Thursday 24 August 2017

வஸீலா தேடலாமா ? - 1


அவ்லியாக்களிடம் வஸீலா தேடுதல் , உதவி தேடுதல் , இரட்சிப்புத் தேடுதல் , நாட்ட திட்டங்களை நிறைவேற்றித் தரகேட்டல் முதலியனவெல்லாம் கூடாது  - அவை ஷிர்க்காகும் என்று விஷயமரியாதவர்கள்தான்  கூறித்  திரிகிறார்களென்றால் , அதை மனதுக்குள் வெறுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நபிகள் நாயகம் அவர்களின் வாரிசுகள் என்று பாத்தியத்தை கொண்டாடும் மவ்லானா ,மவ்லவிகள் அந்த ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்திருப்பார்களானால் மேன்மையாக இருந்திருக்கும் . அதை விடுத்து,விஷயமறிந்த அவர்கள் வாய்பொத்தி பாராமுகமாக இருப்பது தர்மமன்று .

"அவ்லியாக்களை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் கிருபாகடாட்சம் உண்டாகின்றது .நாட்ட தேட்டங்கள் நிறைவேறுகின்றன " என்பதாய் ஸெய்யிதுல் ஆரிஃபீன் ஹழ்ரத் அபுல் காஸிம் ஜுனைதுல் பக்தாதி   அவர்கள்رضي الله عنه‎  திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள் .


"அவ்லியாக்களிடம் உதவி ஒத்தாசை தேடலாம் என்று பலமான ஆதாரங்களைக் கொண்டு ஸுன்னத்து வல் ஜமாத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டிருக்க , அவ்லியாக்களிடத்தில் உதவி தேடக்கூடாது என்று இக்காலத்தில் ஒரு நவீன கூட்டம் ஏற்பட்டிருக்கிறது " என்று ஆச்சரியத்துடன் ஷைகு அப்துல் ஹக் முஹத்தித் திஹ்லவி  رضي الله عنه‎  அவர்கள் 'அஷிஅத்துல் லம்ஆத் - தர்ஜுமா மிஷ்காத் '  3வது பாகத்தில் தெளிவுபடக் கூறியிருப்பதாக ,'பஸ்லுல் கிதாப்' 119வது பக்கத்தில் ஷைகு ஷாஹ் முஹிய்யத்தீன் சாஹிபு வேலூரி رضي الله عنه‎  அவர்கள் கூறியுள்ளார்கள் .    

" அன்பியா ,அவ்லியாக்களைக் கூப்பிட்டு இரட்சிப்பு தேடுவது ஸஹாபாக்கள் ,தாபியீன்கள் , ஸாலிஹீன்கள் ,முஜ்தஹிதாக உலமாக்கள் ஆகியோருடைய கிரியைகளைக் கொண்டு ஆகுமென்பது ஸ்திரமாக பெற்றிருக்கிறது  . இதை இன்கார் செய்வது அறியாமையாகும் "  என்பதாய் மதராஸ் முப்தி அல்லாமா மஹ்மூது சாஹிபு அவர்கள் பத்ஹுல் ஹக் , 62வது பக்கத்தில் வரைந்துள்ளார்கள் . 

ஹதீத் :  
حدّثنا أبو سعيد عمرو بن محمد بن منصور العدل ، ثنا أبو الحسن محمد بن إسحاق بن إبراهيم الحنظلي ، ثنا أبو الحارث عبد الله بن مسلم الفهري ، ثنا إسماعيل بن مسلمة ، أنبأ عبد الرحمن بن زيد بن أسلم ، عن أبيه، عن جدّه، عن عمر بن الخطاب رضي الله عنه قال:  قال رسول الله : «لَمّا اقْتَرَفَ آدَمُ الْخَطِيئَةَ قالَ: يا رَبّ أَسْأَلُكَ بِحَقّ مُحَمَّدٍ لما غَفَرْتَ لِي، فَقالَ الله: يا آدَمُ وَكَيْفَ عَرَفْتَ مُحَمّداً وَلَمْ أَخْلُقْهُ؟ قالَ: يا رَبّ لأَنَّكَ لَمّا خَلَقْتَنِي بِيَدِكَ وَنَفَخْتَ فِيَّ مِنْ روحِكَ رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ على قوائِمِ الْعَرْشِ مَكْتوباً لا إِلهَ إِلا الله مُحَمَّدٌ رَسولُ الله، فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلى اسْمِكَ إِلا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ، فقالَ الله: صَدَقْتَ يا آدَمُ إِنَّهُ لأَحَبُّ الْخَلْقِ إِلَيَّ ادْعُني بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ وَلَوْلا مُحَمَّدٌ ما خَلَقْتُكَ . هذا حديث صحيح الإسناد وهو أول حديث ذكرته لعبد الرحمن بن زيد بن أسلم في هذا الكتاب 

ஆண்டவனின் பிரதிநிதியும் , மானுட வர்க்கத்தின் ஆதி தந்தையுமான ஸெய்யிதுனா ஆதம் நபி عليه السلام  அவர்கள் , மழைக்கூத்துடைய ஆலத்திலிருக்கையில் அல்லாஹ்வின் கட்டளையை வெளிரங்ககத்தில் மீறி நடந்த பொழுது அவர்கள் நாஸூத்துடைய ஆலமாகிய இவ்வுலகில் இறக்கப்பட்டார்கள் . அன்று முதல் சுமார் 300 வருடங்கள் தமது குற்றத்தை மன்னிக்குமாறு ஆண்டவனிடம் பிழை பொறுக்கத் தேடியும் அங்கீகரிக்கப்படவில்லை . நபி முஹம்மது முஸ்தபா
ﷺ அவர்களுடைய வஸீலாவை கொண்டு பாவமன்னிப்பு அங்கீகாரம் கிடைக்கக் கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டான போது " இறைவா முஹம்மதாகிய இந்த பிள்ளையின் பொருட்டால் இந்த  தகப்பனுடைய  பிழையை  பொறுத்தத்தருள்வாயாக " என்று வஸீலா தேடினார்கள் .

உடனே அவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கப் பெற்றது என்று இமாம்  ஹாக்கிம் رضي الله عنه‎  அவர்கள் 
ஸஹீஹ் முஸ்தத்ரக்கிலும்[பாகம் 2,பக்கம் 651,ஹதீத் எண் 4228] , இமாம் பைஹக்கீ رضي الله عنه‎  அவர்கள்  தலாயிலுன்னுபுவ்வாவில்  ரிவாயத்துச் செய்துள்ளனர் . 

இன்னும் பிரபலமான பல கிரந்தகளில் இந்த ரிவாயத்து காணக்கிடைக்கின்றது  . இமாம் அபூ நயீம் رضي الله عنه‎  அவர்களின் தலாயிலுன்னுபுவ்வாவில் , இமாம் தப்ரானி رضي الله عنه‎  அவர்களின் சாகிர் [2:82, 207]   ,  இமாம் ஹைத்தமி رضي الله عنه‎  அவர்களின் மஜ்மு அல் சவாயித் [8:253] , இமாம் இப்னு அஸாகிர் رضي الله عنه‎  அவர்களும் , இமாம் கஸ்தலானி رضي الله عنه‎  அவர்களின்  அல் மவாஹிப் அல் லதுன்யாவிலும்  , இமாம் சர்கானி رضي الله عنه‎  அவர்களின் விளக்கவுரையிலும் [2:62]  ,ஸுப்ஹான மவ்லிதிலும் காணக்கிடைக்கின்றது . 

இன்னமும் " நபிகள் நாயகம்  முஹம்மது ,அமீருல் முஃமினீன்  ஹழ்ரத் அலி رضي الله عنه‎   அவர்கள் , ஸெய்யிதினா பாத்திமா رضي الله عنها  அவர்கள் , ஸெய்யிதினா ஹஸன்   رضي الله عنه‎   அவர்கள்,ஸெய்யிதினா ஹுஸைன்  رضي الله عنه‎   அவர்கள் அகியோர்களைக் கொண்டு வஸீலா தேடியதன் பொருட்டால் ஆண்டவன் ஆதம் عليه السلام  அவர்களுக்குக் கிருபை செய்தான் " என்று நபி கரீம்   அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாய் இப்னு அப்பாஸ் رضي الله عنه‎   அவர்களைக் கொண்டுள்ள ரிவாயத்து ,தப்ஸீர் துர்ருல் மன்தூரில் இமாம் ஜலாலுதீன் ஸூயூத்தி رضي الله عنه‎   அவர்கள் அறிவிக்கின்றார்கள் . 

மேலும் , நபிகள் நாயகம்  முஹம்மது ﷺ ,அமீருல் முஃமினீன்  ஹழ்ரத் அலி رضي الله عنه‎   அவர்கள் , ஸெய்யிதினா பாத்திமா رضي الله عنها  அவர்கள் , ஸெய்யிதினா ஹஸன்   رضي الله عنه‎  அவர்கள்,ஸெய்யிதினா ஹுஸைன் رضي الله عنه‎   ஆகியவர்களைக் கொண்டு ஆதம் عليه السلام  அவர்கள் வஸீலா தேடியதை முன்னிட்டு அவர்கள் தவ்பா ஒப்புக்கொள்ளப்பட்டது "   என்பதாய் நுஸ்கத்துல் மஜாலிஸ்  2வது பாகம் , 307வது பக்கத்தில் வரையப்பட்டுள்ளது .

இன்னமும் பலமான சனதைக் கொண்டு இமாம் முஹத்தித் தப்ரானீ   رضي الله عنه‎   அவர்கள்  ரிவாயத்துச் செய்கின்றார்கள் . என்னவெனில் , நாயகம் ﷺ அவர்கள் துஆ கேட்கும் பொழுது தங்களுடைய ஹக்கைக் கொண்டும் , தங்களுக்கு முன்னுண்டான நபிமார்களது ஹக்கைக் கொண்டும் துஆக் கேட்டிருக்கிறார்கள் .  


عن أنس بن مالك قال‏:‏ لما ماتت فاطمة بنت أسد بن هاشم أم علي رضي الله عنهما

دخل عليها رسول الله صلى الله عليه وسلم فجلس عند رأسها فقال‏:‏ ‏"‏رحمك الله يا أمي، كنت أمي بعد أمي، تجوعين وتشبعيني، وتعرين وتكسيني، وتمنعين نفسك طيباً وتطعميني، تريدين بذلك وجه الله والدار الآخرة‏"‏‏.‏ ثم أمر أن تغسل ثلاثاً فلما بلغ الماء الذي فيه الكافور سكبه رسول الله صلى الله عليه وسلم بيده، ثم خلع رسول الله صلى الله عليه وسلم قميصه فألبسها إياه، وكفنها ببرد فوقه، ثم دعا رسول الله صلى الله عليه وسلم أسامة بن زيد وأبا أيوب الأنصاري وعمر بن الخطاب وغلاماً أسود يحفرون، فحفروا قبرها، فلما بلغوا اللحد حفره رسول الله صلى الله عليه وسلم بيده وأخرج ترابه بيده، فلما فرغ دخل رسول الله صلى الله عليه وسلم فاضطجع فيه فقال‏:‏ ‏"‏الله الذي يحيي ويميت، وهو حي لا يموت، اغفر لأمي فاطمة بنت أسد، ولقنها حجتها، ووسِّع عليها مدخلها بحق نبيك والأنبياء الذين من قبلي فإنك أرحم الراحمين‏"‏‏.‏ وكبر عليها أربعاً، وأدخلوها اللحد هو والعباس وأبو بكر الصديق رضي الله عنهم‏.‏

رواه الطبراني في الكبير والأوسط، وفيه روح بن صلاح، وثقه ابن حبان والحاكم وفيه ضعف، وبقية رجاله رجال الصحيح
    
[ நூற்கள் - 
*   இமாம் தப்ரானீ அவர்களின் முஜ்அம் அல் அவ்சத் , பாகம் 1,      பக்கம் 67-68 , ஹதீத் எண்   189 .

* இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாக்கிம் அறிவிப்பாளர் திகாஹ் (நம்பிக்கையானவர் ) என்று குறிப்பிட்டுள்ளனர் . இமாம் ஹைத்தமி அவர்கள் தங்களின் மஜ்மு அல் சவாயித் (9:256-7)  நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் . 

* இப்னு ஜவ்சீ அவர்கள் தங்களது  அல் இலல்  உல் முதனாஹிய்யாஹ் (1:268-9#433)  நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் . 

* அபூ நயீம் அவர்கள் தங்களது  ஹில்யத் உல் அவ்லியா வ தபகாத் உல் அஸ்பியா (3:121)  நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் . 

* மஹ்மூத் ஸயீத் மம்தூஹ் தமது ரஃப் உல் மினாராஹ் நூலில்,பக்கம் 147-8ல்   இதை ஹஸன் என்று தரப்படுத்தி உள்ளார்கள் .  ]


Imam Tabarani Mu'jam al-Ausat
Page No. 67, Hadith Number 189

Page No. 68, Hadith Number 189



அகில உலகத்திற்கு அருட்கொடையாகவும் , சகல படைப்புகளையும் மன்றாடி கரை சேர்த்து இரட்சிக்கும் வள்ளலாகவும் அவர்கள் இருந்தும் ,அவர்களே தங்களைக் கொண்டும் , மற்றும் நபிமார்களைக் கொண்டும் வஸீலா தேடி இருக்கின்றார்கள் .மற்றோர்கள் எப்படி அவர்களைக் கொண்டு வஸீலா தேடாமலிருக்க முடியும் ? இவ்விதம் இமாம் ஸுபுக்கி رضي الله عنه‎  அவர்களுடைய ஷிபாஉஸ் ஸிகாம் என்ற நூலிலும் ,இமாம் இப்னு ஹஜர் மக்கீ رضي الله عنه‎   அவர்களுடைய ஜவஹர்ருள் முனள்ளம் என்ற நூலிலும் சொல்லப்படுவதாய்  'அபுளலுஸ் ஸலவாத்து ' என்ற கிரந்தத்தில் எடுத்துரைக்கப்படுகிறது .

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில் ,அல்லாஹ்வுக்கு கலீபாவும்,ஆதிநபியும் ,ஆதிபிதாவுமான ஆதம்  عليه السلام  அவர்கள்ஆண்டவனுடைய ஒரு ஏவலுக்கு வெளிரங்கத்தில் மாறு செய்த ஒரு குற்றத்தை வஸீலாவின்றி மன்னிக்கப்படவில்லை என்றால் ,கால முழுவதும் கணக்கற்ற குற்றங்கள் ,பாவங்ககள் புரிந்து வரும் நம் போன்றவர்கள் அன்பியா ,அவ்லியா , காமிலீன்களின் வஸீலாவின்றி ஈடேற்றம் அடைவது எங்கனம் என்பதேயாம் ? 

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ
ஈமான் கொண்டவர்களே ! அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் . அவனளவில் வஸீலாவை (இடைப் பொருளை ) தேடிக் கொள்ளுங்கள் .அவன் பாதையில் போர் புரியுங்கள் . நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் . [அல்  குர்ஆன் - 5:35 ]  

"ஆண்டவனளவில் சேருவதற்கு வஸீலாவை கொண்டேயல்லாமல் வேறு வழியில்லை . வஸீலாவின் தாத்பரியம் அவ்லியா காமிலீன்களே " என்று மேற்சொன்ன திருமறை  வசன விளக்கத்தில் தப்ஸீர் ரூஹுல் பயான் 2வது பாகம் 388வது பக்கத்தில் வியாக்கியானம் செய்யப் பெற்றிருக்கிறது . 

" எவனுக்கு ரஸுலுல்லாஹ்  மீது மஹப்பத்து இல்லையோ அவனுக்கு ஈமான் இல்லை " என்பதாகவும் ஹதீது வந்துள்ளது .

"என்னுடைய ரஹ்மத்தையுடைய கூட்டத்தார்களிடத்தில் உங்கள் தேவைகளைத் தேடி பெற்றுக் கொள்ளுங்கள் " என்ற ஹதீதை இமாம் பைஹக்கீ رضي الله عنه  அவர்கள்   ஸுனன் குப்றாவிலும் , இமாம் தப்ரானீ رضي الله عنه‎   அவர்கள்  முஃஜம்   அவ்ஸத்திலும் , ஹழ்ரத் அபூசயீத் குத்ரீ  رضي الله عنه‎   அவர்கள் மூலம் ரிவாயத்துச் செய்கின்றனர் . இந்த ஹதீதை இமாம் மனாவீ رضي الله عنه‎   அவர்கள்  ஷரஹு ஜாமியுஸ்ஸகீர் 1வது பாகத்திலும் , இமாம் முல்லா அலி காரீ رضي الله عنه‎  அவர்கள்  ஷரஹு ஐனல் இல்மிலும் எடுத்துரைத்துள்ளார்கள் .  

"நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்கள் சிலர் இருக்கின்றார்கள் . ஜனங்களுடைய தேவைகளை நிறைவேற்றுதற்கென்றே அவன் அவர்களை சொந்தப்படுத்தி வைத்திருக்கின்றான் . தங்களுடைய தேவைகளைப் பூர்த்தியாக்கிக் கொள்வதற்காக ஜனங்கள் அவர்களை அண்டுவார்கள் . அவர்கள் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்தவர்கள் "   என்ற  ஹதீது ஹழ்ரத் இப்னு உமர் رضي الله عنه அவர்களைக் கொண்டு தப்ரானியில் வருவதாக ஜாமியுஸ் ஸகீர் 1வது பாகம் ,பக்கம் 78ல்  எடுத்துரைக்கப் பெற்றுள்ளது . 

                                            ( இதா தஹய்யர்த்தும் பில உமுரி ,
                                             பஸ்த்தயீனுமின் அஹ்லில் குபூரி )

"கருமங்களில் திகைப்படைந்து விடுவீர்களேயானால் கபுறுகளை உடையவர்களை (அவ்லியாக்களைக் ) கொண்டு உதவி தேடிக் கொள்ளுங்கள் " என்று நாயகம்  அவர்கள் கூறிய ஹதீது , அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்   رضي الله عنه அவர்கள் அவர்களைக் கொண்டு முஹத்தித் இப்னு அபித்துன்யா கர்ஷீ رضي الله عنه அவர்கள் (வபாத்து ஹிஜ்ரி 281) ரிவாயத்துச் செய்வதாக , தஸ் ரீஹுல்  அவ்தக்- தர்ஜுமா ஷரஹு பர்ஜக் பக்கம் 319ல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது . 

இன்னமும் மேலே குறிப்பிட்ட ஹதீது பற்றி சிராஜுல் முஃமீனின் .ஷரஹு ஐனுல் இல்மு , ஷரஹு பர்ஜக் , கஜானத்துல் ஜலாலி , பதாவா ஸாதுல்லபீப் முதலிய கிரந்தங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதாக துல்பகார் ஹைதரியா 213வது பக்கத்தில் முற்காலத்து முப்தி முப்தில் பாஜில் ஹைதர் ஷாஹ் காதிரி رضي الله عنه  அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் . 

மேலும் ,ஷரஹு ஐனுல் இல்மு , 53வது பக்கத்தில் இமாம் முல்லா அலி காரீ  மக்கீ رضي الله عنه  அவர்களும் , தப்ஸீர் ரூஹுல் பயான் , 5வது பாகம் ,  380வது பக்கத்தில் , உம்தத்துல் முபஸ்ஸிரீன் ஷைகு இஸ்மாயில் ஹக்கீ பருசீ ரூமி رضي الله عنه அவர்களும்,    தஸ் ரீஹுல்  அவ்தக்- தர்ஜுமா ஷரஹு பர்ஜக் பக்கம் 319வது ஆதாரத்துடன்      கூறுகின்றார்கள் .

மேற்கண்ட ஹதீதை குத்வதுஸ் ஸாலிகீன் , ஸுப்தத்துல் ஆரிபீன் , சுல்தான் பாஹு   رضي الله عنه‎ அவர்கள் முஹ்கமுல் புகறாவில் எடுத்தறிவிப்பதுடன் ,  " அவ்லியாக்கள் பூமியில் தனித்து கல்வத்து இருக்கின்றார்கள் . அவர்களுக்கு அச்சமென்பதில்லை . அவர்கள் ஆண்டவனோடிருக்கிறார்கள் . மனு ,ஜின் யாராகட்டும் ,தேவையுடையவர்கள் ,விஷயத்தை உடையவர்களான அவ்லியாக்களின் கபுருகளுக்கு செல்லட்டும் . அப்படிப் போகின்ற அவர்களுடைய கஷ்டங்களெல்லாம் நீங்கி இலகுவாகிவிடும் " என்பதாகக் கூறியுள்ளார்கள் .

"மனிதனுக்கு ஏதாவது கஷ்ட நஷ்டம் ஏற்பட்டால் அவன் அவ்லியாக்களில் ஒருவரைக் கூப்பிட்டு உதவி தேடிக் கொள்ளட்டும் . அந்த வலி உயிரோடிருந்தால் நொடிப்பொழுதில் காற்று அவருக்கு எத்தி வைக்கும் . அல்லது அவர் கஷ்பு மூலம் தெரிந்து கொள்வார் . அவர் மரணித்துப் போயிருந்தால் மலக்கு (வானவர்) அவருக்கு எத்தி வைப்பார் . அவர் ஆண்டவனித்தில் சிபாரிசு தேடி நிவர்த்தி செய்து தருவார் . இவ்வாறு காமிலீன்கள் கூட மலக்கின் அறிவிப்பின்றி தாங்களாகவே கேட்டுக் கொள்கிறார்கள் " என்று ஹதீதில் வருவதாக ஷரஹு பர்ஜக்கில் காணப்படுகின்றது என்று பத்ஹுல் ஹக் 101வது பக்கத்தில் சொல்லப்படுகின்றது .  
    

     


         




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...