Wednesday 15 July 2020

வஸீலா -8


ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி 
ஹழ்ரத்  رحمه الله





மாநபியின் மறைவுக்குப்பின் வஸீலா :

இமாம் கஸ்த்தலானி  رحمة الله இப்னு முனீர் என்பாரை கொண்டு
அறிவிக்கின்றனர். ஹழ்ரத் ஸெய்யிதினா அபூபக்கர்  رضي الله عنه‎  
அவர்கள் ஸையிதே ஆலம்  அவர்களின் மறைந்த செய்தியை கேட்டு அழுதுகொண்டே வந்தவர்கள் நபியவர்களின் முகத்தை மூடியிருந்த துணியை நீக்கி....


"ஒருவேளை தங்களின் மறைவுடைய விஷயத்தில்
எங்களுக்கு மட்டும் அதிகாரமிருக்குமாயின் நாங்கள் எங்களின்
உயிரை அர்ப்பணித்திருப்போம். யா முஹம்மத் ! உங்களின்
ரப்பிடத்தில் எங்களை நினைவில் கொள்ளுங்கள். மேலும்
எங்களை  நினைவில் வைக்க வேண்டும்" என்று கூறினர்.
[நூல்: மவாஹிபுல் லதுன்னியா, பாகம்-1, பக்கம்.322]

''ஒருவர் தமது தேவை ஒன்றுக்காக ஹழ்ரத் ஸெய்யிதினா உஸ்மான்
  رضي الله عنه‎  அவர்களை சந்திக்க முயற்சி செய்து
கொண்டிருந்தார். ஆனால் அது நிறைவேறாமலிருந்து வந்தது.
இதற்கிடையே அவர் ஹழ்ரத் உஸ்மான் பின் ஹுனைப் 
  رضي الله عنه‎  அவர்களை சந்தித்தபோது இதுபற்றி
சொல்ல, அதற்கவர்கள் அவரிடம், ஒழு செய்துவிட்டு மஸ்ஜிதுக்குப் போய் இரண்டு ரக்அத் தொழுது அதன்பின் இந்த துஆவை ஓதும் என்றனர். (அந்தகருக்கு நபியவர்களால் சொல்லித்தரப்பட்ட துஆ தான் அது ) .

அவர் அதை செய்து முடித்த பொழுது ஹழ்ரத் உஸ்மான்   رضي الله عنه‎  அவர்களை மட்டும் சந்திக்கவில்லை. மாறாக அவருடைய கோரிக்கையையும் நிறைவேற்றி வைத்தனர். அத்துடன் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உஸ்மான்   رضي الله عنه‎  அவர்கள் அவரை நோக்கி ,வேறு என்ன தேவையானாலும் என்னிடம் வாருங்கள் என்றும் சொல்லியனுப்பினர். அதன்பின் அவர் திரும்பி வந்து உஸ்மான் பின் ஹுனைப்   رضي الله عنه‎  அவர்களை சந்தித்து , உங்களின் சிபாரிசால் எனது காரியம் நிறைவேறியது என்று அவருக்கு நன்றி சொன்னபோது ,அதற்கவர்கள் ; நான் எந்த சிபாரிசும் செய்ய்யவில்லை. நான் செய்ததெல்லாம் பூமான் நபியவர்கள் அந்த அந்தகருக்கு கற்பித்ததை உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது மட்டும் தான் என்றனர் ."
[நூல் : அல் முஃஜிமுஸ் ஸகீர் , பக்கம் -103]    

ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் கத்தாப்   رضي الله عنه‎  அவர்களது பொக்கிஷதாரர் ஹழ்ரத் மாலிக் தார் என்பார் அறிவிக்கின்றனர் . அதாவது , ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்    رضي الله عنه‎  அவர்களது ஆட்சிக் காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட பொழுது ,ஒருவர் (ஹழ்ரத் பிலால் பின் ஹாரிஸ் முஸ்னி   رضي الله عنه‎  என்னும் நபித்தோழர் )  அண்ணல் நபி صلى الله عليه و سلم அவர்களது புனிதமிகு ரவ்லா ஷரீபிற்கு வருகை தந்து நபியவர்களை நோக்கி ....


  "யா ரஸுலல்லாஹ் ! உங்களின் உம்மத்துக்காக வேண்டி மழைக்காக துஆ செய்யுங்கள் . ஏனெனில் அவர்கள் அழிந்து கொண்டிருக்கின்றனர் " என்றார் .


(அது போது ) "நபி صلى الله عليه و سلم  அவர்கள் அவரது கனவில் தோன்றி ,அவரை பார்த்து , உமரிடம் சென்று மழைக்காக துஆ செய்யச்  சொல்லும் . மழை தரப்படும் . இன்னும் அவரிடம் பாதுகாப்புக்குரிய முந்தானையை பற்றிப் பிடித்திருக்கச் சொல்லும் எனக் கூறிச்சென்றனர். அவர் இச்செய்தியை கலீஃபா ஹழ்ரத் உமர்   رضي الله عنه‎  அவர்களிடம் வந்து சொன்னபோது , அதைக் கேட்டு அவர்கள் அழுததோடு ,அவர்கள் யா அல்லாஹ் ! நான் என் வாழ்க்கையில் எப்போதும் படுக்கையில் கூட இதனை மறந்திருக்க மாட்டேனென்று கூறினர் ."
[ நூல் : அல் இஸ்தீஆப் , பாகம் 2,பக்கம் 464 ]

ஹிஜ்ரி 18ஆம் ஆண்டு ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் பஞ்சம் ஏற்பட்டது . அதை 'ஆமுர் ரமாதஹ்' எனக் கூறுகின்றனர்.அப்போது ஹழ்ரத் பிலால் பின் ஹாரிஸ் முஸ்னி   رضي الله عنه‎  அவர்களிடம் பனு முஸைனா என்னும் அவர்களது கோத்திரத்தார் வருகை தந்து , நாங்கள்  செத்துக் கொண்டிருக்கிறோம் .ஏதாவதொரு ஆட்டையாவது அறுங்கள் என்று சொல்ல ,அதற்கவர்கள் ; ஆடுகளுக்குள் ஒன்றுமில்லை என்று சொல்ல ,அவர்கள் வற்புறுத்தவே ,அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து அதன் தோலை உரித்து பார்க்க ,அதற்குள் சிவப்பான எலும்பு மட்டுமே இருப்பதைக் கண்ட அவர்கள் , ....



 "யா முஹம்மதாஹ் ! என்று அழைத்தார்கள். பின்னர் இரவான பொழுது அவர்கள் அண்ணல் நபி صلى الله عليه و سلم  அவர்களைக் கனவில் காண ,நபியவர்கள் அவர்களை நோக்கி ,உமது வாழ்க்கை உமக்கு சோபனமாகட்டும் என்று கூறினர் ."
[நூல் : அல் பிதாயா வந் நிஹாயா, பாகம் 7, பக்கம் 91 ]        

யாமாமாவுடைய போரில் முஸைலமத்துல் கத்தாப்புடன் அறுபதாயிரம் வீரர்கள் இருந்தனர் . அப்போது இஸ்லாமிய படைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் போர் கடுமையாக இருந்தது . அதுசமயம் போரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் முஜாஹிதீன்களாகிய முஸ்லிம்களின் படை பின்னடைய தொடங்கியது . படை வீரர்களின் தளபதியாக ஹழ்ரத் ஸெய்யிதினா காலித் பின் வலீத்   رضي الله عنه‎  அவர்கள் இருந்தனர் . அவர்கள் இந்நிலையை பார்த்து விட்டு ,....



"முஸ்லிம்களது சின்னங்களைக் கொண்டு அழைத்தார்கள் . அன்று முஸ்லிம்களின் சின்னமானது  ' யா முஹம்மதாஹ் ' என்பதாக இருந்தது ".
[நூல் : அல் பிதாயா வந் நிஹாயா, பாகம் 6, பக்கம் 324 ]      

 ஹழ்ரத் அபூ உபைதா பின் ஜர்ராஹ்   رضي الله عنه‎  அவர்கள் ஹழ்ரத் கஃப் பின் ழம்ரஹ்   رضي الله عنه‎  அவர்களோடு ஆயிரம் வீரர்களை ஹலப் என்னுமிடத்தில் போர் செய்வதற்காக அனுப்பி வைத்தனர் . அவர்கள் ஹலபுக்கு சமீபமாக வந்து சேர்ந்தபோது , யூகன்னா ஆயிரம் வீரர்களோடு வந்து போர் தொடுத்து விட்டனர் . முஸ்லிம்கள் இணைந்து போர் புரிந்து கொண்டிருந்தனர் . அப்போது பின்னால் மறைந்திருந்த ஐயாயிரம் படை வீரர்களும் திடீரென்று பின்னாலிருந்து தாக்க துவங்கி விட்டனர் .  முஸ்லிம்கள் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்ற பொழுது , அப்போது கையில் கொடி பிடித்துக் கொண்டிருந்த    ஹழ்ரத் கஃப் பின் ழம்ரஹ்   رضي الله عنه‎  அவர்கள் சப்தமாக ,.....



 " யா முஹம்மத் ! யா முஹம்மத் ! ஓ ! அல்லஹ்வின் உதவியே ! இறக்கிவை ! " 
என்று சொல்ல , முஸ்லிம்கள் அவருக்கருகே ஒன்றுகூடி தீரத்துடன் போரிட்டனர் . 
[ நூல் : ஃபுதூஹுஷ் ஷாம்,பாகம் 1,பக்கம் 196]     

பன்ஸா என்னும் போருடைய வெற்றியின் போது ஒருமுறை இரவு முழுவதும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது முஸ்லிம்களின் சின்னமானது  " யா முஹம்மத் ! யா முஹம்மத் ! யா நஸ்ரல்லாஹி இன்ஸில்" என்பதாக இருந்தது . 
 [ நூல் : ஃபுதூஹுஷ் ஷாம்,பாகம் 2,பக்கம் 218]       

அபுல் ஜவ்ஸா ஹழ்ரத் அவ்ஸ் பின் அப்துல்லாஹ் அவர்கள் கூறுகின்றனர் , ஒருமுறை மதீனாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட பொழுது ,மதீனாவாசிகள் அன்னை ஆயிஷா  رضی اللہ عنھا  அவர்களை சந்தித்து பஞ்சத்தை பற்றி சொல்ல ,அதற்கு அன்னையவர்கள் சொன்னார்கள் ....



 "நபி அவர்களின்  ரவ்லாவை வானத்தின் பக்கமாக அதன் வெளிச்சப் பகுதியை திறந்து விடுங்கள் . அத்துடன் அதற்கும் வானத்திற்குமிடையே மறைப்பு இருக்கக்கூடாது என்று சொல்ல ,அவர்களும் அவ்வாறே செய்ய ,எந்தளவுக்கு மலை பெய்ததெனில் பயிர்கள் செழித்து ஒட்டகங்களெல்லாம் கொழுத்து விட்டன. இன்னும் அவைகளுக்குள் ஏற்பட்ட கொழுப்பின் காரணமாக அவை வெடித்தும் போய்விட்டன. அத்துடன் அந்த வருடத்திற்கு 'ஆமுல் ஃபதக்' என்றும் பெயர் வைக்கப்ட்டது ." 

ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் உமர்   رضي الله عنه‎  அவர்களின் கால் மரத்துப் போன போது ,...



"ஒருவர் அவர்களை நோக்கி, அனைவரையும் விட உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யாரோ அவரை அழையுங்கள் என்று சொல்ல ,   அதற்கவர்கள் ; யா முஹம்மத் என்று சொல்லவும் ,அப்போதே அவர்கள் சுகமடைந்து விட்டனர் .அதாவது சிறையிலிருந்து விடுபட்டவரைப் போல ."
[ நூல் : அல் அக்தார் , பக்கம் 271 ]      



ஹழ்ரத் இமாம் ஹஸைன்   رضي الله عنه‎  அவர்களின் சகோதரி ஹழ்ரத் ஸைனப் رضی اللہ عنھا  அவர்கள் பிணைக்கைதியாக கர்பலா போர்க்களத்திலிருந்து திரும்பியபோது மிகவும் உடைந்து போனவர்களாக,...



"ஓ! மிகவும் புகழப்பட்ட உதவியே! (இருமுறை)
அல்லாஹ் உங்களின் மீது தனது ரஹ்மத்தை இறக்குவானாக.
இன்னும் விண்ணிலுள்ள வானவர்கள் ஸலவாத்தை சொல்வார்களாக, இந்த ஹுஸைன் இப்போது மைதானத்தில் ரத்தத்தில்
தோய்ந்து போனவராக, உறுப்புகள் வெட்டப்பட்டவராகக்
கிடக்கிறார்.யா முஹம்மத் !  உதவி. உங்களின் பெண்பிள்ளைகள்
இப்போது பிணைக்கைதிகளாக இருக்கின்றனர். உங்களின்
பிள்ளைகள் ஷஹீதாக்கப்பட்டு விட்டனர். ஸபாவுடைய மண்
அவர்கள் மீது தனது மண்ணை  வாரி இரைத்துக் கொண்டிருக்கிறது. அறிவிப்பாளர்  சொல்கிறார். அவர்களின் உருக்கமான
இந்த அபயத்தைக்  கேட்டு அவர்களின் எதிரிகள் கூட அழுதனர்""
[நூல் அல் பிதாயா வந் நிஹாயா , பாகம்-8, பக்கம்-193.]





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...