Thursday, 19 December 2024

ஸலாவத்தும் ,அல்லாஹ்வின் அருளும்

🌹 ஸலாவத்தும் ,அல்லாஹ்வின் அருளும் 🌹

நாயகத் தோழர் ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்,ஷபீயுல் முத்னிபீன்  ﷺ அவர்கள் நவின்றார்கள் , " எவரொருவர் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்வாரோ,அல்லாஹ்  سبحانه و تعالى அவர் மீது பத்து முறை அருள்புரிகின்றான்.ஸலவாத் ஓதியவரின்  பத்து பாவங்களை அருளாளன் அல்லாஹ்  سبحانه و تعالى மன்னித்து விடுகின்றான்.அவரது அந்தஸ்த்தை பத்து மடங்கு உயர்த்துகின்றான். " 

📚 ஸுனன் நஸாயீ ,பக்கம் 181,182,ஹதீஸ் # 1297

Friday, 13 December 2024

ஹயாத்துல் அன்பியா

🌹 ஹயாத்துல் அன்பியா 🌹

இமாம் இப்னு அபீஷைபா رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு ஹிஜ்ரி 235)  அவர்கள் ஸஹீஹான ஸனதுடன் கூடிய அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கின்றார்கள் ,

" நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்,' நாங்கள் துஸ்தர் ( ஈரானில் உள்ள  நகரம் ) நகரத்தை வெற்றி கொண்ட பொழுது ,நாங்கள் ஓர் பெட்டியைக் கைப்பற்றினோம்.அந்த பெட்டியில் ஒருவரது உடல் இருந்தது .அன்னாரது மூக்கு நமது கைகளின் அளவிற்கு நீளமாக இருந்தது.அவரது இரத்தநாளம் மற்றும் சுரப்பிகள் பாதுகாக்கபட்டிருந்தது.அன்னாரது உடல் உயிரோடு உள்ளவர்களின் உடல் போன்று ஸலாமத்தாக இருந்தது. அங்குள்ள மக்கள் அன்னாரது வஸீலாவினால் மழை மற்றும் பரக்கத்தை வேண்டி துஆ செய்வதாக கூறினர்.

இது குறித்து நாயகத் தோழர் ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ மூஸா அஷ்அரி رضي الله عنه அவர்கள்,அச்சமயம் கலீபாவாக இருந்த  அமீருல் முஃமினீன் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

இதற்கு பதில் எழுதிய அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் ,இதுவாகிறது அல்லாஹ்வின் நபிமார்களில் ஒருவராகிய ஸெய்யிதினா தான்யால் عَلَيْهِ ٱلسَّلَامُ ஆவார்கள் என்று எழுதினார்கள்.

மேலும் நபிமார்களின் பரிசுத்த மேனியை நெருப்பும் ,மண்ணும் தீண்டாது.அவர்களை அடக்கம் செய்திட கட்டளையிட்டார்கள்.அதன் பேரில் நாயகத் தோழர்கள் ஸெய்யிதினா அனஸ் رضي الله عنه மற்றும்  ஸெய்யிதினா அபூ மூஸா அஷ்அரி رضي الله عنه அவர்கள் ,அல்லாஹ்வின் தூதராகிய ஸெய்யிதினா தான்யால் عَلَيْهِ ٱلسَّلَامُ அவர்களை அடக்கம் செய்தார்கள்.

📚முஸன்னப் அபீ ஷைபா ,பாகம் 11,ஹதீஸ் எண் 34399



தஸவ்வுப்

ஷெய்குல் இஸ்லாம் இமாம் முஹம்மது இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " தஸவ்வுப் (என்னும் மெஞ்ஞானத்தை தனது) வாழ்வில் செயல்படுத்தாத புத்திக்கூர்மையுள்ள மனிதன் ,ஜுஹ்ர் என்னும் நிலையை முட்டாளாகத்தான் அடைவான் " 

  📚 நூல் : இமாம் அபூ நுஐம் இஸ்பஹானி رَحِمَهُ ٱللَّٰهُ, ஹில்யதுல் அவ்லியா,9/142

Tuesday, 3 December 2024

வஸீலாவைப் பற்றி வஹாபிகள்

🌹 வஸீலா 🌹

இப்னு தைமிய்யாவின் மாணவர் இப்னு கைய்யூம் எழுதுகின்றார், " முஸ்லிம் உம்மத்திற்கு இவ்வுலகிலும் ,ஆகிரத்திலும் கிடைக்கும் அனைத்து கைர்  ,பரக்கத்தும் பூமான் நபி  ﷺ அவர்களது கரங்களின் மூலமே கிடைக்கின்றன,அவர்களின் மூலமே வந்தடைகின்றன." 

📚 ஜாதுல் மாத்,பாகம் 1,பக்கம் 149

இனி இதனை மறுதலிக்கும் வஹாபிகள் குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் போலும்
Related Posts Plugin for WordPress, Blogger...