ஹதீத் எண் : 4
Friday, 25 December 2020
Wednesday, 16 December 2020
தவஸ்ஸுல் (வஸீலா ) - 3
ஏந்தல் நபி صلى الله عليه وآله وسلم அவர்களின் நேரடி மற்றும் வெளிரங்கமான உத்தரவு :
Monday, 17 August 2020
Monday, 27 July 2020
Friday, 24 July 2020
Thursday, 23 July 2020
Tuesday, 21 July 2020
Wednesday, 15 July 2020
Tuesday, 7 July 2020
Wednesday, 1 July 2020
Tuesday, 30 June 2020
Thursday, 25 June 2020
Tuesday, 23 June 2020
Monday, 8 June 2020
வஸீலா - 2
ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத் رحمه الله
இஸ்த்திஆனத்தும், தவஸ்ஸுலும் ஒன்றே :
அல்லாஹ்தான், நாடப்பட்ட அசல் பொருளாக இருப்பதால் அவனை வஸீலாவாக்க முடியாது. ஏனெனில் வஸீலாவானது அவனது சன்னிதானத்தில் அவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொருளாக இருக்க வேண்டும். அது சாலிஹான மனிதராக இருந்தாலும் சரி. அல்லது சாலிஹான அமல் ஆக இருந்தாலும் சரி. அதைத்தான் வஸீலாவாக்க முடியும்.
அத்துடன் அந்த சாலிஹான மனிதரிடம் இஸ்த்திஆனத்தும் (உதவி தேடுவதும் ) ஆகுமானதே. மேலும் வஸீலா என்பதும் இஸ்த்திஆனத் என்பதும் வெவ்வேறு பதவாக இருந்தாலும் இரண்டின் கருத்தும் ஒன்றுதான். இதுபற்றி அல்லாமா தகியுத்தீன் சுப்கி رحمه الله அவர்கள் தமது ' ஷிஃபாவுஸ் ஸகாம்' என்னும் நூலில் 175 ஆவது பக்கத்தில் கூறுகின்றனர்.
" நாயகம் ﷺ அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை குறித்து கேட்கப்படுவதற்குரிய நிலையோ, அல்லது அதன் வகை பற்றியோ சொல்லப்பட்டு, அப்பொருள் என்ன நோக்கத்திற்காக கேட்கப்பட்டது என்பது தெளிவாகப்பட்டால் அவ்வாறு கேட்கப்பட்டதை தவஸ்ஸுல் என்றோ , தஷப்புஃ என்றோ, இஸ்திஃகாதா என்றோ , தஜவ்வுஹ் என்றோ , தவஜ்ஜுஹ் என்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஏனெனில் இவ் வாக்கியங்கள் அனைத்துக்கும் உரிய கருத்தும் ஒன்றுதான். "
தொடர்பின் வகைகள் :
உலமாக்கள் தொடர்புடைய வகைகளை இரு வகையாக பிரிக்கின்றனர். ஒன்று ஹகீகத்துக்குரிய எதார்த்தமான அறிவு. மற்றொன்று மஜாஸியத்தான எதார்த்தமற்ற அறிவு. இதில் யதார்த்தமான அறிவுக்குரிய விளக்கமானது, ஒரு செயலுக்குரிய தொடர்பை ஒரு பண்பின் பக்கமாக தொடர்பு படுத்துதல்.
உதாரணமாக " அன்பத்தல்லாஹுல் பக்ல - அல்லாஹ் பயிர்களை முளைக்க வைத்தான் " என்பதாகும். இதில் பயிர்களை முளைக்க வைத்தல் என்பது அல்லாஹ்வுடைய பண்பாகும். இச்செயலை அப்பண்புக்குரிய தாத்தின் பக்கமாக தொடர்பு படுத்தப்படுவதால் அதைத்தான் எதார்த்தமான அறிவு என்று சொல்லப்படும்.
இனி எதார்த்தமற்ற மஜாஸியத்தான அறிவுக்குரிய விளக்கமானது, ஒரு செயல் யாருடைய பண்பை சார்ந்ததாக இருக்கிறதோ அதை விட்டுவிட்டு அதனோடு தொடர்புடைய ஒரு பொருளின் பக்கமாக திருப்பப்பட்டால், அதை குறித்த ஏதாவது ஒரு அடையாளம் காணப்பட்டால், உதாரணமாக ஒரு செயலை காலத்துடனோ அல்லது ஒரு இடத்துடனோ அல்லது ஒரு காரணத்தின் பக்கமோ திருப்பப்பட்டால் அதாவது, அமீர் ஒரு நகரத்தை உருவாக்கினான் என்று சொல்லப்படுவதை போல.
இதில் அமீர் என்பவன் ஒரு காரணம் மட்டுமே. அவனது கட்டளையின் பெயரில் நகரம் உருவாக்கப்பட்டது அவ்வளவுதான். இவ்வாறு கட்டிடம் உருவாக்கப்படுவது தொடர்பை மஜாஸியாக அமீர் என்பானுடன் இணைத்துப் பேசப்பட்டதால் இதனை மஜாஸி என்று சொல்லப்படும்.
இன்னும் மஜாஸியத்தை ஆதாரபடுத்துபவன் சில போது அதை சொல்லைக் கொண்டும், சிலபோது சைக்கினையைக் கொண்டும் பேசுவான். இதில் சைக்கினையைக் கொண்டு செல்வதற்குரிய உதாரணத்தை அல்லாமா தஃப்தாஸானி அவர்கள் தமது ' அஹ்வாலுல் அஸ்னாத் ' என்னும் நூலில் இவ்வாறு கூறுகின்றனர்,
" ஒரு ஏகத்துவவாதியிடமிருந்து பருவம் பயிரை முளைக்க வைத்ததென்னும் சொல் வெளிப்படுமாயின் அதை மஜாஸி என்று சொல்லப்படும். ஏனெனில் ஏகத்துவவாதியின் நம்பிக்கையானது பயிரை முளைக்க வைத்தல் என்பது எதார்த்தத்தில் பருவத்துடைய பண்பு அல்ல
என்பதாகும்.
ஆனால் இதே வார்த்தையை அல்லாஹ்வை ஏற்காத ஒருவன் சொல்வானாயின் அதை ஹகீகத்தென்று என்று சொல்லப்படும்."
மேலும் அல்லாமா தஃப்தாஸானி அவர்கள் கூறுகின்றனர்,
“ இதில் காபிருடைய சொல்லானது அச்செயல் எதார்த்தத்தில் யாருடைய பண்பை சார்ந்ததோ அவரை நோக்கி சொல்லப்பட்டதல்ல. மாறாக அதற்கு அன்னியமான பொருளை நோக்கி சொல்லப்பட்டதாகும் ,ஆதலால் அதை மஜாசி என்று சொல்ல முடியாது. காரணம் அதை அவன் எதார்த்தம் என்று கருதுகின்றான். அதாவது மருத்துவர் நோயாளியை சுகப்படுத்தினார் என்று சொல்வதை போல.”
இதுகுறித்த விரிவான விளக்கமானது, மருத்துவர் நோயாளியை சுகப்படுத்தினார் என்னும் காபிருடைய சொல்லானது எதார்த்தத்தை கருதி சொல்லப்பட்டதாகும். ஏனெனில் அவன் அல்லாஹ்வுடைய செயலின் தாக்கத்தை ஒப்புக் கொண்டவன் அல்ல. இனி இதே வார்த்தையை ஓர் இறைநம்பிக்கையாளன் சொல்வானாயின் அதை மஜாஸி என்று சொல்லப்படும். ஏனெனில் அவன் இறைவனை விசுவாசத்தவன் என்பதுதான் அதற்குரிய காரணமாகும்.
இந்நிலையில் அவன் ஒரு நோயாளியின் சுகத்தை ஒரு மருத்துவருடன் இணைத்து செல்வதற்குரிய காரணமானது, மருத்துவர் நோயாளியின் சுகத்திற்கு ஒரு காரணமாக மட்டுமே இருக்கிறார் ,ஆதலால் காரணத்தைத் தான் அந்த இறை நம்பிக்கையாளன் சுட்டிக் காட்டுகின்றான். மற்றபடி யதார்த்தத்தில் சுகத்தைத் தருபவன் அல்லாஹ் என்பதே அவனுடைய அகீதாவாகும் .
ஆக இதுவரை நாம் சொல்லிக்காட்டிய விளக்கத்தை கொண்டு இஸ்த்திஆனத் என்பது என்னவென்பதை தெளிவாக விளங்கி இருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். ஏனெனில் நபிமார்களிடமும் , வலிமார்களிடமும் உதவி தேடுபவர் ஒரு முஃமினாக இருந்தால், அவன் முஃமின் தான் என்பதற்கு அவனுடைய பார்வையில், கேட்கப்படும் உதவியை நிறைவேற்றித் தருபவன் அல்லாஹ் தான் என்பது அவனுடைய நம்பிக்கையாகும். இந்நிலையில் அவன் நபிமார்களையும்,வலிமார்களையும் தனது உதவிக்கு ஒரு காரணமாகவும்,வஸீலாவாகவும் தான் நினைக்கிறான்.
அடுத்து சிராஜுல் ஹிந்த் அல்லாமா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி رحمه الله அவர்கள் 'இய்யாக நஸ்த்தஈன' என்னும் வசனத்திற்கு உரிய விரிவுரையில் ....
“ இந்த இடத்தில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இறைவனல்லாத அவனது படைப்புகள் இடம் உதவி தேடுவோர் அவர்களை ஒருவர் வஸீலாவாகவோ அல்லது இறை வெளிப்பாட்டின் ஒரு துறையாகவோ கருதாமல் உதவி தேடுவராயின் அது ஹராமாகும்.
அவ்வாறின்றி உதவி தேடப்பட்ட வரை இறைவனுடைய வஸீலா என் அவனது வெளிப்பாட்டுக்குரிய மழ்ஹர் என்றோ எண்ணியவராக எதார்த்தத்தில் உதவுபவன் அல்லாஹ்தான் என்று நம்பி உதவி தேடுவானாயின் இது ஷரீயத்தில் அனுமதிக்கப்பட்டதும் இறைவனை அறிந்து கொள்வதற்கும் உரிய பாதையாகும். இவ்வாறான உதவியை நபிமார்களும், வலிமார்களும் இறைவனல்லாத படைப்புகளிடம் தேடியுள்ளனர்."
“ எந்தெந்த காரியங்களை குறித்து நபிமார்கள் இடமும், ஸாலிஹீன்களிடமும் அவர்களின் ஜீவிய காலத்தில் கேட்கப்பட்டதோ உதாரணமாக பிரார்த்தனை ஷபாஅத் போன்றவைகளைக் குறிப்பிடலாம். அவைகளை அவர்களது மறைவுக்குப் பின்னரும் கேட்பது ஷிர்க் ஆகாது.
இனி எந்தெந்த காரியங்கள் இறைவனுக்கு மட்டும் சொந்தமானவைகளாக இருக்கின்றதோ, எவைகள் நபிமார் மற்றும் வலிமார்களின் ஜீவிய காலத்தில் அவர்களிடம் கேட்கப்படவில்லையோ அவைகளை அவர்களது மறைவுக்குப் பின் கேட்பதுதான் ஷிர்க் ஆகும் .
ஆம், எவை எவை அவர்களுடைய ஜீவிய காலத்தில் அவரிடம் கேட்பது ஷிர்க்காக இருந்ததோ அவைகள் ஆகும். மற்றபடிமஜாஸியான காரியங்களை அவர்களோடு சம்பந்தப்படுத்தலாம் . எவ்வாறெனில் ஹஜ்ரத் ஈஸா நபியவர்கள், நான் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றேன் என்று சொன்னதை போன்றதாகும். இதுபற்றி ஷைகுல் இஸ்லாம் (இப்னு தைமிய்யா ) தனது பல்வேறு பத்வாக்களில் குறிப்பிட்டிருக்கின்றார்.
[நூல் - ஹத்யத்துல் மஹ்தி , பக்கம் 18, 19]
மேலும் மஜாஸியான தொடர்பைப் பற்றி நவாப் வஹீதுஸ் ஸமான் விவரிக்கும்போது,
“ அல்லாஹ் தனது வேதத்தில் ' வஇத் தக்லுகு மினத்தீனி ' என்னும் வசனத்தில் படைப்பையும் சுகம் அளிப்பதையும்ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடுமஜாஸியாக இணைத்துப் பேசுகின்றான். இதைக் கொண்டு யாராவது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ்வுடைய கட்டளை கொண்டு அவர்கள் இறந்து போனவரை உயிர் பெற்றுத் தரவேண்டும் என்று கேட்பாராயின் அது ஷிர்க் ஆகாது.
இதுபோன்றே யாராவது ஒருவர் உயிரோடு உள்ள வலியிடமோ அல்லது நபியிடமோ அல்லது அவர்களின் ஆன்மாக்கள்ளிடமோ அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு தனக்கொரு பிள்ளை தர வேண்டும் என்றோ அல்லது தனது நோயைத் தீர்க்க வேண்டும் என்றோ கேட்பாராயின் இதுவும் ஷிர்க் ஆகாது . "
[நூல் - ஹாஷியா ஹத்யத்துல் மஹ்தி ,பக்கம் 19]
தீர்ப்பு :
மேற்கண்ட விளக்கத்தை கொண்டு நபிமார்களிடமும்,வலிமார்களிடமும் நமது நாட்டங்களையும் தேவைகளையும் கேட்பது குப் ரோ அல்லது ஷிர்கோ ஆகாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால் இன்று நம்மிடையே உள்ள வஹாபிகள் இதில் உள்ள நுணுக்கத்தை விளங்காது எடுத்ததற்கெல்லாம் குப்ரு என்றும்ஷிர்க் என்றும் பத்வா கொடுத்து வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
மேலும் எதார்த்தத்தில் ஒருவரது நாட்டத்தை நிறைவேற்றுபவன், ஒருவரின் துன்பத்தைப் போக்குபவன் அல்லாஹ் தான் என்பது வெள்ளிடைமலை. இந்நிலையில் அவனிடம் நபிமார்கள் மற்றும் வலிமார்களின் வஸீலாவைக் கொண்டு நமது தேவைகளையும் நாட்டங்களையும் கேட்பதுதான் அழகானதும் , விரும்பத்தக்கதுமாகும். இன்னும் நபிமார்களிடம்வலிமார்களிடமும் கேட்பது உண்மையில் அல்லாஹ்விடம் தான் கேட்டதாகும் .ஆதலால் இதைப் புரிந்து கொண்டால் இஸ்லாமியருக்கிடையே உள்ள பூசல்கள் வெகுவாக குறைந்துவிடும்.
Saturday, 6 June 2020
வஸீலா - 1
ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத் رحمه الله
இஸ்த்திஆனத்தும் தவ்வஸ்ஸுலும் :
ஒவ்வொரு மனிதனும் தனது இயற்கை நிலையில் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் இறை சிருஷ்டிகளின் உதவி ஒத்தாசை தேடுபவன் ஆகவே படைக்கப்பட்டுள்ளான். இந்த நியதிக்கு மாறாக ஒருவன் , நான் எந்த ஒரு சிறு உதவியும் இன்றி சுயமாக வாழ முடியும் என்று சொல்வானாயின் அவன் ஒரு ஊருக்குள் இருப்பதை விட்டு விட்டு மலைகளும் குகைகளும் நிறைந்த ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியை தேடிச் சென்று விட வேண்டும் என்று அவனுக்கு நாம் ஆலோசனை வழங்குவோம். ஏனெனில் குடியிருக்கும் வீட்டுக்கும் வாகனத்திற்கு அங்குதான் எந்த ஒரு அவசியமும் இருக்காது.
மேலும் ஒரு காரியத்தின் எதார்த்தவாதி என்பவன் இரட்சகனாகிய அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. இந்நிலையில் படைப்புகளில் நின்றும் ஏதாவது ஒன்று யாருக்காவது உதவி செய்யுமாயின் அது உண்மையில் அவர்களுடைய உதவி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படைப்புகளின் உதவி என்பது இறைவனுடைய உதவியை வெளிப்படுத்தும் ஒரு காரணம் மட்டுமே. அவ்வாறின்றி யாராவது நான் இறைவன் இன்றி சுயமாக உதவி செய்வேன் என்று சொல்வாராயின் இது அறவே சாத்தியம் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்வதோடு இப்படிப்பட்ட நம்பிக்கைதான் இஸ்லாமியக் கொள்கையில் ஷிர்க் எனும் இணை வைத்தலாகும்.
இமாம் அஹ்மத் ரிழா கானும் இஸ்த்திம்தாதும் :
இமாம் அஹமது ரிழா கான் பாழில் பரேல்வி رحمه الله அவர்கள் கூறுகின்றார்கள்,....
" உதவி தேடுதல் என்னும் இந்த இஸ்த்திஆனத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லாஹ் அல்லாத அவனது சஷ்டி பொருட்கள் இடம் உதவி தேடுவதை என்று கூறுகின்றனர். அதாவது உதவி செய்பவனை ஒரு சுயநலவாதி என நம்பி உதவி தேடுவதாம்.
இந்நிலையில் ஒரு நோயை நீக்க மருத்துவரிடம் சென்று உதவி தேடுவதும், அல்லது ஒரு மருந்தை உட்கொள்வதும், அல்லது வரும்போது ஒரு செல்வந்தன் இடமோ, அரசனிடம் சென்று உதவி தேடுவதும், இவ்வாறு நீதி கிடைக்க ஒரு நீதிபதியிடம் சென்று உதவி தேடுவதும், இதேபோன்று அன்றாடம் சின்னச் சின்ன விஷயங்களில் உதவி தேடுவதும் ஆகிய இவைகளை எல்லாம் ஷிர்க் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வஹாபிகள் கூட ஒவ்வொரு நாளும் தனது மனைவி மக்களிடம், வேலைக்காரர்களிடம் இதைச் செய், அதைச் செய், உணவை சமைத்து வை என்றெல்லாம் உதவித் தேடத்தான் செய்கின்றனர் ஆகையால் இது ஒன்று தான் என்பதில் அறவே சந்தேகம் இல்லை.
மேலும் இவை அனைத்தும் இறைவனுடைய எந்த உதவியுமின்றி சுயமாக செய்யப்படுகின்றது என நம்பப்படும் ஆயின் இதுதான் ஷிர்க்கும்,குப்றுமாகும் . அவ்வாறின்றி உதவி செய்பவரை இறைவனுடைய உதவி வெளிப்படும் துறை என்றோ, அல்லது வஸீலா என்றோ, அல்லது வாஸிதா என்றோ நம்பப்படுமாயின் இப்படிப்பட்ட உதவி நபிமார் ,வலிமார் போன்றோரிடம் தேடப்பட்டால் மட்டும் எப்படி ஷிர்க்காகும் ?
சுருங்கக்கூறின் எந்த ஒரு படைப்பையாவது இறைவனுடைய பெரருளின்றி, நல்லுதவியின்றி சுயமாக உதவ முடியும் என நம்பப்படுமாயின் அதுதான் ஷிர்க்கும் ,குப்ருமாகும் குற்றமாகும். அவ்வாறு இன்றி படைப்பானது அல்லாஹ்வைக் கொண்டு உதவி செய்வதில் அவனுடைய மழ்ஹர் என்றோ அல்லது வாஸிதா என்றோ அல்லது வஸீலா என்றோ அல்லது ரஹ்மத் என்று நம்பப்பட்டால் இதுதான் இஸ்லாமிய கொள்கையின் சரியான நிலையாகும்.
Subscribe to:
Posts (Atom)