அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் كرم الله وجهه அவர்களுக்கு ஷைகைன் கரீமைனை விட மேன்மையை அளிப்பவர் பின்னால் தொழுதல் பற்றி இமாம்களின் தீர்ப்பு :
• இமாம் இஸ்மால் அல்-ஹன்ஸலி அல்-கிர்மானி رَحِمَهُ ٱللَّٰهُ (மறைந்த ஆண்டு 280 ஹிஜ்ரி) எழுதியுள்ளார்கள் :
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் رضي الله عنه (பிறப்பு 164 & மறைவு 241 ஹிஜ்ரி) அவர்களிடம் கேட்கப்பட்டது:
" எவர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் كرم الله وجهه அவர்களை ஸத்தீகுல் அக்பர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அபூபக்ர் சித்திக் رضي الله عنه மற்றும் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களை விட மேன்மையாக (மஆதல்லாஹ்) கருதி, அவர்களை மேலோங்கியவர்களாக ( அப்தழ்) நினைக்கிறாரோ, அவர்களது பின்னால் தொழுவது எப்படி?
அதற்கு இமாம் அஹ்மத் பின் ஹம்பல் رضي الله عنه அவர்கள் பதில் கூறினார்கள் :
" இத்தகைய நபர்களின் பின்னால் தொழவேண்டாம்."
➋ ஹஸரத் இமாம் அபூ உபைத் அல்-காசிம் பின் சலாம் رَحِمَهُ ٱللَّٰهُ அலைஹி (பிறப்பு 157 & மறைவு 224 ஹிஜ்ரி) அவர்கள் கூறுகின்றனர்:
ஏந்தல் நபி ﷺ அவர்களுக்குப் பின்னர், ஸத்தீகுல் அக்பர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அபூபக்ர் சித்திக் رضي الله عنه அவர்களை இறைவனது அனைத்து படைப்புகளையும் விட மேலானவர் ( அப்தழ்) என்று ஏற்காதவரது பின்னால் தொழவேண்டாம்.
[ஆதாரம் : கிதாப் அல்-சுன்னா, தொகுதி 1, பக்கம் 328]
No comments:
Post a Comment