ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி
ஹழ்ரத் رحمه الله
ஒருவேளை அபூதாலிப் இன்று இருந்திருப்பாராயின் அவர்
நபியவர்களை வஸீலாவாக்குதல் :
அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்கள் பிறக்கும் முன்னும் , பிறந்த பின்னும், அவர்கள் இவ்வுலகில் இருக்கும் போதும் , இவ்வுலகை விட்டு மறைந்த பின்னும் , பர்ஸகுடைய உலகிலும் , நாளை மறுமையில் மஹ்ஷரிலும் வஸீலாவாக்குதல் ஜாயிஸாகும் -அனுமதிக்கப்பட்டதாகும் . இவ்விஷயத்தில் இப்னுல் கைய்யிம் என்பார் கூறுவதைப் பாருங்கள் ,....
"இவ்வுலகிலும் ,மறுஉலகிலும் , ஈடேற்றத்திற்கும் , வெற்றிக்குரிய பாதையானது அண்ணல் நபியவர்களின் கையில்தான் உள்ளது . பின்னும் குறிப்பாக இறை திருப்தியானது நபியவர்களின் திருக்கரத்தை தவிர வேறு இல்லை ."
[நூல் : மஷாரிக்குல் அன்வார் ,பக்கம் 59]
நபியவர்கள் தோன்றும் முன் வஸீலா :
"அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் رضي الله عنه அவர்கள் அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர் . ஸெய்யிதினா ஆதம் நபி عليه السلام அவர்களில் தவறு நிகழ்ந்த போது அவர்கள் இறைவனிடம் ,இறைவா ! நான் முஹம்மத் அவர்களின் வஸீலாவைக் கொண்டு உன்னிடம் பிரார்த்திக்கின்றேன் .எனது தவறை மன்னித்து விடுவாயாக என்று கேட்க ,அதற்கிறைவன் ; ஆதமே ! நீர் முஹம்மதை எவ்வாறு தெரிந்து கொண்டீர் ? அவரை இன்னும் நான் படைக்ககூட இல்லையே ! என்று சொல்ல ,
அதற்கவர்கள் ; இரட்சகா ! நீ என்னை உன்னுடைய குத்ரத்துடைய கரம் கொண்டு படைத்து எனக்குள் ரூஹை ஊதிய பொழுது நான் எனது தலையை உயர்த்திப் பார்த்தேன் . அப்போது அர்ஷின் வாயிலில் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது . அப்போது உனது பெயரோடு படைப்புகளிலெல்லாம் உனக்கு மிகவும் பிரியமானவரது பெயரைத்தான் நீ எழுதியிருப்பாய் என்பதை நான் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல ,
அதற்கிறைவன் ; ஆதமே ! நீர் உண்மை சொன்னீர் . அவர் எல்லா படைப்புக்களிலும் எனக்கு பிரியமானவரே . நீர் அவர் பொருட்டால் ,அவரது வஸீலாவைக் கொண்டு கேட்டதால் உமது தவறை மன்னித்தேன். அவர் (முஹம்மத் ) இல்லையெனில் உம்மை படைத்திருக்கவே மாட்டேன் என்று சொன்னான் . "
[ நூல் : அல் முஸ்தத்ரக் , பாகம் 2,பக்கம் 615 . இன்னும் இந்த ஹதீஸின் ஸனது ஸஹீஹானதாகும் ]
அடுத்து இப்னு கைய்யிம் என்பார் எழுதுகிறார் ,.....
"ஹழ்ரத் இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுவதாவது ,' கைபர் பகுதியைச் சேர்ந்த யூதர்கள் ஃகத்பான் என்னும் கோத்திரத்தாருடன் யுத்தம் செய்து கொண்டிருந்தனர் . அப்போது ஒருமுறை நடந்த போரில் யூதர்கள் தோற்றுப் போனபொழுது அவர்கள் இறைவனிடம் , இறைவா ! நாங்கள் உம்மி நபி صلى الله عليه و سلم அவர்களின் வஸீலாவைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றோம் . நீ இறுதி காலத்தில் யாரை எங்களுக்கு மத்தியில் அனுப்புவதாக வாக்களித்துள்ளாயோ அவர் பொருட்டால் கேட்கின்றோம் . எங்களுக்கு ஃகத்பான் கோத்திரத்தாருக்கு எதிராக உதவி செய்வாயாக என்று கேட்க , அடுத்து நடைபெற்ற போரில் யூதர்கள் அவர்களை வெற்றி கொண்டனர் .
இனி இறுதி நபியவர்கள் வருகை தந்தபோது யூதர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அதுபோது இறைவன் , 'வ கானு மின் கப்லு யஸ்தஃப்திஹுன அலல் லதீன கஃபரு ' - இதற்கு முன்னரெல்லாம் அவர்கள் நிராகரிப்போர் மீது தங்களுக்கு வெற்றியைத் தருமாறு , அதாவது முஹம்மத் அவர்களின் பொருட்டாலே எனக் கேட்பவர்களாக இருந்தனர் என்று கூறுகிறான்.
[நூல் : ஹிதாயத்துல் ஹயாரா ,பக்கம் 493]
வள்ளல் நபி வாழும் போது வஸீலா :
"இமாம் தப்ரானி رحمه الله முஃஜிம் கபீரிலும் , முஃஜிம் அஸ்வத்திலும் ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர் .அதாவது அமீருல் முஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்களின் அன்னை ஹழ்ரத் பாத்திமா பின்த் அஸத் رضی اللہ عنھا அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தபோது , அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்கள் ஹழ்ரத் உஸாமா பின் ஸைத் رضي الله عنه ,ஹழ்ரத் அபூ அய்யூப் அன்ஸாரி رضي الله عنه மற்றும் ஒரு கருப்பு நீக்ரோ அடிமையை கப்ரு வெட்டச் சொன்னார்கள் . பின்னர் கப்ரு இடுப்பளவுக்கு தோண்டப்பட்ட போது நபியவர்கள் தாமே கப்ருக்குள் இறங்கி கப்ரை தோண்டியதோடு மண்ணையும் அள்ளினர். கப்ரு தோண்டப்பட்ட பின் தாஹா நபியவர்கள் அக்கப்ருக்குள் படுத்துக் கொண்டு ,...
அல்லாஹ்வே ஜீவியத்தையும் ,மரணத்தையும் தருகின்றான் . அவன் ஜீவியமுள்ளவன் . அவனுக்கு மரணமில்லை . இறைவா ! எனது அன்னை பாத்திமா பின்த் அஸதை மன்னித்து விடுவாயாக . இன்னும் அவருடைய கப்ரை விசாலாமாக்குவாயாக . அவரது நபியின் பொருட்டாலும் அவருக்கு முன்னுள்ள நபிமார்களின் பொருட்டாலும்.நிச்சயமாக நீ மிகப்பெரும் கிருபையாளன் . " என்று பிரார்த்தித்தனர்.
[நூல் :வஃபாவுல் வஃபா ,பாகம் 3, பக்கம் 899]
இந்த ஹதீஸில் நபியவர்கள் வாழ்ந்தபோதும் மற்ற நபிமார்கள் மறைந்த பின்னரும் இறைவனிடம் வஸீலாவாக ஆக்கப்படுவதை பாருங்கள் . அடுத்து அல்லாமா நூருத்தீன் ஸம்ஹுதி கூறுகின்றனர் ,...
" அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்களிடம் வஸீலாவானது சிலபோது நேரடியாக ஒரு பொருளை குறித்து கேட்கப்படுகிறது . இதன் கருத்து நபியவர்களின் துஆவும் ,ஷபாஅத்தும் இறைவனுடைய சன்னிதானத்தில் காரணமாக்கப்படுவதற்குரிய ஆற்றலுக்குரியதாக இருப்பதால் இது நபியவர்களின் துஆவை கேட்பதாகும். கேட்கப்படும் முறை வேறு மாதிரியாக இருந்தாலும் சரியே. இம்முறையில் தான் ஹழ்ரத் ரபீஆவுடைய துஆவும் அமைந்துள்ளது. அதாவது ,நான் தங்களிடம் சுவர்க்கத்தில் தங்களின் தோழமையை கேட்கின்றேன் என்பதாம். இதன் கருத்து நபியே தாங்கள் இந்த நாட்டம் நிறைவேறுவதற்குரிய காரணமாகவும் சிபாரிசுக்காரராகவும் ஆக வேண்டுமென்பதாம் ".
[நூல் :வஃபாவுல் வஃபா ,பாகம் 34 பக்கம் 5]
அடுத்து ஹழ்ரத் ஸவாத் பின் காரிப் رضي الله عنه அவர்கள் நபியவர்களிடம் வேண்டுவதை பாருங்கள்,.....
"சங்கை மிகுந்த பரிசுத்தமானவர்களின் மைந்தரே ! தாங்கள் அல்லாஹ்வுடைய சன்னிதானத்தில் எல்லா ரஸுல்மார்களையும் விட மிகவும் நெருக்கமான வஸீலாவாகும் . எந்த நாளில் ஸவாத் பின் காரிப்புக்கு ஷஃபாஅத்து செய்பவர் யாரும் இருக்க மாட்டாரோ ,அந்த நாளில் தாங்கள் தான் எனது ஷபீஆக இருப்பீர்கள் "
[ நூல் : முக்தஸர் ஸீரதுர் ரஸூல் , பக்கம் -69 , அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி ]
அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்கள் தாயிபிலிருந்து திரும்பிய பொழுது ஜூஃரானா என்னுமிடத்திற்கு வந்து சேர்ந்தனர் . அப்போது நபியவர்களுடன் 'ஹவாஸீன்' கோத்திரத்தைச் சேர்ந்த குழந்தைகளும்,பெண்களுமாய் மொத்தம் ஆறாயிரம் பேர் கைதிகளாக இருந்தனர். இதில் ஒட்டகம் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.
அதுபோது ஹவாஸீனுடைய கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் தழுவியவராக நபியவர்களிடம் வருகை தந்து , ' அல்லாஹ்வின் தூதரே , எங்களின் மீது இரக்கம் காட்டுங்கள் என்று வேண்ட ; அதற்கு நபியவர்கள்; கைதிகள் அல்லது பொருட்கள் இவ்விரண்டில் ஏதாவதொன்றை தேர்ந்தெடுங்களென்று சொல்ல , அதற்கவர் ; எங்களுக்கு கைதிகள் தான் வேண்டுமென்று சொல்ல , அதற்கு நபியவர்கள் என்னுடைய மற்றும் பனு முத்தலிபுடைய கைதிகள் அனைத்தும் உங்களுக்குரியதாகும் . மற்றபடி பங்கிடப்பட்ட கைதிகளை நீங்கள் பெறுவதற்கு நான் சொல்வதைப் போல செய்யுங்கள் .அதாவது ....
"நான் ஜனங்களோடு ளுஹரை தொழுது முடித்ததும் நீர் எழுந்து நின்று , நாங்கள் ரஸூலுல்லாஹி அவர்களிடம் கேட்கிறோம் . அவர்கள் எங்களுக்காக முஸ்லிம்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் . இவ்வாறே முஸ்லிம்களும் எங்களுக்காக நபியவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் . எங்களது குழந்தைகள் மற்றும் பெண்களின் விஷயத்தில் என்று சொல்ல வேண்டும் . அதுபோது நான் உங்களுக்கு அருள் புரிவேன் . அத்துடன் உங்களுக்காக சிபாரிசும் செய்வேன் என்றனர் ."
[ நூல் : அஸ்ஸீரத்துன் நபவிய்யா , பாகம் 2 ,பக்கம் 306 ]
அவ்வாறே அவரும் செய்ய , பெரும்பான்மையான தோழர்கள் நபியவர்களைப் பார்த்து ,இறைத்தூதரே ! எங்களிடம் உள்ள அனைத்துமே உங்களுடையது தான் என்று சொல்ல ,அதற்கு நபியவர்கள் ஒவ்வொரு கைதிக்கும் பகரமாக ஆறு ஒட்டகைகள் வழங்கப்படும் என்றனர் .இதன்முலம் அக்கோத்திரத்தாருக்கு எல்லா கைதிகளும் திரும்ப கிடைத்தனர்.
அப்போது இச்சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஹழ்ரத் ஸுஹைர் பின் ஸுரூர் رضي الله عنه அவர்கள் , " உம்னுன் அலைனா ரஸூலுல்லாஹி ஃபில் கரமி , ஃபஇன்னகல் மர்வு நர்ஜூஹூ வ நன்தழிரு - யா ரஸூலல்லாஹ் ! எங்களின் மீது கருணை காட்டுங்கள் . நீங்கள் எப்படிப்பட்ட மனிதரெனில் உங்களின் பேரருளைத் தான் நாங்கள் நம்பியிருக்கிறோம் ,எதிர்பார்க்கவும் செய்கிறோம் " என்ற கவிதையை பாடினார் .
[ நூல் : அர்ரவ்ழுல் உன்ப் , பாகம் 2 ,பக்கம் 306 ]
அடுத்து பனுபக்ர் மற்றும் குஜாஆ கோத்திரத்தாருக்கிடையே இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்தே போர் நடந்து கொண்டிருந்தது. ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொது பனுபக்ர் கோத்திரத்தார் குறைஷியரோடு சேர்ந்து கொண்டனர் .
இது போன்றே குஜாஆ கோத்திரத்தார் நபியவர்களோடு சேர்ந்துகொண்டனர் . அப்போது பனுபக்ருடைய கோத்திரத்தார் இத்தருணத்தை பயன்படுத்திக் கொண்டு குறைஷியரோடு சேர்ந்து குஜாஆவுடைய கோத்திரத்தார் மீது போர் தொடுத்து விட்டனர் .
அப்போது அம்ர் பின் ஸாலிம் குஜாயி என்பார் நாற்பது நபர்களை அழைத்துக் கொண்டு நபியவர்களிடம் உதவி கேட்பதற்காக மதீனா நோக்கி புறப்பட்டார் . இதுகுறித்து இமாம் தப்ரானி முஃஜிம் ஸஃகிரில் உம்முல் முஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதா மைமூனா رضی اللہ عنھا அவர்களைக் கொண்டு அறிவிக்கிறார் .....
"அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்கள் ஒழு செய்யுமிடத்தில் மூன்றுமுறை 'லப்பைக்' -ஹாழிரானேன் என்றும் , 'நுஸிர்த' -உங்களுக்கு உதவி செய்யப்பட்டது என்றும் நான் சொல்லக் கேட்டேன் . அப்போது நான் நபியவர்களை நோக்கி ,தாங்கள் மூன்றுமுறை 'லப்பைக்' என்றும், நுஸிர்த என்றும் சொல்லக்கேட்டேன். அதாவது ஒரு மனிதரிடம்

உரையாடுவதை போல தாங்கள் பேசிக் கொண்டிருந்தீர்கள்.
என்ன? ஒழு செய்யுமிடத்தில் தங்களோடு யாராவது இருந்தார்களா? எனக்கேட்க, அதற்கு நபியவர்கள்; பனு கஃபுடைய
கவிதையாளர் ஒருவர் என்னிடம் உதவிதேடி என்னை அழைத்தும்
கொண்டிருந்தார். இன்னும் அவர்களுக்கு எதிராக குறைஷிகள்
பனு பக்ருடைய கோத்திரத்தாருக்கு ஆதரவாக உதவி செய்கின்றனர் எனப்பாடினார் என்பதாக கூறினர். மூன்று நாட்களுக்குப்
பின் நபியவர்கள் தமது தோழர்களுக்கு மஸ்ஜிதில் பஜ்ருடைய
தொழுகையை தொழ வைத்தனர். அப்போது கவிதையாளர்
அக்கவிதையை பாடிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன்".
[ நூல்: முக்தஸர் வீரத்துர் ரஸுல், பக்கம் -333. ஆசிரியர்:
அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அப்துல் வஹாப் நஜ்தி]
(கவிதை பாடிய இவரும் ஒரு நபித்தோழரே. இவர்தான் மூன்று
நாட்களாக தொடர்ந்து நபியவர்களிடம் கவிதை மூலமாக
உதவி தேடிக் கொண்டிருந்தார். இறுதியில் இவரது வேண்டுதல்
ஏற்கப்பட்டது.)
ஹழ்ரத் உஸ்மான் பின் ஹுனைப் رضي الله عنه அவர்கள்
அறிவிக்கின்றனர். அந்தகரான ஒரு நபித்தோழர் நாயகம்
அவர்களின் தர்பாருக்கு வருகைதந்து நபியவர்களிடம் தனது கண்பார்வைக்காக துஆ செய்யுமாறு வேண்டினார். அது போது நபியவர்கள் அவரை நோக்கி, நீர் விரும்பினால் நான் துஆ செய்கிறேன். அல்லது நீர்
விரும்பினால் பொறுமையை கைக்கொள்ளும். பொறுமை
தான் உமக்கு சிறந்தது எனக்கூற, அதற்கவர்; துஆ செய்ய
வேண்டுமென்று சொன்னார். அதுகேட்ட நபியவர்கள், நல்லது.
ஒழு செய்து இரண்டு ரக்அத்தை தொழும். அதன்பின் இந்த
"யா அல்லாஹ் ! உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும் உன் பக்கமாக உனது ரஹ்மத்துக்குரிய நபியாகிய முஹம்மதை கொண்டு கேட்கிறேன். யா முஹம்மத் ! நான் உங்களைக் கொண்டு எனது நாட்டத்திற்காக என்னுடைய இரட்சகனின் பக்கமாக எனது முகத்தை திருப்புகிறேன். யா அல்லாஹ்!
எனது நாட்டத்தை நிறைவேற்றி வைப்பாயாக. எனது விஷயத்தில் நபியவர்களின் ஷபாஅத்தை ஏற்றுக் கொள்வாயாக . "
[நூல்: அல்முஸ்தத்ரக், பாகம்-1, பக்கம் 519.]
இமாம் தப்ரானியின் رحمه الله அறிவிப்பில் காணப்படுவதாவது,
நாங்கள் அங்கேதான் அமர்ந்திருந்தோம். அதிக நேரம்கூட
கடக்கவில்லை. அவர் (அந்தகர் ) வந்தார். அவருக்கு பார்வை
வந்து விட்டிருந்தது. அவரைபார்த்தபோது அவர் இதற்குமுன்
கண்பார்வையற்றவராக இருந்ததை போன்றே தெரியவில்லை.
"ஒருமுறை மதீவைாசிகள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டனர். அதுபோது அவர்கள் நபியவர்களிடம் வந்து முறையீடு செய்ய, நபியவர்கள் மீம்பரின் மீது ஏறி மழைக்காக துஆ செய்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் பலமான மழை கொட்டத் துவங்கிற்று. அப்போது மதீனாவை சேர்ந்தவர்கள் நபியவர்களிடம் வருகைதந்து, நாங்கள் மூழ்கிப்போய் விடுவோமென்று
சொல்லவே. நபியவர்கள் மீண்டும் துஆ செய்தனர். யாஅல்லாஹ்!
எங்களின் அக்கம்பக்கம் மழை பெய்யட்டும். எங்களின் மீது
வேண்டாமென்று சொல்ல, மேகங்கள் அக்கம்பக்கமாக
நகர்ந்து விட்டன. அதாவது பார்வைக்கு அது நிலவைப்
போலிருந்தது. அப்போது நபியவர்கள் சொன்னார்கள்.....
ஒருவேளை அபூதாலிப் இன்று இருந்திருப்பாராயின் அவர்
சந்தோஷமடைந்திருப்பார் என்று சொல்ல, அப்போது ஒரு நபித்தோழர் நபியவர்கள் நோக்கி, யா ரஸுலல்லாஹ் ! தங்களின் சைக்கினை அக்கவிதையை ஒத்திருக்கிறது. “சிவந்த
முகத்தையுடையவர். அவரது முகத்தின் வஸீலாவைக் கொண்டு
தான் மழைக்காக பிரார்த்திக்கப்படுகிறது. அனாதை மற்றும்
ஆதரவற்றோரை அரவணைப்பவரே! ஆதரிப்பவரே ! என்றார் .
[நூல்: அஸ்ஸீரத்துன் நபவிய்யா, பாகம்-1, பக்கம்-17,
ஆசிரியர்- இப்னு ஹிஷாம்]
No comments:
Post a Comment