ஹதீத் எண் : 4
முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ள ஹதீதை மறுக்கும் சிலர் , இந்த ஹதீத் கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் இப்பூவுலகில் உயிரோடு இருந்த வேளையில் அவர்களிடம் வஸீலா தேடுவதற்கு ஆதாரம் ஆகும் என்று தங்கள் மனோ இச்சையை வழிபடடவர்களாக கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது வழிமுறைக்கு மாற்றமான ,போலியான தாவீல் - விளக்கம் அளிக்கின்றனர் . கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் இப்புவுலகை விட்டும் மறைந்த பின்னரும் ஸஹாபா பெருமக்கள் நாயகம் அவர்களை வஸீலாவாகக் கொண்டு உதவி தேடியது பற்றிய ஸஹீஹ் ஹதீஸ் பின்வருமாறு ,
இமாம் தப்ரானி رَحْمَةُ الله عليه ஒரு சம்பவத்தை விவரிக்கின்றார்கள் , 'ஒரு மனிதர் தொடர்ச்சியாக அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா உத்மான் இப்னு அஃப்பான் رضي الله عنه அவர்களை தமது தேவையின் பொருட்டு தொடர்ந்து சந்தித்து வந்தார் , எனினும் ஹழ்ரத் உத்மான் இப்னு அஃப்பான் رضي الله عنه அவர்கள் அவரின் பால் கவனம் செலுத்தவில்லை. அந்த மனிதர் ஹழ்ரத் உத்மான் பின் ஹுனைப் رضي الله عنه அவர்களிடம் வந்து இது விஷயமாக குறைபட்டுக் கொண்டார் ( குறிப்பு : இது கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் இப்புவுலகை விட்டும் மறைந்த பின்னர் மற்றும் குலபாயே ராஷிதீன்களான ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் رضي الله عنه மற்றும் ஹழ்ரத் உமர் பாரூக் رضي الله عنه அவர்களது மறைவுக்குப் பின்னர் ) .உத்மான் பின் ஹுனைப் رضي الله عنه கூறினார்கள் , 'பள்ளிக்குச் சென்று ஒழு செய்து ,இரண்டு ரக்அத் தொழுத பின்னர் , 'யா அல்லாஹ் ! ரஹ்மத்துடைய நபியான நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது பொருட்டால் நான்
உன்னிடம் வேண்டுகிறேன் ,உன் பக்கம் திரும்புகின்றேன் . யா முஹம்மது صَلّى اللهُ عليهِ وسلّم ! என் தேவை நிறைவேறும் பொருட்டு தங்களைக் கொண்டு, அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றேன் " என்று ஓதி உங்கள் தேவையை கேளுங்கள் என்றார்கள். அதன் பின்னர் என்னிடம் வாருங்கள் நான் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உத்மான் இப்னு அஃப்பான் رضي الله عنه அவர்களிடம் அழைத்துச் செல்கிறேன் என்றனர் .
அந்த மனிதர் சென்று ,அவரிடம் சொல்லப்பட்டவாறு அமல் செய்தார் ,பின்னர் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா உத்மான் இப்னு அஃப்பான் رضي الله عنه அவர்களின் வாசல் நோக்கி சென்றார் . வாயிற்காப்பாளர் வந்து ,அந்த நபரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஹழ்ரத் ஸெய்யிதினா உத்மான் இப்னு அஃப்பான் رضي الله عنه அவர்களின் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்த்தினார் . ஹழ்ரத் ஸெய்யிதினா உத்மான் இப்னு அஃப்பான் رضي الله عنه அவர்கள் ,அந்த நபரிடம் 'உங்கள் தேவை என்ன ? 'என்று வினவினார்கள் . அந்த மனிதர் தம் தேவையைக் கூறவும் , ஹழ்ரத் ஸெய்யிதினா உத்மான் இப்னு அஃப்பான் رضي الله عنه அவர்கள் அதை நிறைவேற்றினார்கள் .
* இமாம் அல் முன்திரி رَحْمَةُ الله عليه இந்த ஹதீதை 'ஸலாத் அல் ஹாஜத் 'என்று தலைப்பில் பதிவிட்டு கூறுகிறார்கள் : இமாம் தப்ரானி رَحْمَةُ الله عليه அவர்கள் இந்த ஹதீதை அறிவித்து விட்டு "இது ஸஹீஹ் ஆனது 'என்று கூறினார்கள், அத் தர்கீப் வத் தர்ஹீப், பக்கம் 129 , ஸலாத் அல் ஹாஜத் .
* இமாம் தப்ரானி رَحْمَةُ الله عليه , மஜ்மு அஸ் ஸகீர், பாகம் 1,பக்கம் 306-307 , ஹதீஸ் எண் : 508 ( குறிப்பு : பொதுவாக ஹதீதுகளை அறிவித்த பின்னர் ஏதும் கூறாத இமாம் தப்ரானி رَحْمَةُ الله عليه அவர்கள் இதில் குறிப்பாக ஸஹீஹ் என்று கூறியுள்ளனர் )
* இமாம் தப்ரானி رَحْمَةُ الله عليه , மஜ்மு அல் கபீர் , பாகம் 9,பக்கம் 17-18 , ஹதீஸ் எண் : 8311 .
* இமாம் பைஹகீ رَحْمَةُ الله عليه, தலாயிலுந் நுபுவ்வா, பாகம் 6,பக்கம் 167-168 .
* இமாம் ஹைத்தமி رَحْمَةُ الله عليه ,இமாம் தப்ரானி رَحْمَةُ الله عليه அவர்களது ஹதீத் தரத்தை ஒப்புக் கொண்டு, மஜ்மா அஸ் ஸவாயித் , பாகம் 2, ஹதீத் எண் : 3668 .
* இமாம் தகியுத்தீன் ஸுப்கி رَحْمَةُ الله عليه , இமாம் பைஹகி رَحْمَةُ الله عليه அவர்களை குறிப்பிட்டு , ஷிபா உஸ் ஸிகாம், பாகம் 1,பக்கம் 370-372 .
* இப்னு தைமிய்யா இந்த ஹதீதை ஸஹீஹ் என்று தனது நூல் காயிதா அல் ஜலீலா பித் தவஸ்ஸுல் வல் வஸீலா ,பக்கம் 156 .
இமாம் முஹம்மத் பின் யூசுப் அல் ஸாலிஹி رَحْمَةُ الله عليه மறுப்பாளர்களுக்கு இறுதி தீர்ப்பாக இந்த விஷயத்தில் ஒரு முழு அத்தியாயத்தை எழுதியுள்ளனர் ,
الباب الخامس في ذكر من توسل به - صلى الله عليه وسلم - بعد موته
روى الطبراني والبيهقي - بإسناد متصل ورجاله ثقات - عن عثمان بن حنيف أن رجلا كان يختلف إلى عثمان بن عفان في حاجة
அத்தியாயம் 5: கண்மணி நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களது மறைவுக்குப் பின்னர் ,நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களைக் கொண்டு தவஸ்ஸுல்
இமாம் பைஹகீ رَحْمَةُ الله عليه மற்றும் இமாம் தப்ரானி رَحْمَةُ الله عليه ஆகியோர் தொடர்ச்சியான சங்கிலியுடன் உறுதியான அறிவிப்பாளர்களைக் கொண்டு ஹழ்ரத் உத்மான் பின் ஹுனைப் رضي الله عنه அவர்களிடம் ஓர் மனிதர் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உத்மான் பின் அஃப்பான் رضي الله عنه அவர்களை தேடி தனது தேவையை கூறும் இந்த ஹதீதை அறிவிக்கின்றார்கள் .
[ இமாம் முஹம்மத் பின் யூசுப் அல் ஸாலிஹி رَحْمَةُ الله عليه , ஸப்ல் அல் ஹாதி , பாகம் 12,பக்கம் 407 ]
ஹதீத் எண் : 5
أخبرنا أبو نصر بن قتادة، وأبو بكر الفارسي قالا: حدثنا أبو عمر بن مطر، حدثنا إبراهيم بن علي الذهلي، حدثنا يحيى بن يحيى، حدثنا أبو معاوية، عن الأعمش، عن أبي صالح، عن مالك قال: أصاب الناس قحط في زمن عمر بن الخطاب، فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم. فقال: يا رسول الله استسق الله لأمتك فإنهم قد هلكوا. فأتاه رسول الله صلى الله عليه وسلم في المنام فقال: إيت عمر، فأقرئه مني السلام، وأخبرهم أنه مسقون، وقل له عليك بالكيس الكيس. فأتى الرجل فأخبر عمر، فقال: يا رب ما آلوا إلا ما عجزت عنه.
وهذا إسناد صحيح.
وروى ابن أبي شيبة بإسناد صحيح من رواية أبي صالح السمان عن مالك الداري - وكان خازن عمر - قال " أصاب الناس قحط في زمن عمر فجاء رجل إلى قبر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فقال: يا رسول الله استسق لأمتك فإنهم قد هلكوا، فأتى الرجل في المنام فقيل له: ائت عمر " الحديث.
وقد روى سيف في الفتوح أن الذي رأى المنام المذكور هو بلال بن الحارث المزني أحد الصحابة،
وظهر بهذا كله مناسبة الترجمة لأصل هذه القصة أيضا والله الموفق
இப்னு அபு ஷைபா இந்த ஹதீதை உறுதியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அறிவித்துள்ளார்கள் . அபூ ஸாலிஹ் அஸ் ஸமான் அவர்கள் மாலிக் அத் தார் ( ஹழ்ரத் உமர் பின் கத்தாப் رضي الله عنه அவர்களின் பைத்துல்மால் அதிகாரி ) அவர்களிடம் இருந்து அறிவிக்கிறார்கள் , ' ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப் رضي الله عنه அவர்களது கிலாஃபத்தின் போது மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு மனிதர் நாயகம் அவர்களின் ரவ்லா ஷரீபிற்கு சென்று , ' யா ரஸூலல்லாஹ் ! மோசமான நெருக்கடியில் உள்ள உங்கள் உம்மத்திற்காக அல்லாஹ்விடம் மழை பொழிய கேளுங்கள் ' என்று கேட்டார் . பின்னர் அவர் நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்களை கனவில் கண்டார் .
நாயகம் صَلّى اللهُ عليهِ وسلّم அவர்கள் அந்த நபரிடம் , உமரிடம் செல்லுங்கள் , அவருக்கு என் அன்பை தெரிவியுங்கள் .இன்னும் மழை உங்களிடம் வரும் என்று அவரிடம் சொல்லுங்கள் என்றார்கள். இன்னும் உமரை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள் , எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள் என்றார்கள். அந்த நபர் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் رضي الله عنه அவர்களை சந்திக்கச் சென்று , இந்த சுப செய்தியை கூறினார் . இதைக் கேட்ட , ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப் رضي الله عنه அவர்கள் தேம்பி அழுதார்கள் . நான் முற்றிலுமாக சோர்ந்து போகும் வரை முழுமையாக முயற்சி செய்கிறேன், என்று அன்னார் கூறினார்கள் . '
ஸைப் இதனை தமது பத்ஹ் ஹில் அறிவிக்கிறார்கள். கனவை கண்ட நபர் நபித்தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் பின் ஹாரித் அல் மஜ்நீ رضي الله عنه அவர்கள் .
[ பத்ஹுல் பாரி , பாகம் 2,பக்கம் 495 ]
குறிப்பு : ஸலபி வஹாபிகளின் அறிஞர் நஸீருத்தீன் அல்பானி ,இந்த ஹதீதின் அறிவிப்பாளர் தொடரில் உள்ள 'மாலிக் அத் தார் மற்றும் அபூ ஸாலிஹ் அஸ் ஸமான் ' ஆகியோர் அறிமுகமற்ற அறிவிப்பாளர்கள் என்று மோசடியாக நிரூபணம் செய்துள்ளார் . எதார்த்தம் என்னவென்பதை நம்பத்தகுந்த முன்னோடி இமாம்களின் நூற்களில் பார்ப்போம் .
(1) இமாம் இப்னு ஸாத் رَحْمَةُ الله عليه அவர்கள் கூறினார்கள் , ' மாலிக் அத் தார் , ஹழ்ரத் உமர் பின் கத்தாப் رضي الله عنه அவர்களால் விடுதலை அளிக்கப்பட்ட அடிமை .அவர் ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் رضي الله عنه மற்றும் ஹழ்ரத் உமர் பின் கத்தாப் رضي الله عنه ஆகியோரிடமிருந்து ஹதீதுகளை அறிவித்தார் . அபூ ஸாலிஹ் சம்மான் அவர்கள் அவரிடமிருந்து ஹதீதுகளை அறிவித்தார்.
[ இப்னு ஸாத் , தபகாத் அல் குப்ரா,பாகம் 6,பக்கம் 12,அறிவிப்பாளர் எண்: 1423 ]
ذكر بن سعد في الطبقة الأولى من التابعين في أهل المدينة قال روى عن أبي بكر وعمر وكان معروفا وقال أبو عبيدة ولاه عمر كيلة عيال عمر فلما قدم عثمان ولاه القسم فسمى مالك الدار وقال إسماعيل القاضي عن علي بن المديني كان مالك الدار خازنا لعمر
No comments:
Post a Comment