழ்ரத் ஸயீத் பின் யசீத் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் ஸஹாபா பெருமக்கள் இருபது ரக்அத் தராவீஹ் தொழுதனர்.இமாம் அவர்கள் தராவீஹ் தொழுகையில் நூற்றுக்கணக்கான ஆயத்துகளை ஓதினர்.அதன் தொடர்ச்சியாக அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه அவர்களது கிலாபத்தில் மக்கள் தொழுகையில் தடிகளால் தாங்கிக் கொண்டிருந்தனர்.

📚 இமாம் பைஹகீ رضي الله عنه  ,ஸுனன் குப்ரா




Friday 8 March 2024

உம்மத்தின் அமல்களை காணும் ஏந்தல் நபி  ‎ﷺ ‏

🌹திருநபி  ﷺ அவர்களது சங்கைமிகும் சமூகத்தில் உம்மத்தின் அமல்கள் 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்க்கலானி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது ஆசிரியப் பெருந்தகை இமாம் நூருத்தீன் ஹைத்தமீ ஷாபிஈ அஷ்அரீ மிஸ்ரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ( மறைவு - ஹிஜ்ரி 807)  , தமது ஹதீது கிரந்தந்தில் பதிவு செய்துள்ளார்கள்,

ஸெய்யிதினா அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,அண்ணல் எம்பெருமானார்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " என்னுடைய பிறப்பும் உங்களுக்கு ரஹ்மத்தாக இருக்கின்றது, துன்யாவை விட்டும் என்னுடைய மறைவும் உங்களுக்கு ரஹ்மத்தாக இருக்கும்.உங்களுடைய அமல்கள் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றது. அவை நல்லமல்களாக இருக்கும் பட்சத்தில் நான் அல்லாஹ்  سبحانه و تعالى வை புகழ்ந்து ,நன்றி செலுத்துகின்றேன்.தீய அமல்களாக இருக்கும் பட்சத்தில் நான் அல்லாஹ்  سبحانه و تعالى விடத்தில் அதனை மன்னித்துவிடக் கோரி துஆ செய்கின்றேன். " 

📚 மஜ்மஉஸ் ஸவாயித்,பாகம் 8,பக்கம் 427,ஹதீஸ் # 14250 

மிஸ்ரில் பிறந்த இமாம் நூருத்தீன் ஹைத்தமீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,ஷெய்குல் இஸ்லாம் இமாம் தகீயுத்தீன் சுப்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மாணவர் இமாம் ஹாபிழ் ஜைனுத்தீன் இராக்கி ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் ஹதீதுக் கலையைக் கற்றனர்.

Sunday 25 February 2024

ஷபே பராஅத்


ஹழ்ரத் ஸெய்யிதினா முஆத்  பின் ஜபல் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " அல்லாஹ்  سبحانه و تعالى ஷஃபான் மாதத்தின் இரவில்  தன் அடியார்களை நெருங்கி வருகின்றான்.இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் ஆகியோரைத் தவிர மற்ற எல்லோரது பாவங்களையும் மன்னிக்கின்றான் "

ஆதாரங்கள் : 
 📚 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ,பாகம் 12,பக்கம் 479,ஹதீஸ் # 5665
  📚இமாம் தப்ரானீ,அல் முஜம்அல் கபீர்,பாகம் 20,பக்கம் 108,ஹதீஸ் # 215.
  📚 இமாம் தப்ரானீ,அல் முஜம்அல் அவ்ஸாத்,பாகம் 07,பக்கம் 36,ஹதீஸ் # 6776.
📚 இமாம் தப்ரானீ,அல் முஸ்னத் ஷாமியீன்,பாகம் 1,பக்கம் 128,ஹதீஸ் # 203.
 📚 இமாம் தாரகுத்னீ ,நுஸுல்,பாகம் 01,பக்கம் 58,ஹதீஸ் # 77
 📚  இமாம் பைஹகீ ,ஷுஅபுல் ஈமான்,பாகம் 9,பக்கம் 24,ஹதீஸ் # 6204
 📚 இமாம் பைஹகீ,பழாயில் அல் அவ்காத்,பாகம் 01,பக்கம் 22,ஹதீஸ் # 22
📚  இமாம் அபூநுஐம் இஷ்பஹானி ,ஹில்யதுல் அவ்லியா,பாகம் 5,பக்கம் 191
 📚  மறுப்பாளர்களது தலைவர் -இமாமுல் வஹாபியா,நஸீருத்தீன் அல்பானி ,ஸில்ஸிலா அல் ஹதீஸ் அல் ஸஹீஹ்,பாகம் 3,பக்கம் 135,ஹதீஸ் # 1144.

இமாம் இப்னு ஹிப்பான் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இந்த ஹதீதை ஷஃபான் மாதத்தில் அல்லாஹ்  سبحانه و تعالى தனது அடியார்களை மன்னிப்பது தொடர்பான அறிவிப்பு என்ற பாடத்தில் வைத்துள்ளார்கள்.


ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமி அஷ்ஷாபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் , " முஜம் அல் கபீர் மற்றும் முஜம் அல் அவ்ஸாதில் இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் பதிவு செய்துள்ள இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடர் 'திகா' வாகும் " 
  📚 மஜ்முஸ் ஸவாயித்,பாகம் 8,பக்கம் 126,ஹதீஸ் # 12860

இமாம் இப்னு ரஜப் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகின்றார்கள் இந்த ஹதீத் ஸஹீஹானது என்று எழுதுகின்றார்கள்.
 📚 லதாயிப் அல் மவாரிப்,பாகம் 01,பக்கம் 224

Wednesday 7 February 2024

மிஃராஜ் நோன்பு

*மிஃராஜ் நோன்பின் சிறப்பும்*
*மார்க்க அறிஞர் பெருமக்களின் கூற்றும்* 
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

📌وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله   عَنْهُ  عَنِ النَّبِي ﷺِّ قَالَ  مَنْ صَامَ يَوْمَ السَّابِعَ وَالْعِشْرِينَ مِنْ رَجَبَ كُتِبَ لَهُ ثَوَابُ
صِيَامِ سِتِّينَ شَهْرًا
الغنية ١/١٨٢
 واحياء علوم الدين : ١/٣٢٨‎
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 
யார் ஒருவர் ரஜப் மாதம் 27-ம் நாள் நோன்பு நோற்கிறாரோ 
அவருக்கு 60 மாதம் நோன்பு நோற்ற கூலி எழுதப்படும் 
நூல்: ஃகுன்யத்துத் தாலிபீன்- கவ்துல் அஃலம் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி قدس الله سره العزيز, இஹ்யாவுலூமுத்தீன் - ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه 

📌 ويندب صوم يوم الاثنين ويوم الخميس ويوم المعراج
(حاشية البرماوي علي شرح 
ابن قاسم  158)
திங்கள்கிழமை, வியாழக்கிழமை மற்றும் மிஃராஜ் தினம் ஆகிய நாள்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: ஹாஷியத்துல் பர்மாவி அலா ஷறஹி இப்னு காஸிம்

📌 ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(إعانة الطالبين ٢\٣٠٦)
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: இஆனதுத் தாலிபீன் 

📌 ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(حاشية الباجوري ٥٧٩)
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்: ஹாஷியத்துல் பாஜுரி

📌 ﻭﻳﺴﻦ ﺃﻳﻀﺎ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ ويوم لا يوجد فيه مايأكله  - برماوي
حاشية الجمل ٢/٣٤٩
மிஃராஜ் தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
நூல்:ஹாஷியத்துல் ஜமல்

 📌وَيُسْتَحَبُّ صَوْمُ يَوم الْمِعْرَاج
ِ{فَتْحُ الْعَلَّامِ (٢/٢٠٨

📌 وَالبَاجُورِي: ١/٣٩٢ 

📌وَفَتَاوَى الشَّالِيَاتِي : ١٣٥) 
மிஃராஜ் தினம் 
நோன்பு நோற்பது
சுன்னத்தாகும் 
நூல்: ஃபத்ஹுல் அல்லாம், பாஜுரி, 
ஃபதாவஷ் ஷாலியாத்தி

மிஃராஜ் நோன்பு சுன்னத் என்பதற்கான 
ஃபிக்ஹு நூற்களின்  ஆதாரங்கள்.. 

1) ويندب صوم يوم الاثنين ويوم الخميس ويوم المعراج
(حاشية البرماوي علي شرح ابن قاسم  158)

2) ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(إعانة الطالبين ٢\٣٠٦)

3) ﻭﻳﺴﺘﺤﺐ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ
(حاشية الباجوري ٥٧٩)

4) ﻭﻳﺴﻦ ﺃﻳﻀﺎ ﺻﻮﻡ ﻳﻮﻡ اﻟﻤﻌﺮاﺝ ويوم لا يوجد فيه مايأكله  - برماوي
حاشية الجمل ٢/٣٤٩

5) 
‎وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله   عَنْهُ  عَنِ النَّبِي ﷺِّ قَالَ  مَنْ صَامَ يَوْمَ السَّابِعَ وَالْعِشْرِينَ مِنْ رَجَبَ كُتِبَ لَهُ ثَوَابُ
صِيَامِ سِتِّينَ شَهْرًا
الغنية ١/١٨٢
6 ) واحياء علوم الدين : ١/٣٢٨‎

7) وَيُسْتَحَبُّ صَوْمُ يَوْم الْمِعْرَاج
ِ{فَتْحُ الْعَلَّامِ (٢/٢٠٨

8 ) وَالبَاجُورِي: ١/٣٩٢ 

9) وَفَتَاوَى الشَّالِيَاتِي : ١٣٥)
மிஃராஜ் நோன்பின் நிய்யத்
 *சுன்னத்தான மிஃராஜ் நோன்பை நோற்கிறேன்*

களாவான நோன்பு இருந்தால்... 

 *களாவான ரமளான் நோன்பையும், சுன்னத்தான மிஃராஜ் நோன்பையும் நோற்கிறேன் என்று நிய்யத் செய்யவும் ..

 *மிஃராஜ் பயணம்*

•┈•✿❁ ﷽ ❁✿•┈• 

கண்மணி நாயகம் ﷺ அவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்த பதினொன்றாம் வருடம் ரஜப் மாதம் பிறை 27 ஆம் நாளன்று திங்கட்கிழமை நாயகம் ﷺ அவர்களது பாட்டனார் அபூதாலிப் அவர்களுடைய மகளார் உம்மு ஹானிஃ  என்பவருடைய வீட்டில் துயில் கொள்ளும் போது வானவர் கோமான் ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது தலைமையில் ஒருசில மலக்குமார்கள் வருகை புரிந்தார்கள்.பின்னர்  நாயகம் ﷺ அவர்களை ஜம்ஜம் கிணற்றுக்கு அருகாமையில் கொண்டு சென்று பூமான் நபி ﷺ அவர்களுடைய திரு இதயத்தை எடுத்து ஜம் ஜம் நீரால் கழுவி அதில் இறை ஞானத்தை நிரப்பினார்கள்.

பின்னர் மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து பைத்துல் முகத்தஸை நோக்கியுள்ள பயணம்.இடையில்  பேரீத்தம் பழ மரங்கள் நிறைந்த ஓர் இடத்தை அடைந்தார்கள்.ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நாயகம் ﷺ அவர்களிடம் அந்த இடத்தில் இறங்கி தொழுமாறு கேட்டுக் கொண்டார்கள். நாயகம் ﷺ அவர்கள் இறங்கி தொழுகை நடத்தி திரும்பி வந்தார்கள்.பின்னர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நாயகம் ﷺ அவர்களிடம் நாயகமே! தாங்கள் தொழுத அந்த இடம் எதுவென்று அறிவீர்களா..?

நாயகம் ﷺ அவர்கள் : இல்லை...

ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) : அதுதான் தாங்கள் ஹிஜ்ரா பயணம் வருவதற்காக இறைவன் தேர்ந்தெடுத்த தைபா (மதீனா) என பதிலளித்தார்கள்.

{ நூல் : அல் அன்வார் }

Sunday 4 February 2024

அப்தழியத்

*அய்மா ஏ அர்பாக்களது அகீதா*

இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்கப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர்கள்  முதலாவது  ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه ,பின்னர் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه ,அதன் பின்னர் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه , அதன் பின்னர் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் رضي الله عنه ".

📚 *பிக்ஹுல் அக்பர்*

இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் கிலாபத் குறித்தும் அப்தழியத் குறித்தும் நவின்றார்கள் ,

" நமது வரிசைப்பிரகாரமாகிறது  அபூபக்கர் رضي الله عنه ,உமர் رضي الله عنه , உஸ்மான் رضي الله عنه ,அலீ رضي الله عنه " .

📚 *அல் இக்திகாத்,இமாம் பைஹகீ* رضي الله عنه

இமாம் மாலிக் رضي الله عنه அவர்களிடம் ஷெய்கன்களது அப்தழியத் குறித்து வினவப்பட்ட பொழுது  அன்னார்  , " ஸெய்யிதினா அபூபக்கர், மற்றும் ஸெய்யிதினா உமர் ஆகியோரது அப்தழியத் குறித்து சிறிதும் சந்தேகம் இல்லை " என்று நவின்றார்கள்.

📚 *ஷரஹ் உஸுல் இக்திகாத் அஹ்லுஸ் ஸுன்னா*

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் رضي الله عنه அவர்களிடம் ஸஹாபா பெருமக்களை நேசிப்பதாக  கூறி அவர்களிடையே தரஜாக்களில் பாகுபாடு மாட்டேன் என்று கூறும் நபர் பற்றி கேட்கப்பட்டது . அன்னார் , " குலபாயே ராஷிதீன்களது வரிசைப்பிரகாரம் அபூபக்கர் رضي الله عنه , உமர் رضي الله عنه ,உஸ்மான் رضي الله عنه மற்றும் அலீ رضي الله عنه ஆகியோருக்கு முன்னுரிமை அளிப்பது ஸுன்னத் " என்று நவின்றார்கள்.

📚 *அல் ஸுன்னாஹ் இப்னு ஹிலால்*

இதுவே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் தின் கொள்கை.இதற்கு மாற்றமாக கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்குப் பின்னர் தலைசிறந்தவர்கள் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه என்பவர்கள் வழிகெட்ட கொள்கையினர் ஆவர்.

Saturday 6 January 2024

ஹபீபின் மஹ்பூப்

🌹ஹபீபின் மஹ்பூப் 🌹

கலீபத ரஸூல்லல்லாஹ் ,ஸித்தீகுல் அக்பர், அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்கள் ஜமாதுல் ஆகிர்,பிறை 22,ஹிஜ்ரி 13  அன்று வபாத் ஆனார்கள்.

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்கள் தமது இறுதி நேரத்தில் ,பூமான் நபி  ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழாஷரீபின் முன் தமது உடலை வைத்து, " அல்லாஹ்வின் தூதரே !   அபூபக்கர் தங்களது திருச்சன்னிதானம் வர அனுமதி கோருகின்றேன்.ரவ்ழா ஷரீபின் கதவுகள் திறக்கபட்டால் ,என்னை கண்மணி நாயகம்  ﷺ அவர்களது சங்கைமிகும் கப்ருஷரீப் அருகே அடக்கம் செய்யவும்,இல்லையென்றால் ஜன்னத்துல் பகீயில் அடக்கம் செய்திட வேண்டும் " என்று வஸீயத் செய்தார்கள்.

ஷெய்குல் இஸ்லாம் இமாம் பக்ருத்தீன் ராஜி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் , 

" அபூபக்கர் ஸித்தீக் அவர்களது ஜனாசா ,கண்மணி நாயகம்  ﷺ அவர்களது  புனித மிகும் ரவ்ழா ஷரீபிற்கு முன்னர் வைக்கப்பட்டு ,வஸீயத்தின் பிரகாரம் அனுமதி கோரப்பட்டது.' அஸ்ஸலாமு அலைக்கும் ,யா ரஸூல்லல்லாஹ் ! அபூபக்கர் இங்கு உள்ளார்' .ரவ்ழா ஷரீபின் கதவுகள் தானாக திறந்தது. ரவ்ழா ஷரீபில் இருந்து ,' நேசரை நேசரிடம் அனுப்பி வையுங்கள்.தமது நேசரை சந்திக்க நேசர் ஆர்வமுடன் உள்ளார் ' என்று கூறப்பட்டது .


📚 தப்ஸீர் கபீர்,ஸூரா கஃப்,வசனம் 9,பக்கம் 88,பாகம் 21.

📚கஸாயிஸுல் குப்ரா,இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ

📚தாரீக் மதீனத் திமிஷ்க்,இமாம் இப்னு அஸாகிர் رَحِمَهُ ٱللَّٰهُ

📚 லிசான் அல் மீசான்,ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ رَحِمَهُ ٱللَّٰهُ

📚கன்சூல் உம்மால்,இமாம் முத்தக்கி ஹிந்தி رَحِمَهُ ٱللَّٰهُ

📚நுஸ்கத் அல் மஜாலிஸ்,அஸ் ஸபூரி رَحِمَهُ ٱللَّٰهُ

📚ஸீரா அந்நபவிய்யா,இமாம் ஹலபி رَحِمَهُ ٱللَّٰهُ

📚 ஜாமிஆ கராமாதில் அவ்லியா,இமாம் யூசுபுந்நபஹானி رَحِمَهُ ٱللَّٰهُ 

இச்சம்பவம் மூலம் கண்மணி நாயகம்  ﷺ அவர்கள் ஹயாத்துந்நபியாக இருக்கின்றார்கள் என்பதும்,இதுவே ஸஹாபா பெருமக்களது அகீதா என்பதும் தெளிவாக தெரிகின்றது 

Friday 5 January 2024

நபிமார்களுக்குப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர்!

🌹நபிமார்களுக்குப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர் 🌹

அறிவின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப்  كرم الله وجهه அவர்கள் கூபாவின் மிம்பரில் நின்று தப்தீழிகளுக்கு (  ஷெய்கைன்களது அப்தழீயத்தை மறுப்பவர்கள்)  அறைகூவல் விடுக்கின்றார்கள் 

" நிச்சயமாக கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்குப் பின்னர் மனிதர்களில் தலைசிறந்தவர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்களும்,பின்னர் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் ஆகியோர் தான்" .

📚 முஸ்னத் அஹ்மது,ஹதீஸ் # 833-837 ,ஸஹீஹ் ஸனது

Monday 1 January 2024

இமாம் ஷாபிஈயும் வஸீலாவும்

🌹இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه வும்,வஸீலாவும் 🌹

இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " 
நான் இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்களிடம் இருந்து பரக்கத் பெறுவேன் ,இன்னும் தினமும் அவர்களது மக்பராவை ஜியாரத் செய்வேன். எப்பொழுதாவது எனது குறிப்பிட்ட தேவைகள் இருக்கும் போது ,இரண்டு ரக்அத்துகள் தொழுது ,பின்னர் இமாமுல் அஃலம் அவர்களது மக்பராவிற்கு வந்து ,அல்லாஹ்விடம் எனது தேவைகளை முறையிடுவேன். சிறிது நேரத்தில்  எனது தேவைகள் நிறைவேறி விடும் " 

📚 இமாம் கதீப் அல் பக்தாதி رَحِمَهُ ٱللَّٰهُ, தாரீக் பக்தாத் ,பாகம் 1 ,பக்கம் 134
Related Posts Plugin for WordPress, Blogger...