ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி
ஹழ்ரத் رحمه الله
"ஹழ்ரத் உத்பா رضي الله عنه என்பவர் கூறுகிறார் : நான் நாயகம் ﷺ அவர்களின் ரவ்ழாவிற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன் . அப்போது ஒரு காட்டரபி வந்தார் . வந்தவர் நபியவர்களை நோக்கி , அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ் ! அல்லாஹ் , சொன்னதை நான் கேட்டிருக்கிறேன் ,அதாவது 'அவர்கள் தங்கள் ஆன்மாவுக்கு தீங்கிழைத்துக் கொண்டவர்களாக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரிய நிலையில் (ரஸூலாகிய ) உம்மிடம் வந்தார்களாயின் ,அவர்களுக்காக நீரும் பாவமன்னிப்பு (சிபாரிசு ) கோருவீராயின் ,அவர்கள் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் ,கிருபையுடையவனாகவும் பெற்றுக் கொள்வார்கள்' எனக் கூறியிருப்பதால் நான் தங்களிடம் எனது பாவம் மன்னிக்கப்படுவதற்காக தங்களின் ஷபாஅத்தை நாடி வந்திருக்கிறேன் என்று சொன்னவர் ஒரு கவிதையையும் பாடினார் . அக்கவிதையானது ,....
ஏ ! நன்மைக்குரிய தாத்தே ! இங்குதான் அவருடைய புனித உடல்
அடக்கப்பட்டுள்ளது. அதனுடைய நறுமணத்தால்
இந்தப் பிரதேசமே கமழ்ந்து கொண்டிருக்கிறது. எதில் தாங்கள்
இருக்கிறீர்களோ அந்தகப்ருக்கு என்னுயிர் அர்ப்பணம். அதில்
பரிசுத்தமான மன்னிக்கிறவர் இருக்கிறார்.
என்று பாடியவர் அதன்பின் அங்கிருந்து சென்று விட்டார்.
உத்பா சொல்கிறார். அப்போது எனக்கு உறக்கம் வந்து
விட்டது. அதுபோது கனவில் காத்தமுன் நபி صلى الله عليه و سلم
அவர்களை கண்டேன். அவர்கள் என்னை
நோக்கி, உத்பாவே! அக்காட்டரபியிடம் போ. அல்லாஹ்
அவருடைய பாவத்தை மன்னித்து விட்டதாக அவருக்கு சுபச்
செய்தி சொல்லும் என்றனர்"
[நூல். தப்ஸீர் இப்னு கஸீர், பாகம்-1, பக்கம்-520]
அடுத்து அல்லாமா ஷம்ஸுத்தின் முஹம்மத் பின் ஜுஸ்ரி
ஷாபிஈ அவர்கள் ஒரு ஹதீஸை நமது பார்வைக்கு தருகின்றனர்.
அதாவது...
“ஒருவருடைய சவாரி திடீரென காணாமல் போய்விட்டால்
அவர், ஓ! அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் (என்று கூப்பிடுங்கள்
என்கின்றனர்.) இன்னும் உதவி தேவையெனில் ஓ!
அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்
(என்று மூன்றுமுறை அழையுங்கள்) இது சோதிக்கப்பட்ட
ஒன்றாகும் என்று கூறுகின்றனர்''
[நூல்: முஃஜிமுல் கபீர், இமாம் தப்ரானி]
அடுத்து ஹிஸ்னுல் ஹஸீன் என்னும் நூல் துஆக்களை
கொண்டு நிரப்பப்பட்ட ஒரு நூலாகும். இதனை அல்லாமா
ஜுஸ்ரி என்பார் முழுக்க முழுக்க ஸஹீஹான ஹதீஸ்கள்
கொண்டு தொகுத்திருக்கிறார். அவர் தமது நூலின் 2ம் பக்கத்தில்
மேற்கண்ட ஹதீலை குறித்து, "வ அக்ரஜத்ஹு மினல்
அஹாதீஸிஸ் ஸஹிஹா" எனக் கூறுகிறார்.
ஆதலால் எவர்கள் அல்லாஹ்வுடைய அடியார்களிடம்
உதவி தேடுவதை ஷிர்க்கென்று சொல்கிறார்களோ அவர்கள்
தமது மத்ஹபுப்படி மஆதல்லாஹ் நாயகம் ஸல்லல்லாஹு
அலஹி வஸல்லமவர்கள் ஷிர்க்கை கற்றுக் கொடுத்தார்கள்
என்றும், இஸ்லாமிய பெரியோர்கள் அனைவரும் காலங்காலமாக
ஷிர்க்கை தான் தமது சமுதாய மக்களுக்கு போதித்தார்கள்
கொன்றும் சொல்லவேண்டி வரும். அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக !
அர்த்தங்கள் புரட்டப்படுதல் :
அடுத்து காபிர்களை குறித்து இறக்கப்பட்ட வசனங்களை
மூஃமின்கள் மீதும், விக்ரஹங்களை குறித்து இறக்கப்பட்ட
வசனங்களை நபிமார் மற்றும் வலிமார்கள் மீதும் புரட்டுதல்
முஷ்ரிக்குகள் மற்றும் காரிஜிய்யீன்களின் வழக்கமாகும்.
மேலும் குர்ஆன் குறித்து இறைவன் திருமறையில் கூறும்
(அந்த குர்ஆனை கொண்டு) பெரும்பான்மையோரை
வழிகெடுக்கிறான். இவ்வாறே பெரும்பான்மையோரை
நல்வழிப்படுத்துகிறான்' என்பதாகக் கூறுகிறான் .
இதில் நபித்தோழர் பெருமக்கள் குர்ஆனுக்குரிய விளக்கத்தை வள்ளல் நபி வல்லல்லாஹ அவர்களிடம் கற்றதால் அவர்கள் ஈடேற்றமடைந்தனர். அதேநேரம் முஷ்ரிக்குகளும் முனாபிக்குகளும் காரிஜிய்யீன்களும் குர்ஆனை விளங்கிக்கொள்ள, தங்களின் அறிவை தமக்கு இமாமாக
ஆக்கியதாலேயே வழிகெட்டுப் போயினர்.
இப்போது இவர்கள் குர்ஆனை எப்படியெல்லாம் தங்களுக்குத் தோதாக
இப்போது இவர்கள் குர்ஆனை எப்படியெல்லாம் தங்களுக்குத் தோதாக
மாற்றி புரட்டுகின்றனர் என்பதை பாருங்கள்......
اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَـنَّمَؕ
"திடனாக நீங்களும் இன்னும் அல்லாஹ்வையன்றி உள்ள
நீங்கள் வணங்கிக் கொண்டுள்ளவைகளும் நரகின் எரிவிறகுகளே"
[சூரா-அன்பியா, வசனம்-98]
இந்த வசனத்தை குறித்து அல்லாமா ஷவ்கானி அவர்கள்
கூறும்போது.....
"இவ்வசனம் இறங்கியபோது மக்காவை சேர்ந்த
முஷ்ரிக்கீன்களிலுள்ள இப்னு ஜப்அரா என்பான் நபியவர்களை பார்த்து, அல்லாஹ்வையன்றி உள்ளவைகளில் மலக்குகளும் ஈலா நபியவர்களும் உஸைர் நபியவர்களும்அன்னைமர்யமும் வணங்கப்படுவதால் அவர்களும் தான்நரகத்திற்கு செல்வார்களென்று சொன்னபோது கீழ்கண்ட
வசனம் இறங்கிற்று"
[தப்ஸீர் பத்ஹுல்கதீர், பாகம்-3,4-429]
[தப்ஸீர் பத்ஹுல்கதீர், பாகம்-3,4-429]
اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ
"திடனாக எவரை குறித்து நமது வாக்குறுதி கொடுக்கப்
பட்டு விட்டதோ அவர்கள் நரகைவிட்டும் தூரமாக்கப்பட்டுள்ளனர்"
[சூரா அன்பியா, வசனம் -101]
[சூரா அன்பியா, வசனம் -101]
கொஞ்சம் கவனியுங்கள். மேற்கண்ட வசனத்தில் "வமா
தஃபுதூன" என்று வந்துள்ளதை கூட இவர்களால் புரிந்து
கொள்ள முடியவில்லை. ஆம், மா என்னும் பதம் அறிவற்ற ஜடப்பொருட்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிற ஒரு பதமாகும். நபிமார்களும் மலக்குகளும் ஜடப் பொருட்களல்லவே. இந்நிலையில் இவ்வசனம் அவர்களை குறிக்கின்றதென எப்படிச் சொல்ல முடியும்?
மேலும் இமாம் புகாரி رضي الله عنه அவர்கள்
ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்கள், கவாரிஜிய்யின்கள் இறைவனுடைய படைப்புக்களிலேயே மிக மோசமான, ஆகக் கெட்டவர்கள் என்று கூறுபவர்களாயிருந்தனர். ஏனெனில் அவர்கள் காபிர்கள் குறித்து இறக்கப்பட்ட வசனங்களையெல்லாம் முஃமின்களின் பக்கமாக புரட்டக் கூடியவர்களாயிருந்தனர் என்று கூறுகின்றனர்.
இப்பிரச்னையில் இஹ்ஸான் இலாஹி ஜஹீரும் காபிர்களை
குறித்து இறக்கப்பட்ட வசனங்களை முஸ்லிம்களின் மீதும், விக்ரமங்களை குறித்து இறக்கப்பட்ட வசனங்களை நபிமார்கள் மீதும் வலிமார்கள் மீதும் மாற்றிப் புரட்டுவதன் மூலம் இறைவனது நல்லடியார்கள் உதவி செய்ய மாட்டார்களென்றும் அவர்களிடம் உதவி கேட்க கூடாதென்றும் கூறுகிறார் .
இதனை இஹ்ஸான் இலாஹி ஜஹீர் காபிர்களிடமிருந்து கற்றுக் கொண்டாரா ? அல்லது காரிஜிய்யீன்களிடமிருந்து கற்றுக் கொண்டாரா ? என்பதை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும் . இன்னும் அவரால் புரட்டப்படுகின்ற ஒரு வசனத்தை பாருங்கள் ....
قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِۚ لَا يَمْلِكُوْنَ مِثْقَالَ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ
(நபியே நீர் கூறும்) அல்லாஹ்வையன்றி எவைகளை எண்ணிக் கொண்டிருகின்றீர்களோ அவைகளை அழையுங்கள். அவைகள் வானம் பூமியிலுள்ள ஒரு அணுவுக்குக் கூட அதிகாரியாகாது
[சூரா சபா,வசனம்-22]
இந்த வசனத்திற்கு அல்லாமா ஷவ்கானி தமது தப்ஸீரில்,..
இந்த வசனத்தில் இறைவனை நபியவர்கள் நோக்கி , நீங்கள் குறைஷிக் காபிர்களை அல்லது எல்லா காபிர்களையும் நோக்கி செல்லுங்கள் என்பதாக கூறுகிறார்கள் என்று விளக்கமளிக்கிறார் .
அடுத்து இஹ்ஸான் இலாஹி ஜஹீர் ஸாஹிபால் புரட்டப்படும் இன்னொரு
வசனத்தை பாருங்கள்,....
ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ ؕ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍؕ
"அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். சகல
ஆட்சிகளும் அவனுக்குரியதே! அவளையன்றி எவைகளை
நீங்கள் அழைக்கிறீர்களோ அவைகளுக்கு ஒரு அணுவளவும்
அதிகாரமில்லை"
[சூரா-ஃபாதிர், வசனம்-13]
இந்த வசனத்திற்கும் அல்லாமா ஷவ்கானி அவர்கள்
விளக்கமளிக்கும் போது.....
' "லா யஸ்மவூ துஆ அகும் " - அவைகள் உங்களின் அழைப்பை செவியேற்காது எனக் கூறப்பட்டதற்குரிய காரணமானது, அவைகள் கற்களாகுமாதலால் அவைகளால் எதையும் உணர முடியாது. இவ்வாறே தத்வூன - என்பதன் கருத்தானது, காபிர்களால் வணங்கப்பட்டு வந்த அறிவுள்ள பொருட்களாகிய மலக்குகளும் ஜின்களும் ஷைத்தான்களுமாகும் என்று கூறுகிறார். '
சிந்தித்துப் பாருங்கள் அல்லாமா காழி ஷவ்கானி
அவர்கள், மேற்கண்ட வசனத்தில் குறித்துக் காட்டப்படுகிற
வணங்கப்படும் பொருட்கள் என்பவை விக்ரஹங்களும்,ஷைத்தான்களும் என்கிறார் .ஆனால் ஜஹீர் ஸாஹிப் இந்த வசனத்தில் வணங்கப்படுபவை
நபிமார்களும்,வலிமார்களும் தானென்று திருகுரானுக்குரிய வசனத்தின் கருத்தையே புரட்டுகிறார் .
அடுத்து இதே வசனத்தில் அல்லாஹ், "வயவ்மல் கியாமத்தி யக்ஃபுருன பிஷிர்க்கிகும்- அப்பொய்தெய்வங்கள் அவர்கள் ஷிர்க் (இணை ) வைத்ததை மறுத்து விடுவார்கள்" , என்றும் கூறுகிறான். ஆனால் அதேநேரம் அண்ணல் நபி அவர்கள் மறுமையில் மஹ்ஷர்வாசிகளை நோக்கி, உங்களுக்காக ஷஃபாஅத்துச் செய்ய நாடி இருக்கிறேன் என கூறுவார்கள் என்பதாக ஸஹீஹ் முஸ்லிம், பாகம் 1 , பக்கம் 110ல் கூறுவதால் நபியவர்கள் இவ்வாறு சொல்வது முழுக்க முழுக்க தவறாகும். ஏனெனில் இவ்வசனத்தில் ஜஹீர் சாஹிபின் கூற்றுப்படி நபிமார்களும்,வலிமார்களும் உட்படுத்தப்படுவதால் உங்களுக்கு ஷஃபாஅத்து செய்வதற்காக நான் இருக்கிறேனென நபியவர்கள் சொல்லக் கூடாது .
அடுத்து இதே வசனத்தில் அல்லாஹ், "வயவ்மல் கியாமத்தி யக்ஃபுருன பிஷிர்க்கிகும்- அப்பொய்தெய்வங்கள் அவர்கள் ஷிர்க் (இணை ) வைத்ததை மறுத்து விடுவார்கள்" , என்றும் கூறுகிறான். ஆனால் அதேநேரம் அண்ணல் நபி அவர்கள் மறுமையில் மஹ்ஷர்வாசிகளை நோக்கி, உங்களுக்காக ஷஃபாஅத்துச் செய்ய நாடி இருக்கிறேன் என கூறுவார்கள் என்பதாக ஸஹீஹ் முஸ்லிம், பாகம் 1 , பக்கம் 110ல் கூறுவதால் நபியவர்கள் இவ்வாறு சொல்வது முழுக்க முழுக்க தவறாகும். ஏனெனில் இவ்வசனத்தில் ஜஹீர் சாஹிபின் கூற்றுப்படி நபிமார்களும்,வலிமார்களும் உட்படுத்தப்படுவதால் உங்களுக்கு ஷஃபாஅத்து செய்வதற்காக நான் இருக்கிறேனென நபியவர்கள் சொல்லக் கூடாது .
இப்படியொரு கருத்து இந்த வசனத்திற்கு கொள்ளப்பட்டால் இதோர்
மிகப்பெரிய தவறான நடைமுறைக்கு முன்னுதாரணமாகி விடும் .
எனவே மேற்கண்ட வசனம் அல்லாஹ்வுக்கு இணைவைக்கப்படும் விக்ரஹங்களைக் குறித்தும் ,ஜின் ஷைத்தான்களைக் குறித்தும் தான் பேசுகிறதென்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் .
பின்னும் எந்த ஒரு முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வுக்கு ஒருபோதும் சமமானவர்களாக எண்ணியதுமில்லை .நம்பியதுமில்லை .
இது போலவே மற்ற வசனங்களும் விக்ரஹங்களை குறித்தும் ,ஜின் ,ஷைத்தான்களை குறித்தும் தான் பேசுகிறதேயன்றி அவைகளை நபிமார்கள் மீதும் ,வலிமார்கள் மீதும் உதவிதேடும் விஷயத்தில் புரட்டுவது இவர்கள் எத்துணை விபரீத போக்குடையவர்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது .
எனவே மேற்கண்ட வசனம் அல்லாஹ்வுக்கு இணைவைக்கப்படும் விக்ரஹங்களைக் குறித்தும் ,ஜின் ஷைத்தான்களைக் குறித்தும் தான் பேசுகிறதென்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் .
பின்னும் எந்த ஒரு முஸ்லிமும் நபிமார்களையும் ,வலிமார்களையும் அல்லாஹ்வுக்கு ஒருபோதும் சமமானவர்களாக எண்ணியதுமில்லை .நம்பியதுமில்லை .
இது போலவே மற்ற வசனங்களும் விக்ரஹங்களை குறித்தும் ,ஜின் ,ஷைத்தான்களை குறித்தும் தான் பேசுகிறதேயன்றி அவைகளை நபிமார்கள் மீதும் ,வலிமார்கள் மீதும் உதவிதேடும் விஷயத்தில் புரட்டுவது இவர்கள் எத்துணை விபரீத போக்குடையவர்கள் என்பதை நமக்கு புலப்படுத்துகிறது .
அடுத்து இன்னொரு வசனத்தை பாருங்கள் ,....
اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِىَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِىْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ ؕ
"(நபியே!) நீர் கூறும் . அல்லாஹ் எனக்கு யாதொரு தீங்கும் இழைக்க நாடினால் (நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாத ) அவைகள் அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா ? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள் புரிய நாடினால் அவனது அருளை அவைகள் தடுத்து விடுமா என்ன?"
[சூரா-ஸுமர், வசனம்-38]
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் ஒருவருக்கு அருள்
புரியவோ அல்லது தீங்கிழைக்கவோ நாடினால் அதை எந்தப்
படைப்பும் தடுத்துவிட முடியாதென்று கூறுகிருன். இந்
நிலையில் இந்த வசனத்தை நபிமார்கள் மீதும் வலிமார்கள் மீதும்
எப்படி சம்பந்தப்படுத்த முடியும்?
ஏனெனில் கொஞ்சமும் அறிவில்லாத ஒரு முஸ்லிம்கூட இறைவனுடைய நல்லடியார்கள் அல்லாஹ்வுக்கு போட்டியாளர்களாகவோ அல்லது
ஏனெனில் கொஞ்சமும் அறிவில்லாத ஒரு முஸ்லிம்கூட இறைவனுடைய நல்லடியார்கள் அல்லாஹ்வுக்கு போட்டியாளர்களாகவோ அல்லது
சமமானவர்களாகவோ இருக்கிறார்களென்றோ அல்லது அல்லாஹ்
ஒருவருக்கு அருள்புரியவோ தீங்கிழைக்கவோ நாடும்போது
அதை அவர்கள் தடுத்து விடுவார்களென்றே சொல்வதில்லை.
இவ்விஷயத்தில் நம்முடைய நம்பிக்கையானது அவர்கள்
அல்லாஹ்வுடைய நேசத்திற்குரிய மிகப்பெரும் அந்தஸ்த்தில்
இருப்பதால் அவர்களின் கோரிக்கையையும் பிரார்த்தனை
யையும் அவன் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறான் என்பதே.
அடுத்து இன்னொரு வானத்தையும் பாருங்கள்.....
اِنْ يَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰـثًـا ۚ وَاِنْ يَّدْعُوْنَ اِلَّا شَيْـطٰنًا مَّرِيْدًا ۙ
அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவைகள் பெண்
(பெயருடையவை)களேயன்றி வேறில்லை . துஷ்ட ஷைத்தானை
யன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை
[ஸுரா நிஸா , வசனம் 117 ]
[ஸுரா நிஸா , வசனம் 117 ]
இவர்களுடைய ஈமானில் கொஞ்சங்கூட ரோஷம் என்பதே
இல்லையா என்ன அல்லது அது செத்துப் போய் விட்டதா?
இல்லையெனில் இப்படிப்பட்ட வசனங்களை நபிமார்களின்
மீதும் வலிமார்களின் மீதும் இட்டுக் கட்டுகிறார்களே ! "ஷைத்தானன் மரீத் " என்னும் வாக்கியத்தை நபிமார்கள் மீதும் வலிமார்கள் மீதும் புரட்டுவதற்கு முன் அல்லாஹ்வின் கோபத்தை குறித்தும்,அழிவை குறித்தும் இவர்கள் கொஞ்சமாவது அச்சப்படவேண்டாமா ? அல்லது மறுமை என்ற ஒன்று
வராதென்று இவர்கள் முடிவு செய்து விட்டார்களா?
மேலும் இஸ்த்தி ஆனத்தை மறுப்போர் "இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்த்தான்" என்னும் வசனத்தையும் தங்களின் கூற்றுக்குரிய மிகப்பெரும் ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். இனி இந்த வசனத்தை பொதுவானதோர் நிலைக்கு உட்படுத்தப்பட்டால் அந்நிலையில் அல்லாஹ்வையன்றி வேறு யாரிடமும் உதவி தேட முடியாது. அது உயிரோடிருப்பவராக இருந்தாலும் சரி. இறந்து போனவராக இருந்தாலும் சரி.
சமீபத்திலிருப்பவரோ, தூரத்திலிருப்பவரோ, மருத்துவரோ, போலிஸோ,
சமீபத்திலிருப்பவரோ, தூரத்திலிருப்பவரோ, மருத்துவரோ, போலிஸோ,
ஸவூதியோ, அமெரிக்காவோ யாராக இருந்தாலும் சரி
யாரிடம் உதவி கேட்டாலும் அது ஷிர்க்காகி விடும்.
இதுபற்றி நவாப் வஹீதுஸ்ஸமான் அவர்கள் கூறுவதை
பாருங்கள்.....
"நமது தோழர்களில் ஷவ்கானி சொன்னார். எந்தப் பொருள் ஒரு படைப்பின் சக்திக்கு உட்பட்டதாக இருக்கின்றதோ அதை அந்தப் படைப்பிடம் கேட்கலாம் என்பதில்யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இவ்வாறே எந்தப் பொருளில் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும்
அதிகாரமில்லையோ அதை அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்க வேண்டும். இந்நிலையில் திருக்குர்ஆனின் "இய்யாக நஸ்த்தஈன்" எனும் வசனத்துடைய கருத்தும் இதுதான்,இவ்விளக்கத்தை கொண்டு நமது தோழர்களில் எவரேனும் பொதுவாக அல்லாஹ் அல்லாத யாராக இருந்தாலும் அவரிடம்
உதவி தேடுவதை ஷிர்க்கென்று சொல்வாரேயாயின் அவர்
அறிவுக்கு பொருத்தமில்லாத ஒன்றை சொன்னதோடு வரம்பும்கடந்து விட்டாரென்று தான் சொல்லமுடியும் "
[ நூல் : ஹத்யத்துல் மஹ்தி ,பக்கம் 19 ]
[ நூல் : ஹத்யத்துல் மஹ்தி ,பக்கம் 19 ]
மேற்கண்ட ஷவ்கானியின் விளக்கத்தை பார்த்த பின்னரும்
"இய்யாக்க நஃபுது வ இய்யாக நஸ்த்தஈன்" என்னும் வசனம்
பொதுநிலையை குறிக்காது ஒரு குறிப்பான நிலையைத்தான்
குறிக்குமென்று மீண்டும் எவராவது வாதிப்பாரேயாயின்
அவர் ஸிராஜூல் ஹிந்த் அல்லாமா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ்
தெஹ்லவி அவர்களின் கருத்தாகிய ,ஒரு படைப்பை சுயமான ஒன்றென
நம்பி அதனிடம் உதவி தேடுவது ஹராமாகும்.அவ்வாறின்றி ஒரு படைப்பை இறைவனுடைய உதவி வெளிப்படும் ஒரு துறையென நம்பி உதவி தேடப்பட்டால் அது கூடுமென்பது மட்டுமல்ல.மாறாக அது எதார்த்தத்தில்
அல்லாஹ்விடம் தேடப்பட்ட உதவியேயாகும் என்பதை
ஒப்புக்கொள்ள வேண்டும் என்னும் கூற்றை எடுத்துப் பார்க்கட்டும் . இப்போது சொலலுங்கள் இந்த வசனம் நபிமார்கள் , வலிமார்கள் போன்றோரிடம் உதவி தேடுவதை எங்கே மறுக்கின்றது ?
இனி முப்ததீயின்களான இந்த வஹாபிகளால் எழுப்பப்படும் இன்னொரு ஆட்சேபணையையும் பாருங்கள் ,.....
" முஷ்ரிக்குகள் கூட கடல் பயணத்தின் போது அல்லாஹ்வை அழைத்துதான் உதவி தேடினர். ஆனால் இந்த அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்தவர்கள் தமது ஒவ்வொரு பயணத்திலும் அது கடல் பயணமானாலும் சரி தரை பயணமாயினும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துதான் உதவி தேடுகின்றனர் ."
[ நூல் : அல் பரேல்விய்யா , பக்கம்ம் -84 ]
மேற்கண்ட அல்லாமா அஷ்ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவியின் விளக்கத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துப் பாருங்கள் . நபிமார்களையும் , வலிமார்களையும் இறைவனுடைய உதவி வெளிப்படும் துறையென நம்பி உதவி தேடப்பட்டால் அவ்வுதவி எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் தேடப்பட்ட உதவி தானெனில் ஸுன்னத் வல் ஜமாத்தினர் கடலிலும் கரையிலும் கூட அல்லாஹ்விடம் தான் உதவி தேடுகின்றனர் என்பது தெளிவாகிறது. அதாவது அந்த நல்லோரின் வஸீவைக் கொண்டு உதவி தேடுகின்றனர் என்பதாம்.
ஆனால் முஷ்ரிக்குகள் அந்த நல்லோர்களை அல்லாஹ்வுக்கு அன்னியமானவர்களென கருதியதால் வேறு வழியின்று அவர்கள் அல்லாஹ்விடம் உதவி தேடினர். இந்நிலையில் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கை எந்த இடத்திலும் எந்த நிலையிலும் அல்லாஹ்வின் மீதுதான் உள்ளது. கைருல்லாஹ்வாகிய அல்லாஹ்வுக்கு அன்னியமானவர்கள் மீதல்ல.
இனி முப்ததீயின்களான இந்த வஹாபிகளால் எழுப்பப்படும் இன்னொரு ஆட்சேபணையையும் பாருங்கள் ,.....
" முஷ்ரிக்குகள் கூட கடல் பயணத்தின் போது அல்லாஹ்வை அழைத்துதான் உதவி தேடினர். ஆனால் இந்த அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்தவர்கள் தமது ஒவ்வொரு பயணத்திலும் அது கடல் பயணமானாலும் சரி தரை பயணமாயினும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துதான் உதவி தேடுகின்றனர் ."
[ நூல் : அல் பரேல்விய்யா , பக்கம்ம் -84 ]
மேற்கண்ட அல்லாமா அஷ்ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவியின் விளக்கத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துப் பாருங்கள் . நபிமார்களையும் , வலிமார்களையும் இறைவனுடைய உதவி வெளிப்படும் துறையென நம்பி உதவி தேடப்பட்டால் அவ்வுதவி எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் தேடப்பட்ட உதவி தானெனில் ஸுன்னத் வல் ஜமாத்தினர் கடலிலும் கரையிலும் கூட அல்லாஹ்விடம் தான் உதவி தேடுகின்றனர் என்பது தெளிவாகிறது. அதாவது அந்த நல்லோரின் வஸீவைக் கொண்டு உதவி தேடுகின்றனர் என்பதாம்.
ஆனால் முஷ்ரிக்குகள் அந்த நல்லோர்களை அல்லாஹ்வுக்கு அன்னியமானவர்களென கருதியதால் வேறு வழியின்று அவர்கள் அல்லாஹ்விடம் உதவி தேடினர். இந்நிலையில் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கை எந்த இடத்திலும் எந்த நிலையிலும் அல்லாஹ்வின் மீதுதான் உள்ளது. கைருல்லாஹ்வாகிய அல்லாஹ்வுக்கு அன்னியமானவர்கள் மீதல்ல.
இறுதியாக நவாப் வஹீதுஸ்ஸமான் அவர்கள் தாமே ஒரு
கேள்வியை உருவாக்கி அதற்கு அவரே பதிலும் தருவதை
பாருங்கள்...
கேள்வி ? விக்ரஹங்களிடமோ அல்லது சிலைகளிடமோ
பொதுவாக எந்த நிலையிலும் உதவ தேடுவது ஷிர்க்காகும்.
அது உயிரோடுள்ளவர்களிடம் கேட்கப்படுகிற பொருளாக
இருந்தாலும் சரியே. அவ்வாறாயின் நபிமார்கள் , வலிமார்களின்
ஆன்மாக்களிடம் மட்டும் அவர்கள் உயிரோடிருக்கும் போது
கேட்கப்பட்டவைகளை கேட்கலாமென்று எப்படி சொல்கிறீர் ?
பதில்: சிலை மற்றும் விக்ரஹங்களுக்குரிய சட்டம் என்பது
வேறு. அத்துடன் அவற்றை விட்டு ஒதுங்க வேண்டுமென்றும்
அவைகளை உடைத்தெறிய வேண்டுமென்றும் கட்டளையும்
இடப்பட்டுள்ளது. நபிமார்கள் , வலிமார்கள் சம்பந்தப்பட்ட விஷயம்
அப்படியல்ல. அவர்கள் உயிரோடுள்ள போது அவர்களிடம் கேட்கப்பட்ட பொருளை அவர்களது மறைவுக்குப் பின்னால் அவர்களிடம் கேட்பது அவர்களை கண்ணியப்படுத்துவதாகும். நாம் இதற்குமுன் இஸ்லாமிய மார்க்கத்தில் நபிமார் வலிமார் போன்றோரது நினைவுச் சின்னங்களை கண்ணியப்படுத்துவது இஸ்லாத்தை கண்ணியப்படுத்துவதாகும் என்று கூறியுள்ளோம்.
அதேநேரம் முஷ்ரிக்குகள் எதை வணங்குகிறார்களோ அவைகளை
அதேநேரம் முஷ்ரிக்குகள் எதை வணங்குகிறார்களோ அவைகளை
சாதாரணமாக கண்ணியப்படுத்துதல் கூட குப்ராகும். இவ்வாறே நபிமார் வலிமார் போன்றோரின் ஆன்மாக்கள் சிலைகளுடைய இனத்தை சேர்ந்ததல்ல. மாறாக அவைகள் மலக்குகளின் இனத்தை சேர்ந்ததாகும். அல்லது அதை விடவும் உயர்ந்த நிலையினை கொண்டதாகும். ஆதலால்
அவர்களின் ஆன்மாக்களை மலக்குகளோடு அனுமானிக்கப்
படுமேயன்றி விக்ரஹங்களுடனே சிலைகளுடனே ஒப்பு நோக்கப்பட மாட்டாது. காரணம் சிலைகள் என்பது முழுக்க
முழுக்க அசுத்தமானவைகளாகும்.
[நூல்: ஹத்யத்துல் மஹ்தி, பக்கம்-27]
No comments:
Post a Comment