Monday 7 February 2022

இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ‎رَحِمَهُ ٱللَّٰهُ

மாதிஹுஸ் ஸிப்தைன்  இமாமுல் அரூஸ் அஷ் ஷெய்கு ஸெய்யது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் رَحِمَهُ ٱللَّٰهُ :


இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் முஹர்ரம் பிறை 18,ஹிஜ்ரி 1232/ 1816 ஆம் ஆண்டு 'மதீனத்துல் அவ்லியா' காயல்பட்டணத்தில் அல்லாமா ஷெய்கு அஹ்மது رَحِمَهُ ٱللَّٰهُ மற்றும் அன்னை பாத்திமா ஆகியோருக்கு மகவாகப்  பிறந்தார்கள்.

இமாமுல் அரூஸ் அவர்களது பெற்றோர் இருவரும் 'மாதிஹுர் ரஸூல்' இமாம் ஸதகத்துல்லாஹ் காதிரி காஹிரி قدس الله سره العزيز அவர்களது சந்ததியர் ஆவார்கள். 

இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்களது வமிசாவழியில் வந்தவர்கள் ஆவார்கள். அன்னாரது மூதாதையர் ஹழ்ரத் முஹம்மது கில்ஜி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மிஸ்ரிலிருந்து ,காயல்பட்டணம் நோக்கி ஹிஜ்ரி 232 ஆம் ஆண்டு/ 846 ஆம் ஆண்டு ஹிஜ்ரத் செய்து வந்தடைந்தனர்.

பால்யம் :

தமது இளவயதில் திக்குவாயால் அவதியுற்று வந்த இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்கள் இறைநேசச் செல்வர் ஷெய்கு அஹ்மது நுஸ்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது துஆவினைக் கொண்டு அதில் இருந்து மீண்டனர்.இச்சம்பவத்தை அன்னாரே தமது பெற்றோர் பற்றி இயற்றிய புகழலஞ்சிலியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மாபெரும் ஆலிமாக திகழ்த்த தமது தகப்பனார் அவர்களிடம் மார்க்க கல்விகளையும்,தப்ஸீர்,ஹதீத்,பிக்ஹ்,அகாயித்,தாரீக் உடைய உலூம்களையும் கற்றுத் தேர்ந்தனர்.

தமது 2வது வயதில் தமது பெற்றோருடன் இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் காயல்பட்டணத்தில் இருந்து ,கீழக்கரை நோக்கி குடிபெயர்ந்தனர்.அவர்களுடன் உடன் பிறந்தவர்கள் எட்டு ஆண்மக்கள் மற்றும் நான்கு பெண்மக்கள் ஆவர்.அதில் நான்கு ஆண்மக்களும் ,ஒரு பெண் பிள்ளையும் தமது பால்ய வயதிலே மரணம் எய்தினர்.இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ தமது குடிபெயர்தல்,மற்றும் சகோதர,சகோதரிகளின் பிறப்பு,இறப்பு குறித்து எழுதியுள்ளனர்.

ஆன்மீக கல்வியும்,திருமணமும்: 
 
கீழக்கரையில் அன்னார், மாபெரும் இறைநேசச் செல்வராக விளங்கிய ஷெய்கு அப்துல் காதிர் என்ற பெயர்கொண்ட கீழக்கரை தைக்கா ஸாஹிப் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களிடம் ஆன்மீக கல்வி கற்றனர்.கல்வி கற்பதில் அன்னாரது ஈடுபாடையும்,மாணவராக சிறந்து விளங்கிய அன்னாரது மதிநுட்பத்தையும்,தலைசிறந்த குணநலன்களும் இறைநேசச் செல்வர் ஷெய்கு கீழக்கரை தைக்கா ஸாஹிப் அப்பா رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களை மிகவும் கவர்ந்தது.

தமது நான்காவது மகளான ஸெய்யிதா உம்மா அவர்களை இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி ரபீயுல் ஆகிர் பிறை 12ல்,1837 ஆம் ஆண்டு நிக்காஹ் நடைபெற்றது. இவ்விபரத்தை இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ஷெய்கு கீழக்கரை தைக்கா ஸாஹிப் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மீது இயற்றிய புகழலஞ்சலியான ' மவாஹிபதுல் வாஹிப் பீ மன்கீபதுஸ் ஷைகு தைக்கா ஸாஹிப்' என்னும் நூலில் எழுதியுள்ளனர்.

ஷெய்கு கீழக்கரை தைக்கா ஸாஹிப் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களை தமது முரீதாகவும்,கலீபாகவும் காதிரியா தரீக்காவில் நியமித்தார்கள்.இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தரீக்கத்தின் பணிகளை செவ்வனே செய்து தமிழகம்,கேரளா மற்றும் இலங்கை பகுதிகளில் பல இடங்களில் தரீக்கத்தை பரப்பினார்கள்.

அன்னாரது படைப்புகள் : 

இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் பல்வேறு ஆக்கங்களை தமிழ் பேசும்  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் மக்களுக்காக இயற்றியுள்ளனர். அவர்கள் பிக்ஹ்,அகாயித்,தஸவ்வுப்,ஸீரத்,தாரீக்,அவ்ராத்,மவ்லித்,மர்திய்யா,கஸீதா மற்றும் கிஸ்ஸாக்கள் இயற்றியுள்ளனர்.


1 . மஃஙானி முலாஹித் திப்யான் பீ ஷரஹி  மஆனி பாஹித் தய்யான் :
இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது நூற்களில் மிகவும் பிரபலமானது.இஸ்லாமியரின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள் ,அதன் ஷரீஅத் சட்டங்கள் குறித்து விளக்கும் நூல்.பேசப்படும் விஷயம் குறித்த பல்வேறு மேற்கோள்களுடன் உள்ள நூல்.

2. பத்ஹுல் மதீன் : 
பிக்ஹின் அடிப்படைகள் சுருக்கமான விளக்கத்துடன் இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இயற்றிய  ஆரம்ப கால நூற்களுல் ஒன்று.

3.பத்ஹஸ் ஸலாம் :
பிக்ஹ் ,அகாயித் குறித்த விரிவான விளக்கங்கள் கொண்ட நூல்.

4.பத்ஹுத் தைய்யான் பீ பிக்ஹி கைராத் அத்யான் : 
பத்ஹுஸ் ஸலாம் நூலின் விரிவான விளக்கங்கள் கொண்ட நூல்.ஷாபிஈ மத்ஹபின் பிக்ஹ் விளக்க நூல்.

5.கனீமதுஸ் ஸாலிஹீன் :
மெஞ்ஞான வழிப்பாட்டையில் நடக்கவிருக்கும் அன்பர்களுக்கான நூல்.

6.ராத்தீபதுன் ஜலாலியா : 
காதிரிய்யா தரீக்காவின் திக்ர்,அவ்ராதுல் குறித்த நூல் .முதல் பதிப்பு ஹிஜ்ரி 1292 ல் வெளிவந்தது.தற்காலம் வரை தமிழ்கூறும் முஸ்லிம்கள் பரந்து  வாழும் பல்வேறு பகுதிகளில் 
பல்வேறு பதிப்புகள் கண்ட நூல்.

7.தலை பாத்திஹா:
அன்பியாக்கள்,உம்முல் முஃமினீன்கள்,காத்துனே ஜன்னத் ஸெய்யிதா பாத்திமா رضی الله عنها ஆகியோரை வஸீலாவாக கொண்ட வேண்டல்.பிறமத ஆதிக்கம் காரணமாக அதன்புறம் செல்லும் பெண்மணிகளுக்கான அறிவுரைகள் கொண்ட நூல்.

8.அஸ்ராருஸ்ஸலாத் :
தொழுகையின் உள்ரங்க அகமியங்களை குறிக்கும் நூல்.

9.அஹ்ஸனுல் மவாயிஸ் வ அஸ்யனுல் மலாவிஸ் :
மார்க்கத்தின் கடைமகளை விளக்கி, மறுமை வாழ்வுக்காக தயார்படுத்தி கொள்வது பற்றிய 380 பைத்துகள் கொண்ட நூல். கண்மணி நாயகம்  ﷺ அவர்களது ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த அரபி கவிதைகள் கொண்ட நூல்.

10.மாவிஸத்துன் முஸய்யனாஹ் வ முலப்பஸத்துன் முஹஸ்ஸனாஹ் : 
53 பைத்துகள் கொண்ட கஸீதா. கண்மணி நாயகம்  ﷺ அவர்களது ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த அரபி கவிதைகள் கொண்ட நூல்


11.ஹத்யா ஷரீப்.
12.ஜவஹருத் தமீன் பீ முன்தகபி ஸீரத்தில் அமீன்.
13.ஷஜரத்துன் ஃபத்ரிய்யா வ ஸில்ஸிலத்துன் காதிரிய்யா.
14.ரியாழதுத் தஸவ்வுப்.
15.குத்பதுன் நுனிய்யா வ திர்யகுன் யுனானிய்யா.
16.குத்பதுன் ராயியா.
17.அல் குத்பதுல் முக்கியா.
18.மின்ஹதுஸ் ஸரன்தீப் பீ மத்ஹில் ஹபீப்.
19.அல் பஹ்ஜதுல் வாஹிஜா பீ வாலிஜதுஸ் ஸித்தி கதீஜா.
20.மல்லிதிஸ் ஷபீயத்துல் பத்தூல்.
21.மவாஹிபுஸ் ஸைன் பீ மனாகிபில் ஹஸனைன்.
22.மவத்தது ரப்பில் பைத் பீ மஹப்பத்தி அஹ்லில் பைத்.
23.நாயகம்  ﷺ அவர்களது துணைவியர் மற்றும் மக்கள் மீதான மவ்லித்.
24.மவ்லிதுஷ் ஷுஹதாயே பத்ர் மற்றும் உஹத்.
25.மராகிபுல் மவாஹிப் பீ மனாகிபி ஊரில் மதாஹிப்.
26.சன்சபீலு சுலபத்தின் குரைஷிய்யா பீ ஷன்ஜலி மீரதின் முத்தலிபிய்யா.
27. மனாஹி ரப்பில் அரப் பீ மதாயிஹி குத்பில் அக்தாப்.
28.மவ்லிது அதாயிர் ரஸூல்.
29.மர்கிபு ஊரில் லஸன் பீ மனாகிபி குத்பி அபுல் ஹஸன்.
30.அல் கவாகிபுத் தராயியா பீ தன்விரி மனாகிபில் மதாரிய்யா.
31.அதீயத்துல் அலிய்யில் மாபூத் ஸஜியத்தில் வலிய்யி மஸூத்.
32.பைதுல் மஜீத் பீ மனாகிபி இப்ராஹீமி ஷஹீத்.
33.மவாஹிபுல் கவிய்யில் மதீன் பீ மனாகிபிஷ் ஷெய்கு ஸலாஹுத்தீன்.
34.மானகிபு வலிய்யில் ஹிந்தி பீ மதாயிஹி அபீ பக்ரினித் தொண்டியி.
35.துஹ்பதுஸ் ஸமதில் அலிய்யி பீ மனாகிபி நைனா முஹம்மதில் வலிய்யி.
36.மவ்லிதுல் புஹாரி.
37.நப்ஹதுல் பரிய்யிஸ் ஸமத் பீ மததில் புஹாரிய்யிஸ் ஸெய்யது முஹம்மது.
38.மின்ஹதுல் பரிய்யி பீ மிததில் புஹாரிய்யி.
39.மவாஹிபதுல் வாஹிப் பீ மன்கிபதிஷ் ஷெய்கு தைக்கா ஸாஹிப்.
40.மர்தியத்துப் அப்கரிய்யா அலா ஸாஹிபி ஸவ்மியத்தின் கிர்கரிய்யா.
41.மர்தியத்துன் அலா அபவைன்.
42.மதீனத்துன் நுஹஸ்.
43.அத்தஸத்தகு அலா கலப் பீ இஜாதி மன் ஹூவ மின் அய்னிஸ் ஸலப்.
44.அதிய்யதுன் ரகிதா அலா நுபுஸிர் ரபாஃபிதா.
45.மவாஹிபுல் மஜீத் பீ மனாகிபி ஷாஹுல் ஹமீத்.
46.ரீஹுன் அஹ்மர்.
47.இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது முன்னோடி ஷெய்கு அஹ்மது رَحِمَهُ ٱللَّٰهُ மீது இயற்றிய பெரிய கஸீதா.
48.தஹ்தீருல் மலவைன் பீ தகாபிரில் அபவைன்.
49.மவாஹிபுர் ரஹ்மான் பீ மனாகிபி ஹஸன் இப்னி உத்மான்.
50.காயல்பதி காட்டு மொகுதும் பள்ளியில் அரசாளும் ஹிஜ்ரி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷெய்கு ஸெய்யது மக்தூம் தங்கள் رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மவ்லித்.
51.காட்டு தைக்கா லெப்பை என்ற ஷெய்கு அப்துல் காதிர் رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மவ்லித்.
52.பெரிய லெப்பை அப்பா என்ற ஷெய்கு அப்துல் காதிர் رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மவ்லித்.
53.மவாஹிபுல்லாஹி அலிய்யி பீ மனாகிபிஷ் ஸாஹில் பர்பலிய்யி.
54.நப்ஹதுல் ஹைய்யில் கைய்யும் பீ மிதத்தி அலிய்யில் மக்தூம்.
55.திக்ர்,அவ்ராதுல் கொண்ட கையெழுத்துப் பிரதி .
56.அல்லாஹ்வின் உதவி வேண்டி ,அன்பியாக்களது வஸீலாவுடன் கூடிய பெரிய கஸீதா.
57.நாயகம்  ﷺ அவர்களின் மீதான அளவில்லா முஹப்பத்தில் இயற்றிய கஸீதா.
58.மின் பரீகத் என்று தொடங்கும் 76 வரிகள் கொண்ட அரபு கஸீதா.கீழக்கரைக்கு அக்காலம் விஜயம் செய்த அரபியை நோக்கி சவால் விடும் தொனியில் இயற்றப்பட்டது.
59.கொட்டைபட்டணம் இராவுத்தர் ஸாஹிப் என்னும் ஷெய்கு அப்துல் காதிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மீது இயற்றிய மர்திய்யா.
60.கவ்துல் அஃலம் رضي الله عنه அவர்கள் மீது இயற்றிய  யா கவ்த குல்லி வரா என்ற கஸீதா .
61.இமாம் ஜலாலுத்தீன் ரூமி رضي الله عنه அவர்களது மஸ்னவி ஷரீபின் சாராம்சத்தை அதே பாணியில் கொண்ட கஸீதா.
62.தனது ஷெய்கு நாயகம் கீழக்கரை தைக்கா ஸாஹிப் என்ற ஷெய்கு அப்துல் காதிர் رَحِمَهُ ٱللَّٰهُ மீது இயற்றிய  நஹ்மதுல்லாஹ் என்ற கஸீதா.
63.காட்டு தைக்கா ஸாஹிப் என்னும் ஷெய்கு அப்துல் காதிர் رَحِمَهُ ٱللَّٰهُ மீது இயற்றிய கஸீதா.
64.இலங்கையில் வாழும் ஷெய்கு முஹம்மது ஹுஸைன் வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
65.இலங்கையை அரசாண்ட காலே பண்டார வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
66.ஏர்வாடி சுல்தான் இப்ராஹீம் ஷஹீத் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது தோழரான கொண்ட கருணை வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
67.கீழக்கரை ஜமால் முகம்மது வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
68.கீழக்கரை மக்தூம் மீரான் வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
69.ஏர்வாடி சுல்தான் இப்ராஹீம் ஷஹீத் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது சகோதரனான ஸெய்யிது முஹம்மது ஷஹீத் رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
70.மலாக்கா மலேஷியாவில் உள்ள முபல்லிகே இஸ்லாம் ஷெய்கு அப்துல் காதிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மீதான மர்திய்யா.
71.தொண்டி ஷெய்கு லெப்பை ஞானி ஸாஹிப் رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
72.இலங்கை,கெட்சிமலையில் உள்ள ஷெய்கு அஷ்ரப் வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
73.காயல்பட்டணம் சின்னமுத்து வெப்ப என்ற ஷெய்கு அபூபக்கர் வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
74.ஸூல்தானுல் ஆரிபீன் ஸெய்யது அஹ்மது கபீர் رضي الله عنه மீதான அரபு கஸீதா.
75. இலங்கையில் உள்ள ஷெய்கு ஸெய்யது யஹ்யா யெமனி رَحِمَهُ ٱللَّٰهُ மீது இயற்றிய கஸீதா.
76.ஷெய்கு சின்ன லெப்பை அப்பா رَحِمَهُ ٱللَّٰهُ மீதான மர்திய்யா.
77.காயல்பட்டணம் ,பெரிய முத்துவாப்பா என்ற ஷெய்கு அஹ்மது رَحِمَهُ ٱللَّٰهُ மீது இயற்றிய மர்திய்யா.
78.இலங்கையில் உள்ள ஷெய்கு ஸெய்யத் பகீர் முஹையத்தீன் பக்தாதி رَحِمَهُ ٱللَّٰهُ மீது இயற்றிய மர்திய்யா.
79.இலங்கை,வெலிகமவில் உள்ள ஷெய்கு இனாயதுல்லாஹ் வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீது இயற்றிய மர்திய்யா.
80.இலங்கை,கொலம்புவில் உள்ள ஷெய்கு உஸ்மான் வலி رَحِمَهُ ٱللَّٰهُ மீது இயற்றிய மர்திய்யா.
81.குலபாயே ராஷிதீன்கள் மீது இயற்றிய மர்திய்யா.
82.தொழில் பெண் பதிகள்.

இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது சமூகப் பணி: 

மாபெரும் ஆளுமையான இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பல அம்சங்கள் உள்ளன. அன்னாரது  மார்க்க ஞானம் அபரிமிதமானது. அவரது எழுத்துக்கள் மிக உயர்ந்த இலக்கிய தரம் வாய்ந்தவை. அன்னாரது  ஆன்மீக சாதனை ஆழமாக இருந்தது. தாஃவா மீதான அன்னாரது  ஆர்வம் அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாகும். சமூக சேவைகளுக்கான அன்னாரது விருப்பத்தில், சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் பெருமளவில் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தால் அன்னார் உந்துதல் பெற்றார்கள்.

இஸ்லாமிய சமூக புனர்நிர்மாணம் : 
 
போர்த்துகீசியரின் வருகையின் தாக்கத்தால் தமிழகம்,இலங்கையில் உள்ள தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம் ஆன்மீக சரிவடைந்து கொண்டிருந்தது.தமது தொலைநோக்கு பார்வையால் இஸ்லாமிய சமூகம் விழிப்புணர்வு பெற குறுகிய கால மற்றும் நெடுங கால திட்டங்களை அவர்கள் தீட்டினார்கள்.

குறுகிய காலம் திட்டம் : 

இதன் அடிப்படையில் அர்வி மொழியில் தீனுடைய அடிப்படை கொள்கைகள் மற்றும் ஷரீஅத் சட்டதிட்டங்களின்  மார்க்க நூற்களை வெளியிட வேண்டும்.உடனடித் தேவையாக இஸ்லாமியர் தமது தினசரி வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை கொள்கைகள் மற்றும் மஸாயில்களை கற்றல் வேண்டும்.

நெடுங்காலத் திட்டம் : 
புதிய மதர்ஸாக்களை தோற்றுவித்தல் மற்றும் பழைய மத்ரஸாக்களை ஊக்குவித்தல்.மாதிஹூர் ரஸூல் இமாம் ஸதகத்துல்லாஹ் அப்பா قدس الله سره العزيز அவர்கள் கீழக்கரையில் நிறுவிய அரூஸிய்யா மத்ரஸாவை புதுப்பித்து ,மாபெரும் நூலகம் ஒன்றை அதில் திறந்தார்கள்.இதன மூலம் மத்ரஸாக்களின் தொடர் செயல்பாட்டால் இஸ்லாமிய மார்க்க ஞானம் மக்களிடையே பரவலாகி அரபு மொழியையும் கற்க முடியும்.பல்வேறு நாற்களை இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களே அரபியிலும் இயற்றனார்கள். சற்றேறக்குறைய 360 இறை இல்லங்களை தமிழகம்,இலங்கையில் நிறுவினார்கள்.

இறுதி காலம் : 
இமாமுல் அரூஸ் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது 84 வயதில் ரஜப் பிறை 5 , ஹிஜ்ரி 1316 / 1898 ஆம் ஆண்டு இப்பூவுலகை விட்டும் மறைந்தார்கள்.அன்னாரது சங்கைமிகும் ஜியாரத் அரூஸியாத் தைக்கா,கீழக்கரையில் உள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...