ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத் رحمه الله
இஸ்த்திஆனத்தும் தவ்வஸ்ஸுலும் :
ஒவ்வொரு மனிதனும் தனது இயற்கை நிலையில் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் இறை சிருஷ்டிகளின் உதவி ஒத்தாசை தேடுபவன் ஆகவே படைக்கப்பட்டுள்ளான். இந்த நியதிக்கு மாறாக ஒருவன் , நான் எந்த ஒரு சிறு உதவியும் இன்றி சுயமாக வாழ முடியும் என்று சொல்வானாயின் அவன் ஒரு ஊருக்குள் இருப்பதை விட்டு விட்டு மலைகளும் குகைகளும் நிறைந்த ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியை தேடிச் சென்று விட வேண்டும் என்று அவனுக்கு நாம் ஆலோசனை வழங்குவோம். ஏனெனில் குடியிருக்கும் வீட்டுக்கும் வாகனத்திற்கு அங்குதான் எந்த ஒரு அவசியமும் இருக்காது.
மேலும் ஒரு காரியத்தின் எதார்த்தவாதி என்பவன் இரட்சகனாகிய அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. இந்நிலையில் படைப்புகளில் நின்றும் ஏதாவது ஒன்று யாருக்காவது உதவி செய்யுமாயின் அது உண்மையில் அவர்களுடைய உதவி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படைப்புகளின் உதவி என்பது இறைவனுடைய உதவியை வெளிப்படுத்தும் ஒரு காரணம் மட்டுமே. அவ்வாறின்றி யாராவது நான் இறைவன் இன்றி சுயமாக உதவி செய்வேன் என்று சொல்வாராயின் இது அறவே சாத்தியம் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்வதோடு இப்படிப்பட்ட நம்பிக்கைதான் இஸ்லாமியக் கொள்கையில் ஷிர்க் எனும் இணை வைத்தலாகும்.
இமாம் அஹ்மத் ரிழா கானும் இஸ்த்திம்தாதும் :
இமாம் அஹமது ரிழா கான் பாழில் பரேல்வி رحمه الله அவர்கள் கூறுகின்றார்கள்,....
" உதவி தேடுதல் என்னும் இந்த இஸ்த்திஆனத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லாஹ் அல்லாத அவனது சஷ்டி பொருட்கள் இடம் உதவி தேடுவதை என்று கூறுகின்றனர். அதாவது உதவி செய்பவனை ஒரு சுயநலவாதி என நம்பி உதவி தேடுவதாம்.
இந்நிலையில் ஒரு நோயை நீக்க மருத்துவரிடம் சென்று உதவி தேடுவதும், அல்லது ஒரு மருந்தை உட்கொள்வதும், அல்லது வரும்போது ஒரு செல்வந்தன் இடமோ, அரசனிடம் சென்று உதவி தேடுவதும், இவ்வாறு நீதி கிடைக்க ஒரு நீதிபதியிடம் சென்று உதவி தேடுவதும், இதேபோன்று அன்றாடம் சின்னச் சின்ன விஷயங்களில் உதவி தேடுவதும் ஆகிய இவைகளை எல்லாம் ஷிர்க் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வஹாபிகள் கூட ஒவ்வொரு நாளும் தனது மனைவி மக்களிடம், வேலைக்காரர்களிடம் இதைச் செய், அதைச் செய், உணவை சமைத்து வை என்றெல்லாம் உதவித் தேடத்தான் செய்கின்றனர் ஆகையால் இது ஒன்று தான் என்பதில் அறவே சந்தேகம் இல்லை.
மேலும் இவை அனைத்தும் இறைவனுடைய எந்த உதவியுமின்றி சுயமாக செய்யப்படுகின்றது என நம்பப்படும் ஆயின் இதுதான் ஷிர்க்கும்,குப்றுமாகும் . அவ்வாறின்றி உதவி செய்பவரை இறைவனுடைய உதவி வெளிப்படும் துறை என்றோ, அல்லது வஸீலா என்றோ, அல்லது வாஸிதா என்றோ நம்பப்படுமாயின் இப்படிப்பட்ட உதவி நபிமார் ,வலிமார் போன்றோரிடம் தேடப்பட்டால் மட்டும் எப்படி ஷிர்க்காகும் ?
சுருங்கக்கூறின் எந்த ஒரு படைப்பையாவது இறைவனுடைய பெரருளின்றி, நல்லுதவியின்றி சுயமாக உதவ முடியும் என நம்பப்படுமாயின் அதுதான் ஷிர்க்கும் ,குப்ருமாகும் குற்றமாகும். அவ்வாறு இன்றி படைப்பானது அல்லாஹ்வைக் கொண்டு உதவி செய்வதில் அவனுடைய மழ்ஹர் என்றோ அல்லது வாஸிதா என்றோ அல்லது வஸீலா என்றோ அல்லது ரஹ்மத் என்று நம்பப்பட்டால் இதுதான் இஸ்லாமிய கொள்கையின் சரியான நிலையாகும்.
No comments:
Post a Comment