Monday 17 August 2020

வஸீலா-14

ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி 
ஹழ்ரத்  رَحْمَةُ الله عليه




வலிமார்களிடம் வஸீலா :

ரயீஸுல் முபஸ்ஸிரீன்  ஹழ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه‎ கூறுகின்றனர் , எங்கள் பகுதியில் ஷுத்தாரியா தரீக்காவானது ஷெய்கு முஹம்மத் கெளஸ் குவாலியரி அவர்கள் மூலமாகத்தான் பிரபலமானது. அதற்குமுன் அந்த தரீக்கா அவ்வளவு பிரபலமாக இருக்கவில்லை .சுருங்கக் கூறின் எனக்கு இந்த கிர்காவை ஷெய்கு அபூதாஹிர் குர்தியால் அணிவிக்கப்பட்டேன் . அதன்பின் அவர்கள் 'ஜவாஹிருல் கம்ஸாவை' அமல் செய்வதற்குரிய அனுமதியை எனக்குத் தந்தனர் .

பின்னர் நான் ஹஜ்ஜிலிருந்து லாஹுருக்கு திரும்பி வந்த போது ஷெய்கு முஹம்மத் ஸயீத் லாஹூரி அவர்களை சந்தித்து அவர்களின் கைகளை முத்தமிட்டேன். அப்போது அவர்கள் எனக்கு "துஆயே ஸைபீ " யையும் , ஜவாஹிருல் கம்ஸாவிலுள்ள எல்லா அமலையும் செய்வதற்குரிய அனுமதியை வழங்கினர். அவர்கள் அக்காலத்தில் தரீக்கா அஹ்சனிய்யா மற்றும்  ஷுத்தாரியாவின் ஷைகுமார்களுடைய  தலைவராக இருந்து வந்தனர். அந்த  ஜவாஹிருல் கம்ஸாவிலுள்ள அமல் இதுதான். ஒரு காரியத்தில் வெற்றியடைவதற்காக தினந்தோறும் ஐநூறு முறை இதை ஓத வேண்டும் ....

   

இந்த துஆவில் என்ன இருக்கிறது ? நாயகம் صلى الله عليه و سلم    அவர்களிடமும் ,அமீருல் முஃமினீன் ஹழ்ரத் அலி رضي الله عنه‎ அவர்களிடமும் வஸீலாவும், உதவியும் தேடப்படுகிறது. ஒருவேளை இதில் ஏதாவது ஷிர்க் இருக்குமாயின் ஷாஹ் வலியுல்லாஹ் رضي الله عنه‎ அவர்கள் ஜவாஹிருல் கம்ஸாவை அமல் செய்வதற்கு எப்படி அனுமதி கேட்டிருப்பார்கள் ? நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் .

ஷெய்குல் இஸ்லாம் ஷிஹாபுத்தீன் ரமலி رضي الله عنه‎ அவர்களின் அகீதாவை பாருங்கள் ....


  "  ஷெய்குல் இஸ்லாம் ரமலி அவர்களிடம், பாமரர்கள்  துன்பங்களின் போது
 யாஷைக் இன்னாரே! என்றெல்லாம் அழைக்கின்றனர். என்ன? ஷைகுமார்கள் தமது மறைவுக்குப் பின்னரும் உதவி செய்வார்களா? எனக்கேட்க, அதற்கவர்கள், நபிமார்களிடமும் வலிமார்களிடமும் ஸாலிஹீன்களான
உலமாக்களிடமும் உதவி தேடுவது ஜாயிலாகும். 

ஏனெனில் அவர்கள் உயிரோடுள்ள போது உதவி செய்ததை போல
தங்களின் மறைவுக்குப் பின்னாலும் உதவி செய்வார்கள்.அதனால் தான் நபிமார்களுக்கு முஃஜிஸாவும் வலிமார்களுக்கு கராமத்தும் வழங்கப்பட்டுள்ளதென்று கூறினர்"
[நூல்: மஷாரிகுல் அன்வார்.பக்கம் -59.]

ஹழ்ரத் ஷைகு பரீதுத்தின் அத்தார் رضي الله عنه‎ கூறுகின்றனர். ஹழ்ரத் மஹ்முத் கஸ்னவி அவர்களிடம் ஹழ்ரத் காஜா அபுல் ஹஸன் கிர்கானி  رضي الله عنه‎ அவர்களின் ஜுப்பா ஒன்றிருந்தது. சோமநாத்தில் போர் நடை பெற்றபோது ஒரு சந்தர்ப்பத்தில் இஸ்லாமியப்படை தோற்கும் நிலை ஏற்படவே மஹ்முத் கஸ்னவி சட்டென குதிரையை விட்டிறங்கி மறைவான இடத்தை நோக்கிச் சென்றனர் .

அங்கே,அந்த ஜுப்பாவை கையிலேந்தி ஸுஜூதில் விழுந்து,"இறைவா ! இந்த ஜுப்பாவுடையவரின் பொருட்டால் காபிர்கள் மீது வெற்றியை தா.போரில் கிடைக்கும் கனீமத்துப் பொருளை தர்வேஷ்களுக்கு மத்தியில் பங்கிட்டு விடுகிறேன் என்று பிரார்த்தித்தார்" . 

திடீரென எதிரிகளுக்கு மத்தியிலிருந்து கூக்குரல் எழுந்தது. அப்போது இருள் கவிழ்ந்துவிட காபிர்கள்  தங்களை தாங்களே .
ஒருவரையொருவர் வெட்டிக்கொள்ள துவங்கினர். இதன்
காரணமாக படைகளும் சிதறிப்போக இஸ்லாமியர்களுக்கு
வெற்றி கிடைத்தது. 

அன்றிரவு மஹ்மூத் கஸ்னவி ஹழ்ரத் அபுல் ஹஸன் கிர்கானி அவர்களை கனவில் கண்ட போது அவர்கள் அவரை பார்த்து ,மஹ்மூத் ! நீர் இறைவனுடைய சன்னிதானத்தில் நமது ஜுப்பாவுக்குரிய மதிப்பை தவற விட்டு விட்டீர் .ஒருவேளை நீர் விரும்பியிருந்தால்  எல்லா காபிர்களுக்கும்   இஸ்லாத்தை குறித்து கேட்டிருக்கலாம் என்றனர்.

  அல்லாமா ஹழ்ரத்  இப்னு ஆபிதீன் ஷாமி رضي الله عنه‎ கூறுகின்றனர் ! ......


"ஹழ்ரத் ஸியாதி கூறுகின்றனர். ஒருவரது பொருள்  ஏதேனும்  காணாமல் போய்விட்டால் அதை அல்லாஹ் திரும்பவும் அவரிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென்று விரும்புவாராயின் ஒரு உயரமான இடத்தில் நின்றுகொண்டு
அல்ஹம்து சூரவை ஒதி அதனுடைய நன்மையை நாயகம் அவர்களுக்கும் அதன்பின் ஸையிதீ அஹ்மத் பின் அல்வான் அவர்களுக்கும் சேர்த்து
வைத்துவிட்டு அதன்பின், ஸையிதீ அஹ்மதே  இப்னு அல்வானே! எனது காணாமல் போன பொருள் திருப்பித் தராவிட்டால் நான் உங்களின் பெயரை அவ்லியாக்களுடைய பட்டியலிலிருந்து நீக்கிவிடுவேன் என்று சொன்னால் அல்லாஹ் அவர்களின் பரக்கத்தை கொண்டு அப்பொருளை திருப்பித்
தந்துவிடுவான்" 
[நூல்: ரத்துல் முஹ்தார். பாகம் -2.பக்கம் 324.]


ஸலாத்துல் கௌஸிய்யா : 

ஹழ்ரத் மஹ்பூபே ஸுப்ஹானி குத்பே ரப்பானி
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه‎ 
அவர்களின் வஸீலாவை கொண்டு துஆ செய்பவர் கண்டிப்
பாக தனது நாட்டத்தை பெற்றுக் கொள்வார். ஸையிதினா
கௌஸுல் அஃழம்  رضي الله عنه‎ கூறுவதைப்
பாருங்கள், ...


" ஒருவர் தமது துன்பத்தின் போது எனது வஸீலாவை 
கொண்டு உதவி தேடுவாராயின் அவரது துன்பம் போக்கப்படும். இவ்வாறே ஏதாவதொரு சோதனையின் போது என்னை பெயர் சொல்லி அழைத்தால் அவரது சோதனை அகற்றப்படும். இன்னும் ஏதாவதொரு  நாட்டத்தின் போது என்னை இறைவனுடைய சன்னிதானத்தில்  வஸீலாவாக்குவாராயின்      அவரது நாட்டம் நிறைவேறும் .

இன்னும் ஒருவர் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் . ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்துக்குப் பின்  பதினோரு முறை குல்ஹுவல்லாஹ் சூராவை  ஓத வேண்டும். ஸலாம் கொடுத்தபின் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வர்களின் மீது  ஸலவாத்துச் சொல்ல வேண்டும் .அதன்பின் ஈராக் இருக்கும் திசையை நோக்கி பதினோரு  எட்டு எடுத்து  வைத்து எனது பெயரை சொல்லி தனது நாட்டத்தை கேட்பாராயின் அல்லாஹ்வின் கட்டளையை     கொண்டு  அவரது நாட்டம் நிறைவேற்றி வைக்கப்படும் .அதன்பின் கீழ்கண்ட கஸீதாவை ஓத வேண்டும்." 
[நூல்: பஹ்ஜத்துல் அஸ்றார், பக்கம் -102. ]


யோசித்துப் பாருங்கள். இந்த ஸலாத்துல் கௌஸிய்யா
என்னும் தொழுகையில் ஷிர்க்கின் தாக்கம் ஏதாவது தென்படுகிறதா என்ன? ஏனெனில் இதற்கு முன்னால் நபியவர்கள் ஒரு அந்தகருக்கு சொன்னார்கள். இரண்டு ரக்அத் தொழுது என்னுடைய வஸீலாவை கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய் என்பதாக. அவரும் அவ்வாறே செய்ய அவரது அந்தகத்
தன்மை அகன்றது.

 இவ்வாறே ஹழ்ரத் உஸ்மான் பின் ஹுனைப் رضي الله عنه‎  அவர்களின் யோசனைக்கொப்ப ஒருவர் அமீருல் முஃமினீன்   உஸ்மான் رضي الله عنه‎   அவர்களின் ஆட்சிக் காலத்தில் அமல் செய்ய அவரது நாட்டம்
நிறைவேறியது. அதே வழிமுறைதான் இங்கேயும் காட்டப்படுகிறது.
அதாவது இரண்டு ரக்அத்   தொழுது ஸையிதினா
கௌஸுல் அஃழம் رضي الله عنه‎ அவர்களின் வஸீலாவை முன்னிருத்தினால்  அல்லாஹ்வுடைய நல்லருளை கொண்டு அவருடைய நாட்டம் நிறைவேறுகிறது. அத்துடன் ஸலாத்துல் கௌலியாவுடைய தொழுகையை  ஸெய்யிதினா கெஸுல் அஃலம் رضي الله عنه‎  அவர்களே கூறுவதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.

எனவே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட அவனது
நேசர்களாகிய நல்லடியார்களை வஸீலாவாக்குவதும் அவர்களிடம் உதவி ஒத்தாசை போன்றவற்றை தேடுவதுமாகிய  இக்கொள்கையானது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் காலம் தொடுத்து இன்று வரையுள்ள ஜும்ஹுர்களாலும், இமாம்களாலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிற ஒன்றாகும். 

இதே கொள்கை தான் இமாம் அஹ்மத் ரிழா கான் பாழில் பரேலவியுடையதுமாகும்.ஆனால் இதை எதிர்ப்பவர்கள் இக்கொள்கை பரேலவிகளின் கொள்கையென முடக்கப் பார்க்கின்றனர். இன்னும் இதை தழுவியே இவர்கள் தமது எல்லா பத்வாக்களையும் வெளியிட்டும் வருகின்றனர். இது இவர்களின் அறியாமைக்கு ஒரு சான்றாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையை உண்மையென தவ்பீக்கை அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்வானாக ! ஆமீன் .பிஜாஹி ஸையிதில் முர்ஸலீன் .  صلى الله عليه و سلم    !



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...