Wednesday, 30 July 2025

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடம் !

அல்லாஹ்வின் நேசர்களின் அடக்கஸ்தலங்கள் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இடமாகும் !

இமாம் ஷாபிஈ رضي الله عنه மற்றும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه  ஆகியோரது கொள்கை : 

قال الإمام الشافعي رحمة الله عليه : قبر موسى الكاظم ترياق مجرب الإجابة الدعاء، وقال حجة الإسلام محمد الغزالي: كل من يستمد به في حياته يستمد به بعد وفاته، وقال أحد من المشايخ العظام : رأيت أربعة من المشايخ يتصرفون في قبورهم كتصرفهم في حياتهم أو أكثر، الشيخ معروف الكرخي، والشيخ عبد القادر الجيلي ، وذكر رجلين غيرهما
இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் ,

" நாயகத் திருப்பேரர் இமாம் மூஸல் காழிம் رضي الله عنه ( இமாம் ஜாபர் ஸாதிக் رضي الله عنه அவர்களது அருமை மகனார்)  அவர்களது சங்கைமிகும் கப்ரு துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இடமாகும். இது அனுபவத்தில் பரிசோதிக்கப்பட்ட மருந்தாகும் " 

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , 
" எவரொருவர் தமது வாழ்நாளில் ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது உதவி தேடினாரோ,அவரது வபாத்திற்குப் பின்னரும் அவரிடம் உதவி தேடுவது கூடும் ." 

இன்னும் மற்றொரு இறைவனை அறிந்த ஆரிஃபான பெரியார் ஒருவர் கூறுகின்றார்கள் , 

" நான் தமது ஆயுளில் எங்கனம் தஸர்ருப் எனும் ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தினார்களோ அதே அளவு அல்லது அதைவிட அதிகமாக தமது கப்ருகளில் ஏற்படுத்திக்கொண்டிருப்பதை பார்த்தேன்.அவர்கள் ஷெய்கனா மஃரூப் அல் கர்கி رضي الله عنه ,ஷெய்கனா முஹைத்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மற்றும் இருவர் " 

[ நூல் ஆதாரம் 📕 ஷரஹு மிஷ்காத் அல் மஸாபீஹ் ,பாகம் 4,பக்கம் 215 ] 
 
இதே கருத்தினை இமாம் கமாலுத்தீன் முஹம்மது இப்னு மூஸா அல் தாமிர் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் தமது நூலில் இமாம் ஸெய்யிதினா மூஸல் காழிம் رضي الله عنه அவர்கள் குறித்து எழுதுகின்றார்கள் , 

كان الشافعي يقول قبر موسى الكاظم الترياق المجرب؛ شافعی می‌گفت قبر موسی‌ الکاظم داویی مجرب است
இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " இமாம் ஸெய்யிதினா மூஸல் காழிம் رضي الله عنه  அவர்களது சங்கைமிகு கப்ரு ஷரீப் முயற்சி செய்து பரிசோதிக்கப்பட்ட மருந்தாகும் "

[ நூல் 📕 ஹயாத் அல் ஹயவான் அல் குப்ரா ,பாகம் 01,பக்கம் 432 ] 

Tuesday, 29 July 2025

முனாபிக்கின் அடையாளம் !

அண்ணல் நபி  ﷺ அவர்கள் நவின்றார்கள் , 

" ( குலபாயே ராஷிதீன்களான) இந்நால்வரின் நேசமும் ஒரு முனாபிக்கின் உள்ளத்தில் ஏற்படாது " 
📚 இமாம் தப்ரானீ رَحِمَهُ ٱللَّٰهُ-  முஸ்னத் ஷாமியீன் 2311,பழாயிலுஸ் ஸஹாபா,பக்கம் 675 - இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه , பழாயிலுல் குலபா,பக்கம் 231- இமாம் இஸ்பஹானி رَحِمَهُ ٱللَّٰهُ,ஷரஹு உஸுல்,2332- இமாம் அல்லகாய் رَحِمَهُ ٱللَّٰهُ ,தாரீக் திமிஷ்க் 29/126

Wednesday, 23 July 2025

ஷெய்கைன்களது அப்தழியத்தை மறுப்பவர் பின்னால் தொழுவது

அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா  அலீ இப்னு அபூதாலிப்   كرم الله وجهه அவர்களுக்கு ஷைகைன் கரீமைனை விட மேன்மையை அளிப்பவர் பின்னால் தொழுதல் பற்றி இமாம்களின் தீர்ப்பு : 

 • இமாம் இஸ்மால் அல்-ஹன்ஸலி அல்-கிர்மானி رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைந்த ஆண்டு 280 ஹிஜ்ரி) எழுதியுள்ளார்கள் :

  இமாம் அஹ்மத் பின் ஹம்பல் رضي الله عنه (பிறப்பு 164 & மறைவு 241 ஹிஜ்ரி) அவர்களிடம் கேட்கப்பட்டது:

"  எவர்  அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா  அலீ இப்னு அபூதாலிப்   كرم الله وجهه அவர்களை ஸத்தீகுல் அக்பர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா  அபூபக்ர் சித்திக் رضي الله عنه மற்றும் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களை விட மேன்மையாக  (மஆதல்லாஹ்) கருதி, அவர்களை மேலோங்கியவர்களாக ( அப்தழ்)  நினைக்கிறாரோ, அவர்களது பின்னால் தொழுவது எப்படி? 

அதற்கு  இமாம் அஹ்மத் பின் ஹம்பல் رضي الله عنه அவர்கள் பதில் கூறினார்கள் : 

" இத்தகைய நபர்களின் பின்னால் தொழவேண்டாம்." 

➋ ஹஸரத் இமாம் அபூ உபைத் அல்-காசிம் பின் சலாம் رَحِمَهُ ٱللَّٰهُ அலைஹி (பிறப்பு 157 & மறைவு 224 ஹிஜ்ரி) அவர்கள் கூறுகின்றனர்:

ஏந்தல் நபி ﷺ அவர்களுக்குப் பின்னர்,   ஸத்தீகுல் அக்பர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா  அபூபக்ர் சித்திக் رضي الله عنه  அவர்களை இறைவனது அனைத்து படைப்புகளையும் விட மேலானவர் ( அப்தழ்)  என்று ஏற்காதவரது பின்னால் தொழவேண்டாம்.

[ஆதாரம் : கிதாப் அல்-சுன்னா, தொகுதி 1, பக்கம் 328]

Thursday, 10 July 2025

நபிமார்களுக்கு அடுத்து மனிதர்களில் சிறந்தவர்கள்

இமாமுல் அய்ம்மா,சிராஜுல் உம்மா,காஷிபுல் குமா,பஷாரத்தே நபி  ﷺ இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்கள் எழுதுகின்றார்கள் ,

‎ﻭﺃﻓﻀﻞ ﺍﻟﻨﺎﺱ ﺑﻌﺪ ﺍﻟﻨﺒﻴﻴﻦ ﻋﻠﻴﻬﻢ ﺍﻟﺼﻼﺓ ﻭﺍﻟﺴﻼﻡ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺍﻟﺼﺪﻳﻖ ﺛﻢ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﺍﻟﻔﺎﺭﻭﻕ ﺛﻢ ﻋﺜﻤﺎﻥ ﺑﻦ ﻋﻔﺎﻥ ﺫﻭ ﺍﻟﻨﻮﺭﻳﻦ ﺛﻢ ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺍﻟﻤﺮﺗﻀﻰ ﺭﺿﻮﺍﻥ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻬﻢ ﺃﺟﻤﻌﻴﻦ

கண்மணி நாயகம்  ﷺ அவர்களுக்குப் பின்னர் மனிதர்களில் தலை சிறந்தவர்கள்( அஃப்ழல்) - கலீபத்த ரஸூல்லல்லாஹ் ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه ,அதன்பின்னர் அமீருல் முஃமினீன்  பாரூக்குல் அஃலம்  ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه , அதன்பின்னர் அமீருல் முஃமினீன்  ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه , அதன்பின்னர் இமாமுல் மஷ்ரிக் வமக்ரிப் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் رضي الله عنه அவர்கள்.

📚 பிக்ஹுல் அக்பர் ,இமாம் அபூஹனீபா رضي الله عنه ,பக்கம் 18

 📚 ஷரஹு பிக்ஹுல் அக்பர், இமாம் முல்லா அலீ காரி رَحِمَهُ ٱللَّٰهُ ,பக்கம் 182

Related Posts Plugin for WordPress, Blogger...