Tuesday, 21 July 2020

வஸீலா-9

ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி 

ஹழ்ரத்  رحمه الله






வஸீலாவும் நபித்தோழர்களும் : 

இமாம் புகாரி رحمه الله அவர்கள் அறிவிக்கின்றனர். ஹழரத் ஸெய்யிதினா உமர் رضي الله عنه‎  அவர்கள் மழைக்குரிய துஆவை இவ்வாறு கேட்பவர்களாயிருந்தனர்....




"ஹழ்ரத் அனஸ் பின் மாலிக்  رضي الله عنه‎    கூறுகின்றனர். எப்போது மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டாலும் ஹழ்ரத் உமர் பின் கத்தாப்   رضي الله عنه‎  அவர்கள் ,ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ்   رضي الله عنه‎  அவர்களின் வஸீலாவைக்  கொண்டே மழைக்காக துஆ செய்வார்கள். இன்னும் அவர்கள் துஆ செய்யும்போது, யா அல்லாஹ் ! நாங்கள் உனது சன்னிதானத்தில் கண்ணியத்திற்குரிய நபியவர்களது சிறிய தந்தையின் வஸீலாவை முன்னிருத்துகிறோம். எங்களுக்கு மழையை இறக்கியருள்வாயாக எனக் கேட்பார்களாயின் அவர்களுக்கு மழை இறக்கியருளப்படுவதுண்டு. "
[நூல் : புகாரி, பாகம்-1, பக்கம்-137]

இந்த ஹதீஸை குறித்து இப்னு தைமிய்யாவும் ,அவரை
பின்பற்றுவோரும், ஹழ்ரத் உமர்   رضي الله عنه‎   அவர்கள்
நபி صلى الله عليه و سلم அவர்களுக்குப் பதிலாக அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் 
வஸீலாவாக்கியதற்குரிய காரணமானது, நபியவர்கள் மறைந்து
விட்டதால் மறைந்து விட்டவரை வஸீலாவாக்குதல் ஜாயிஸில்லை என்பதற்காகவே அவ்வாறு செய்தனரென்று கூறுகின்றனர். இது மிகப்பெரும் தவறாகும்.

ஏனெனில் இந்த ஹதீஸை கொண்டு நல்ல அமல் மட்டும்
வஸீலாவாக்குவதை விட நல்லோரை வஸீலாவாக்குவதே
ஏற்றமாகும் என்பதை நபித்தோழர்களின் வழிமுறை நமக்குப்
புலப்படுத்துகிறது என்பதுதான் உண்மையாகும். அத்துடன்
நபித்தோழர்கள் இணைந்து இந்த வஸீலாவை கேட்கின்றனர்.
அவர்களில் ஒருவர்கூட இதை ஆட்சேபிக்கவில்லை.

அடுத்து ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் رضي الله عنه  எப்படிப்பட்ட மகத்துவமுடையவர்கள் எனில் அவர்களையே வஸீலாவாக ஆக்கலாம். இருப்பினும் ஹழ்ரத் ஸெய்யிதினா  உமர் رضي الله عنه  அவர்கள் எப்படி கேட்கின்றனர் எனில், நாங்கள் எங்களது நபியுடைய சிறிய தந்தையின் வஸீலாவை முன்னிறுத்துகின்றோம்  என்று தான் கூறுகின்றனர். இது எதார்த்தத்தில் நபியவர்களையே  வஸீலாவாக்கியதாகும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாமா பதருத்தீன் ஜனியின் رحمه الله அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் رضي الله عنه   அவர்கள் ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் رضي الله عنه  அவர்களின்  வஸீலாவைக்  கொண்டு மிம்பரின் மீது துஆ செய்தனர். அதன்பின் ஹழ்ரத்  ஸெய்யிதினா அப்பாஸ்  رضي الله عنه  அவர்கள் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்  رضي الله عنه  அவர்களுடன் மிம்பரில் இருந்தவாறு இப்படிது ஆ செய்தனர்....
அதாவது


"பலாய்கள் பாவங்களின் காரணமாகவே இறங்குகின்றன.
இன்னும் அவை தவ்பாவைக்  கொண்டே தூரமாகின்றன. இவர்கள் என்னுடைய வஸீலாவைக்  கொண்டு உன்பக்கமாக திரும்பியுள்ளனர். காரணம் நான் உனது நபியுடன் தொடர்புள்ளவனாக இருக்கிறேன்."
[ நூல் : உம்தத்துல் காரி, பாகம் 7 பக்கம்-32]

ஹாபிழ் இப்னு அப்துல் பர்ரு  رحمه الله அவர்கள் ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் رضي الله عنه  வின் கூற்றை பற்றி எழுதுகின்றனர்.....



"எங்களுக்கு ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்  رضي الله عنه  அவர்களைக் கொண்டு
பல்வேறு அறிவிப்புகள் கிடைத்துள்ளன. அதாவது அவர்கள்
அப்பாஸ்  رضي الله عنهவோடு இஸ்த்திஸ்காவு
(மழைதொழுகைக்)காக வெளிக் கிளம்பியவர்கள் துஆ
செய்தார்கள். அதாவது, யாஅல்லாஹ்! நாங்கள் உனது நபி
صلى الله عليه و سلم அவர்களுடைய சிறிய தந்தையின் 
வஸீலாவைக்  கொண்டு உனது சமீபத்துவத்தை 
ஆசிக்கிறோம். அவர்களை  எங்களது ஷபீஆக ஆக்குகிறோம்.

ஆதலால் நீ அவர்களை கொண்டு உனது நபிக்காக எண்ணிப் 
பார்ப்பாயாக. எவ்வாறு நீ அவ்விரு குழந்தைகளுக்காகவும்
அவர்களின் தந்தையுடைய தன்மையின்காரணமாக பாதுகாப்
பளித்தாயோ" (மூஸா عليه السلام அவர்களின் காலத்தில்
கிழ்ரு عليه السلام அவர்கள் அக்குழந்தைகளின் விழப்போன 
சுவரை சரிப்படுத்தியது) அவ்வாறு என துஆ செய்தனர்."
[நூல்: இஸ்தீஆப், பாகம்-3, பக்கம்- 99 ]

இந்த ஹதீஸின் வாயிலாக ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ்  رضي الله عنه வின் வஸீலாவை கொண்டு துஆ செய்ததானது எதார்த்தத்தில் நபியவர்களையே வஸீலாவாக்கியதாகும் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

அத்துடன் அண்னால் நபி صلى الله عليه و سلم அவர்களை இறை சன்னிதானத்தில் வஸீலாவாக்குதல் என்பது முடிவாக்கப்பட்ட ஒரு விஷயமாகும். இதில் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்   رضي الله عنه  அவர்கள் நபியவர்களின் சிறிய தந்தை ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ்   رضي الله عنه  அவர்களை வஸீலாவாக்கியதன் மூலம் வஸீலா என்பது நபியவர்களுக்கு மட்டும் உரியதல்ல. மாருக நபியவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களின் தோழர்களையும் வஸீலாவாக்கலாம் என்பதையும்நாம் தெரிந்து கொள்கிருேம்.

ஏனெனில் யாரும் நபியவர்களை மட்டும்தான் வஸீலாவாக்க முடியும். மற்றவர்களை வஸீலாவாக்க முடியாதென்று சொல்லிவிடக் கூடாதல்லவா! இதற்காகவே ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்  رضي الله عنه அவர்கள் நபியவர்களின் சிறிய தந்தையை வஸீலாவாக்கிக் காட்டினர் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹழ்ரத் ஸுலைம் பின் ஆமிர் என்பார் அறிவிக்கின்றனர்.


"மழை இல்லாமல் போனபோது ஹழ்ரத் முஆவியா  رضي الله عنه  அவர்களும் திமிஷ்கை சேர்ந்தவர்களும்  துஆ செய்வதற்காக வெளியே கிளம்பினர் . பின்னர் முஆவியா அவர்கள் மிம்பரில் அமர்ந்த பொழுது , யஸீத் பின் அஸ்வத் எங்கே என்று கேட்க ,ஜனங்கள் அவரை அழைத்தனர் . அவர் துள்ளிக் குதித்தவராக வந்தார் . அவர் முஆவியா  رضي الله عنه  அவர்களின் கட்டளைக்கேற்ப மிம்பரின் மீதேறி அவர்களது காலடியில் அமர்ந்தார் .

அப்போது முஆவியா  رضي الله عنه  அவர்கள் , யா அல்லாஹ் ! இன்று நாங்கள் உனது சன்னிதானத்தில்எங்களில் சிறந்தவராகிய யஸீத் பின் அஸ்வத்துடைய சிபாரிசை முன்னிருக்கின்றோம் என்றவர்கள் , யஸீத் ! அல்லாஹ்வின் திருமுன் உன் கைகளை உயர்த்து என்று சொல்ல , அவர் தமது கைகளை உயர்த்தினார் . ஜனங்களும் தங்களின் கைகளை உயர்த்தினர் .(அதன்பின் துஆ செய்தனர் )  இருந்தப்போல் மேற்கு பக்கமிருந்து ஒருமேகம் கிளம்ப காற்றும் வீசத்துவங்கி மழை பெய்ய துவங்கிற்று . எதுவரையெனில் ஜனங்கள் தமது வீடுகளுக்கு செல்வதே சிரமமாகி விட்டது . " 
[ நூல் : தபகாத் ,பாகம் 7,பக்கம் 444]

மழைக்காக துஆ செய்யப்பட்ட இடத்தில் நபித்தோழர்களும் , தாபியீன்களும் இருந்தனர். அவர்களில் ஒரு ஸாலிஹான மனிதரை வஸீலாவாக்கி துஆ செய்ததை தவறென்று ஒருவர் கூட ஆட்சேபிக்கவில்லை,இப்படி ஒரு ஸாலிஹான  மனிதரை வஸீலாவாக்குவது ஆகுமானதே என்பதை இஜ்மாவான அவர்களது செயல் நமக்கு புலப்படுத்துவதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் . 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...