ஹதீத் எண் : 3
حدثنا أحمد بن منصور بن سيار حدثنا عثمان بن عمر حدثنا شعبة عن أبي جعفر المدني عن عمارة بن خزيمة بن ثابت عن عثمان بن حنيف
أن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم فقال ادع الله لي أن يعافيني فقال إن شئت أخرت لك وهو خير وإن شئت دعوت فقال ادعه فأمره أن يتوضأ فيحسن وضوءه ويصلي ركعتين ويدعو بهذا الدعاء اللهم إني أسألك وأتوجه إليك بمحمد نبي الرحمة يا محمد إني قد توجهت بك إلى ربي في حاجتي هذه لتقضى اللهم شفعه في
ஹழ்ரத் உத்மான் பின் ஹுனைப் رضي الله عنه அவர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டது , 'கண் பார்வையற்ற ஒரு நபர் நபிகள் நாயகம் صلى الله عليه وآله وسلم அவர்களிடம் வந்து கூறினார் , "நான் குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் ,நாயகமே ! ". அண்ணல் நபி ﷺ அவர்கள் கூறினார்கள், ' நீர் உமது மறுமை வாழ்வுக்கு வேண்டி வெகுமதியை சேமித்தால் ,அது உமக்கு நல்லது ,இல்லை நீர் விரும்பினால் ,நான் துஆ செய்கின்றேன் 'என்றார்கள் . அவர் 'துஆ செய்யுங்கள் 'என்று கூறினார் . நாயகம் ﷺ அவர்கள் ,அவரை சரியான முறையில் ஒளு செய்திட சொல்லி ,இரண்டு ரக்அத் தொழுது பின்னர் பின்வரும் துஆவை ஓதுமாறு பணித்தார்கள் , "அல்லாஹும்ம இன்னி அஸ் அலூக்க வ அதவஜ்ஜஹு இலைக்க முஹம்மத்தின் நபிய்யிர் ரஹ்மா . யா முஹம்மது இன்னி கத் தவஜ்ஜஹ்த்து பிக இலா ரப்பி பி ஹாஜத்தி ஹாதிஹி லிதுக்தா .அல்லாஹும்ம பஅஷ்ஷாபி ஹு பியா (யா அல்லாஹ் !, நான் உன்னிடம் கேட்கிறேன், கருணை நபி முஹம்மது ﷺ அவர்களின் பரிந்துரையின் காரணமாக நான் என் முகத்தை உன்னை நோக்கி திருப்புகிறேன். முஹம்மது ﷺ அவர்கள் , என்னுடைய இந்த தேவையைப் பற்றி உங்கள் பரிந்துரையின் காரணமாக நான் என் இறைவனிடம் திரும்பினேன். யா அல்லாஹ் !, என்னைப் பற்றிய நபி ﷺ அவர்களின்பரிந்துரையை ஏற்றுக்கொள் . ")
قوله ويتوسل إلى الله سبحانه بأنبيائه والصالحين أقول ومن التوسل بالأنبياء ما أخرجه الترمذي وقال حسن صحيح غريب والنسائي وابن ماجة وابن خزيمة في صحيحه والحاكم وقال صحيح على شرط البخاري ومسلم من حديث عثمان بن حنيف رضي الله عنه أن أعمى أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ادع الله أن يكشف لي عن بصري قال أو أدعك فقال يا رسول الله أني قد شق علي ذهاب بصري قال فانطلق فتوضأ فصل ركعتين ثم قل اللهم أني أسألك وأتوجه إليك بمحمد نبي الرحمة الحديث وسيأتي هذا الحديث في هذا الكتاب عند ذكر صلاة الحاجة وأما التوسل بالصالحين فمنه ما ثبت في الصحيح أن الصحابة استسقوا بالعباس رضي الله عنه عم رسول الله صلى الله عليه وسلم وقال عمر رضي الله عنه اللهم إنا نتوسل إليك بعم نبينا
இமாம் இப்னு அல்ஜர்ஸி அவர்கள் ' அல்லாஹ்விடம் அன்பியாக்கள் மற்றும் இறை நேசர்கள் ஆகியோரை இடைபொருளாக கொண்டு உதவி தேட வேண்டும் ' என்று கூறியதை காழி ஷவ்கானி பின்வருமாறு விளக்குகிறார் , 'நான் கூறுகின்றேன் அல்லாஹ்விடம் அன்பியாக்கள் மற்றும் இறை நேசர்கள் ஆகியோரை இடைபொருளாக கொண்டு உதவி தேடுவது (நிரூபிக்கப்பட்டுள்ளது) இமாம் திர்மிதி ஸஹீஹ் ஹசன் கரீப் என்று விவரித்தது கொண்டும் , இன்னும் நஸயீ ,இப்னு மாஜா விவரித்தது கொண்டும் மற்றும் இப்னு குஸைமா தன்னுடைய ஸஹீஹ் ஹாகிம் கூறுகிறார் : ' புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகியோரின் அளவுகோல்படி ஸஹீஹ் , உத்மான் பின் ஹுனைப் رضي الله عنه அவர்களுடைய ஹதீத் ; ஒரு பார்வையற்றவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து , 'நான் என் பார்வை குறைபாடுள்ளவன் , எனவே எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் ' என்று கூறினார் . நபிகள் நாயகம் صلى الله عليه وآله وسلم கூறினார்கள் , ' நீர் ஒழு செய்து விட்டு , இரண்டு ரக்அத் தொழுத பின்னர் , 'யா அல்லாஹ் ! நான் எனது தூதர் முஹம்மது அவர்களின் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன் , உன்னிடம் முகம் திரும்புகிறேன் .' இந்த ஹதீஸ் பாபு ஸலாத் அல் ஹாஜத் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இன்னும் இறைநேசர்களை தவஸ்ஸுலாக கொண்டு உதவி தேடுவது , ஸஹீஹ் புஹாரியில் ஸஹாபா பெருமக்கள் கண்மணி நாயகத்தின் صلى الله عليه وآله وسلم சிறிய தந்தை ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ் رضي الله عنه அவர்களைக் கொண்டு மழை பொழிய வேண்டி உதவி தேடிய ஹதீதின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது . அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் رضي الله عنه அவர்கள் கூறினார்கள் , ' யா அல்லாஹ் ! நாயகம் அவர்களது சிறிய தந்தை அப்பாஸ் அவர்களைக் கொண்டு உன் பக்கம் திரும்புகின்றோம் '.
[ துஹ்பதுல் தாக்கிரீன் , பக்கம் 48 ]
இன்னும் அவர் கூறினார் ,
அல்லாஹ் வழங்குகிறான் ,எடுத்துக் கொள்கிறான் என்ற நம்பிக்கையில் கண்மணி நாயகம் அவர்களை வஸீலாவாக கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடுவதன் ஆதாரம் இந்த ஹதீதில் உள்ளது . அல்லாஹ் எதை நாடினானோ அதுதான் நடக்கும் , அவன் எதை நாடவில்லையோ அது நடக்காது .
[ துஹ்பதுல் தாக்கிரீன் , பக்கம் 138 ]
No comments:
Post a Comment