ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி
ஹழ்ரத் رحمه الله
நமது உலமாக்கள் கூறுகின்றனர். ஸியாரத்துச் செய்பவர் தன்னை நபியவர்கள் முன் இருப்பதாக உணர வேண்டும்.எவ்வாறு நபியவர்கள் ஜீவியத்தோடு இருக்கும் காலத்தில் இருந்தார்களோ அவ்வாறு தான் இப்போதும் இருக்கிறார்களென்று எண்ண வேண்டும். ஏனெனில் அவர்களின் இருப்பிலும், இறப்பிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை. அவர்கள் தமது உம்மத்தை பார்த்துக் கொண்டுள்ளனர். இன்னும் அவர்களின் நிலைமைகள், எண்ணங்கள், நாட்டங்கள், சிந்தனை போன்ற அனைத்தையும் அவர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். அத்துடன் அவையனைத்தும் அவர்களுக்கு முன்னால் வெளியாகியுள்ளது. அதில் எந்தச் சந்தேகமுமில்லை. "
வள்ளல் நபியை வஸீலாவாக்குதல் :
இமாம் இப்னுல்ஹாஜ்
" ஸையிதுல் அவ்வலீனும், ஆகிரீனுமாகிய صلى الله عليه و سلم அவர்களை ஸியாரத்துச் செய்யும் போது மிக மிகப் பணிவாகவும்,தாழ்மை உணர்வோடும், இயன்றவரை மெதுவாகவும் ஸியாரத்துச் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஷஃபீஆகவும், ஷஃபாஅத்திற்கு
உரியவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் ஷஃபாஅத்
ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை. அவர்களிடம் தனது தேவையை முறையிடுபவர், அவர்களை வஸீலாவாக ஆக்குபவர், அவர்களின் தர்பாரில் ஆஜராகுபவர், அவர்களிடம் இஸ்த்திகாதாவையும், இஸ்த்திஆனத்தையும் தேடுபவர் கண்டிப்பாக வெறுங்கையாக திரும்பவேமாட்டார்.
காரணம் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் பூரணத்துவத்தின் குத்பாகவும் இறைவனது சாம்ராஜ்ஜியத்தின் மாப்பிள்ளையாகவும் இருக்கின்றனர்.
காரணம் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் பூரணத்துவத்தின் குத்பாகவும் இறைவனது சாம்ராஜ்ஜியத்தின் மாப்பிள்ளையாகவும் இருக்கின்றனர்.
இனி யார் அவர்களை வஸீலாவாக்குகின்றாரோ, அவர்களை காரணமாக்கி உதவி தேடுகிறாரோ, தனது நாட்டத்தை கேட்கிறாரோ அவர் வெறுங்கையாக திருப்பி அனுப்பப்படுவதேயில்லை. இது சோதித்து அறியப்பட்டதாகும். அதே நேரம் அவர்களது ஸியாரத்தில் ஒழுக்கம் மிகவும் முக்கியமாகும்.
நமது உலமாக்கள் கூறுகின்றனர். ஸியாரத்துச் செய்பவர் தன்னை நபியவர்கள் முன் இருப்பதாக உணர வேண்டும்.எவ்வாறு நபியவர்கள் ஜீவியத்தோடு இருக்கும் காலத்தில் இருந்தார்களோ அவ்வாறு தான் இப்போதும் இருக்கிறார்களென்று எண்ண வேண்டும். ஏனெனில் அவர்களின் இருப்பிலும், இறப்பிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை. அவர்கள் தமது உம்மத்தை பார்த்துக் கொண்டுள்ளனர். இன்னும் அவர்களின் நிலைமைகள், எண்ணங்கள், நாட்டங்கள், சிந்தனை போன்ற அனைத்தையும் அவர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். அத்துடன் அவையனைத்தும் அவர்களுக்கு முன்னால் வெளியாகியுள்ளது. அதில் எந்தச் சந்தேகமுமில்லை. "
[நூல்: அல்முத்கல், பாகம் -1, பக்கம் -252.]
அடுத்து அல்லாமா முல்லா அலிகாரி رحمه الله
" நீங்கள் பல்வேறு காரியங்களில் திகைப்படைந்து விடுவீர்களாயின் கப்ருடையவர்களை கொண்டு உதவி தேடுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது கப்ராளிகளின் வஸீலாவை கொண்டு துஆ செய்யுங்கள். அல்லாஹ்
நாட்டங்களை நிறைவேற்றுவான். "
[நூல்: ஷரஹ் முஸ்னத் இமாமுல் அஃழம், பக்கம்-114.]
அல்லாமா தகிய்யுத்தீன் ஸுப்கி رحمه الله
கூறுகின்றனர் ....
" அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்களை வஸீலாவாக்குவதும், அவர்களிடம் உதவி தேடுவதும், அல்லாஹ்விடம் அவர்களை ஷஃபாஅத்திற்குரியவர்களாக ஆக்குவதும் ஜாயிஸானதும் சுன்னத்துமாகும். மேலும் இது ஆகுமானதென்பதையும், சுன்னத் என்பதையும் முஃமின்கள் நன்றாக அறிவார்கள். இன்னும் இது நபிமார்கள், ரஸூல்மார்கள், ஸலபுஸ் ஸாலிஹீன்கள், உலமாக்கள் மற்றும் பாமர முஸ்லிம்களின் நடைமுறையுமாகும்.
எந்த மார்க்கவாதியும் இதை எவரும் மறுக்கவில்லை. இவ்வாறே எந்தக் காலத்திலும் இதை எவரும் மறுத்ததாக கேட்டதுமில்லை. எதுவரை எனில் இப்னு தைமிய்யா வந்தார். அவர்தான் இவ்விஷயத்தில் பேசத்துவங்கினார். அவர் பலவீனர்களையும் அறிவற்றவர்களையும் மோசம் செய்தார் "
[நூல்: ஷிபாவுஸ் ஸகாம், பக்கம் -150.]
அல்லாமா ஷைகுல் இஸ்லாம் இப்னு ஹஜர் அஸ்க்கலானி رحمه الله
கூறுகின்றனர் ....
" என்னுடைய ஸெய்யிதே ! அல்லாஹ்வுடைய ரஸுலே ! தங்களை
புகழ்ந்து பாடப்பட்ட எனது கவிதைகள் சிறப்புக்குரியதாகி
விட்டன. இன்று நான் உங்களின் கவிதையை பாடியுள்ளேன்.
நான எனக்கு உங்களின் ஷபாஅத்தின் மீது நம்பிக்கையுண்டு.
அங்கே என்னை கவனத்தில் கொள்ளுங்கள். பாவியான இந்த
அடியான் உங்களை வஸீலாவாக்கி இருக்கிறேன். அவனது
பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுமென்ற நம்பிக்கையுண்டு.
அச்சத்தின் காரணமாக அவனது இமைகளிலிருந்து கண்ணீர்
வழிந்து கொண்டுள்ளது "
[நூல்: அல்மஜ்மு.அத்துன் நப்ஹானிய்யா, பா -2, ப -391.]
எல்லா தரப்பினராலும் கண்ணியமான பார்வை கொண்டு
பார்க்கப்படும் இமாமுல் ஹிந்த் ஹழ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ்
தெஹலவி رحمه الله கூறுகின்றனர்....
" நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் என் மீது ரகசியங்களை வெளிப்படுத்தினர். இன்னும் அந்த வஸ்துக்களை பற்றியும் அறிவித்துத் தந்தனர். இன்னும் எனக்கு ஒட்டு மொத்தமாக மிகப் பெரும் உதவியும் செய்தனர். மேலும் நான் எனது தேவைகளின் போது எவ்வாறு உதவி தேட வேண்டுமென்பதையும் எனக்கு சொல்லித் தந்தனர்."
[நூல் : புயூழுல் ஹரமைன், பக்கம் -86.]
No comments:
Post a Comment