Monday, 27 July 2020

வஸீலா - 13

ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி 

ஹழ்ரத்  رحمه الله




வஸீலாவும் அஹ்லெ ஹதீஸ் உலமாக்களும் : 


இதற்கு முன் எந்தெந்த உலமாக்களிலுள்ள பெரியோர்களின் அறிவிப்புக்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோமோ அவையனைத்தும் அழுத்தமான ஆதாரங்களும் போற்றுதலுக்குரிய ஒன்றுமாகும்.

இப்போது நாம் எடுத்துக் காட்டப்போகும் செய்திகள் கைரெமுகல்லிதீன்களாகிய வஹாபிகளால் மதிக்கப்படும் உலமாக்களின் கூற்றுக்களாகும்.

அல்லாமா இப்னு கையிம் எழுதுகிறார், ...



 " இம்மையிலும் மறுமையிலும் நன்மையும் ஈடேற்றமும்
நபியவர்களின் கரத்தில்தானுள்ளது. இன்னும் அல்லாஹ்வின்
திருப்தியும் அவர்களின் கரத்தில் தானுள்ளது"
[நூல்: ஸாதுல் மஆத், பாகம் -1, பக்கம் -15.]

அல்லாமா இப்னு தைமிய்யா தமது " அத்தவஸ்ஸுல் வல் வஸீலா " என்னும் நூலில், ஸஹாபாக்களான முஹாஜிர்  மற்றும்  அன்ஸாரித் தோழர்களுக்கு , மத்தியில் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்  رضي الله عنه‎ அவர்களின் துஆ ஸஹீஹானதும்  அனைத்து கல்விமான்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும் . ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்   رضي الله عنه‎  அவர்கள் ஹழ்ரத் ஸெய்யிதினா அப்பாஸ்  رضي الله عنه‎  அவர்களின் வஸீலாவை கொண்டு துஆ செய்தனர் என்று எழுதுகிறார் .....


" இந்த துஆவை எல்லா நபித் தோழர்களும் அங்கீகரித்தனர். யாரும் மறுக்கவில்லை. அத்துடன் இந்த துஆ மிகவும் பிரபலமானதாகும். மேலும் இது தெளிவான இஜ்மாவைக் கொண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இதே போன்றதொரு துஆவை ஹழ்ரத் முஆவியா  رضي الله عنه‎  அவர்களும் தமது ஆட்சிக் காலத்தில் கேட்டுள்ளனர் ."
[ நூல் : துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் 4,பக்கம் 282]

அல்லாமா காழி ஷவ்கானி எழுதுகிறார் ...

"நாயகம் صلى الله عليه و سلم அவர்களிடம் வஸீலா என்பது அவர்களின் ஜீவிய காலத்திலும் ,அவர்களின் மறைவுக்குப் பின்னும் உண்டு . இவ்வாறே அவர்களின் தர்பாரிலும் உண்டு . தொலைவிலும் உண்டு . பின்னும் நாயகம் صلى الله عليه و سلم  அவர்களின் ஜீவிய காலத்தில் அவர்களை வஸீலாவாக்கியதற்குரிய ஆதாரம் உண்டு . ஆனால் அவர்களின் மறைவுக்குப் பின்னால் மற்றவர்களைக் கொண்டு வஸீலா ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது. "
 [ நூல் : துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் 4,பக்கம் 282]

நவாப் வஹீதுஸ்ஸமான் எழுதுகிறார் ...

"இனி குர்ஆன் ஹதீஸைக் கொண்டு இறைவனுடைய சன்னிதானத்தில் நல்ல அமலை வஸீலாவாக்குதல் ஜாயிஸான ஒன்றெனில் வலிமார்களை வஸீலாவாக்குவதும் இதன்மீது அனுமானிக்கப்படும் . அல்லாமா ஜூஸ்ரி 'ஹிஸ்னுல் ஹஸீனில்' ,துஆவுக்குரிய ஒரு ஒழுக்கமானது அல்லாஹ்விடம் நபிமார்களையும் ,வலிமார்களையும் வஸீலாவாக்குவதாகும் எனக் கூறுகின்றனர் ."
[ நூல் : ஹத்யதுல் மஹ்தி,பக்கம் 48]


வஸீலாவும் தேவ்பந்த் உலமாக்களும்: 

மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹியிடம் கீழ்கண்ட கவிதையைக் குறித்து வினவப்பட்ட போது அதற்கவர் தந்த பதிலானது ....

"இப்படிப்பட்ட வாக்கியங்களை ராகமிட்டோ அல்லது சாதாரணமாகவோ விர்தாக்குதல் மக்ரூஹ் தன்ஸீஹாகும் . அன்றி குப்ரோ பெரும்பாவமோ ஆகாது ."
[ நூல் : பதாவா ரஷீதிய்யா ,பக்கம் 69] 

மவ்லவி அஷ்ரப் அலி தானவி தனது ஷைகு ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கீ அவர்களுக்கு எழுதியதை பாருங்கள் ....

"என் முர்ஷிதே ! என் மெளலாவே ! எனது திகைப்பை அகற்றும் நேசரே ! எனது இம்மை மறுமையின் ஆதரவே ! ஓ ! எனது புலம்பலை கேட்பவரே ! என் மீது இரக்கம் காட்டும் .  நான் செல்லும் பாதைக்கு கட்டுச் சாதமாக என்னிடம் உமது நேசத்தையன்றி வேறெதுவுமில்லை . படைப்புகள் உம்மைக் கொண்டு பயனடைகின்றன . நான் திகைப்பிலிருக்கின்றேன் . இரக்கத்தின் ஹாதியே ! கொஞ்சம் இந்தப் பக்கமும் பாரும் . என் தலைவரே ! அல்லாஹ்வுக்காக ஏதாவது தாரும் . நீர் அருளப்பட்டவராயிருக்கிறீர் . நான் அல்லாஹ்வுக்காக யாசிப்பவனாக இருக்கிறேன் ."
[நூல் : தத்கிரத்துர்  ரஷீத் , பாகம் 1,பக்கம் 114] 

மவ்லவி அஷ்ரப் அலி தானவி அண்ணல் நபி صلى الله عليه و سلم  அவர்களிடம் எப்படி கேட்கிறாரென்பதை பாருங்கள் .....

"ஓ ! அல்லாஹ்வின் நேசரே ! என்னை ஆதரியுங்கள் . எனது இயலாமையை நீக்க உங்களை தவிர வேறு போக்கிடமில்லை. தாங்கள் எனது தவறுகள் மீது இரக்கம் காட்டுங்கள் . இன்னும் படைப்புகளுக்கெல்லாம் ஷபாஅத்து செய்பவரே ! அல்லாஹ்விடம் எனக்காகவும் ஷபாஅத்து செய்யுங்கள் .
ஆக்கா ! உங்களின் தர்பாரை தவிர எங்களுக்கு வேறு ஆதரவு இல்லை . இறுதியில் ஸஹாபா தாபியீன்களின் தர்பாரில் கேட்கிறோம் . பலவீனமானவர்களுக்காகவும் , துன்பத்தில் அகப்பட்டோருக்காகவும் (அல்லாஹ்விடம் ) உதவி தேடுங்கள். இன்னும் உதவிக்காக தயாராகி விடுங்கள் ."
[ நூல் : ழமானுத் தக்மீல் ஃபீ ஸமானித் தஃஜீல், பக்கம் 172]      

நத்வத்துல் உலமா லக்னோ :

லக்னோவிலுள்ள நத்வத்துல் உலமாவை சேர்ந்த மவ்லவி புர்ஹானுத்தீன் அவர்கள் மவ்லவி அபுல் ஹஸன் அலி நத்வியின் கேள்வியொன்றுக்கு தந்த பத்வாவை பாருங்கள் ....

  " நபிமார்களிடம் வஸீலாவைக் குறித்து நம்பிக்கை வைப்பது ஷிர்க்காகாது . எனவே வஸீலா தேடுபவர் முஷ்ரிக்காகவும் மாட்டார். இந்நிலையில் அவருடைய நல்லமல்கள் ,தொழுகை ,ஹஜ் போன்றவை ஒப்புக் கொல்லப்படுமென்று நாம் நம்புகின்றோம் . "
[நூல் : ஹர்பே ஹக்கானியத் , பக்கம் 161 ]

ஸவூதி தலைமை முப்தி அப்துல்லாஹ் பின் பாஸ் :

ஸவூதி அரேபியாவின் தலைமை முப்தியான அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் மவ்லானா முஹம்மத் ஆஷிகுர் ரஹ்மான் காதிரி இலாஹாபாதி அவர்களுக்கு ஹிஜ்ரி 1400 துல்ஹஜ் மாதம் 20ஆம் தேதியன்று முன்னரே எழுதப்பட்ட பத்வா ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் வஸீலாவை நான்கு வகையாக பிரிக்கிறார் . அதாவது ....


" 1)  உயிரோடுள்ள வலியிடம் இரண விஸ்தீரணத்தை குறித்தோ , வியாதி நீங்க வேண்டுமென்றோ அல்லது ஹிதாயத்திற்கு தவ்பீக் செய்ய வேண்டுமென்றோ துஆ கேட்பது ஜாயிஸாகும் .

 2)  அல்லாஹ்விடம் நாயகம் அவர்களின் நேசம் மற்றும் பின்பற்றுதலை , இவ்வாறே வலிமார்களின் நேசத்தை வஸீலாவாக்குவதும் ஜாயிஸாகும் .

3) அல்லாஹ்விடம் நபிமார் மற்றும் வலிமார்களின் மகத்துவத்தை வஸீலாவாக்கி துஆ செய்வது ஜாயிஸாகாது .

4) அடியான் தனது நாட்டத்தை அல்லாஹ்விடம் கேட்கும் போது நபி அல்லது வலியின் மீது சத்தியமிட்டோ பிஹக்கி நபிய்யிஹி, பிஹக்கி  வலிய்யிஹி  என்றோ கேட்பதும் ஜாயிஸாகாது ."
[நூல் : ஹர்பே ஹக்கானியத் , பக்கம் 217 ]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...