Tuesday, 21 July 2020

வஸீலா - 10

ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி 

ஹழ்ரத்  رحمه الله



வஸீலாவும் நான்கு இமாம்களும்:


இமாமுல் அஃலம்  அபூ ஹனீஃபா رضي الله عنه  அவர்கள்  கூறுகின்றனர் ,


" ஓ ! எனது மாலிகே ! தாங்கள் எனது நாட்டத்திற்குரிய ஷபீஆக இருக்கின்றீர்கள். நான் எல்லா சிருஷ்டிகளிலும் தங்களின் கொடையை எதிர்பார்க்கும் ஃபகீராக இருக்கின்றேன் .   ஏ ! மனு ஜின்னை விட அதிகமான கொடையாளரே ! ஏ ! படைப்புகளின் பொக்கிஷமே ! என் மீது இரக்கம் காட்டுங்கள். இன்னும் தங்களின் திருப்தியை கொண்டு என்னை திருப்தி கொள்ளுங்கள். நான் தங்களின் மன்னிப்பின் மீது நம்பிக்கை உள்ளவனாக இருக்கின்றேன். இன்னும் தங்களைத் தவிர சிருஷ்டிப் பொருட்களில் அபூ ஹனீபாவிற்கு யாருமில்லை ."
[நூல்: அல் கஸீதத்துல் நுஃமானிய்யா, பக்கம் -199,200]  

இமாம் மாலிக் رضي الله عنه‎ அவர்கள் மஸ்ஜிதுன் நபவிய்யில் இருந்தபோது ,கலீஃபா மன்ஸுர் நபியவர்களை ஸியாரத்துச் செய்வதற்காக வந்தார். அப்போது அவர் மாலிக் رضي الله عنه‎ அவர்களை நோக்கி ,அபூ அப்துல்லாஹ்வே ! நான் துஆ செய்யும்போது நபியவர்களை முன்னோக்குவதா ? அல்லது கிப்லாவை முன்னோக்குவதா ? என்று கேட்க ,அதற்கு இமாம் மாலிக் رضي الله عنه‎ அவர்கள் ....


 " நீர் நாயகம் அவர்களை விட்டு உமது முகத்தை எவ்வாறு திருப்ப முடியும் ? ஏனெனில் அவர்கள்தான் இறைவனுடைய சன்னிதானத்தில் உம்முடையவும் , உமது தந்தை ஆதமுடையவும் வஸீலாவாக இருக்கின்றார்கள் . ஆதலால் அவர்களை நோக்கி உமது முகத்தை திருப்பி அவர்களிடம் ஷபாஅத்தை கேளும் . அல்லாஹ் உமது விஷயத்தில் நபியவர்களின் ஷபாஅத்தை ஏற்றுக் கொள்வான் எனக்கூறினர் ."
[ நூல் : ஷிபா ,பாகம் 2,பக்கம் 33]

ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இன்று மக்காவிலும் ,மதீனாவிலும் நிறைய பேர் கஃபாவை நோக்கி தங்களின் கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்க்கின்றோம். அதை அங்குள்ளவர்களில் யாரும் தவறென்று சொல்லவில்லை. ஆனால் அதேநேரம்  கண்மணி நாயகம் அவர்களின் புனிதமிகு ரவ்லாவை நோக்கி ஸலாத்தும் ,ஸலாமும் சொல்வோரைப் பார்த்து கிப்லாவின் பக்கமாக முகத்தை திருப்பி துஆ செய்யுங்கள். நபியவர்களின் பக்கமாக முகத்தை திருப்புங்கள் என வற்புறுத்துகின்றனர்.

இமாம் ஷாபிஈ رضي الله عنه‎ அவர்கள் கூறுகின்றனர் ,....


" நபியவர்களின் குடும்பத்தாரே எனது ஆதாரமாகும் .  இன்னும் அவர்கள்தான் அல்லாஹ்விடம் என்னுடைய வஸீலாவாகும். பின்னும் அவர்களுடைய வஸீலாவை கொண்டு மறுமை நாளன்று பட்டோலை எனது வலது கரத்தில் தரப்படுமென்று எனக்கு நம்பிக்கையுண்டு ."
[நூல் : அஸ்ஸவாயிகுல் முஹர்ரகா , பக்கம் 180]   

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه‎ அவர்கள் இமாம் ஷாபிஈ رضي الله عنه‎ அவர்களுடைய வஸீலாவைக் கொண்டு துஆ செய்ததைக் கண்ட அவரது மைந்தர் ஆச்சரியப்பட்டார் .அதைக்கண்ட இமாமவர்கள் தமது மைந்தரை பார்த்து ,...


"இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு உதாரணமானது, எவ்வாறு மனிதர்களுக்கு சூரியனைக் கொண்டு தேகத்திற்கு ஆரோக்கியம் இருக்கிறதோ அவ்வாறு என்றனர் ."
[ நூல் : ஷவாஹிதுல் ஹக் ,பக்கம் 166]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...