Thursday 25 June 2020

வஸீலா - 4

ஆக்கம் : ஆஷிகுர் ரஸூல் அல்லாமா ஹாபிழ் F.M. இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத்  رحمه الله




நவாப் வஹீதுஸ்ஸமானும் இஸ்த்தி ஆனத்தும்:

இவர் அஹ்லெஹதீஸ்களாகிய கைரெமுகல்லிதின்களின் மிகப்பெரும் ஆலிமும் ஸிஹாஹ் வித்தா என்னும் ஆறு ஹதீஸுக்குரிய கிரந்தங்களையும் மொழி பெயர்த்தவராவார். இவர் தமது 'ஹத்யத்துல் மஹ்தி' என்னும் நூலில் "இஸ்த்திஆனத்தை" குறித்து மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார்.அதிலிருந்து சிலவற்றை உங்களின் பார்வைக்கு தருகிருேம்.


" அல்லாஹ் அல்லாத சிருஷ்டிப் பொருட்கள் என்பது அது உயிரோடு இருந்தாலும் சரி , அல்லது இறந்து போயிருந்தாலும் சரி .அதைப் பற்றி ஒருவர் ,அதற்கு சுயமான தத்துவம் உண்டு என்றோ அல்லது அதற்கு அல்லாஹ் ஒரு விஷயத்தில் எப்படிப்பட்ட தத்துவத்தை தந்துள்ளான் எனில் அதை செயல்படுத்துவதற்கு மீண்டும் அதற்கு இறைவனுடைய அனுமதி தேவையில்லை என்று நம்புவானாயின் அவன் முஷ்ரிக்காகும் . 

அவ்வாறின்றி வேறொருவர் ,அல்லாஹ் அல்லாத ஒரு பொருளை பலகீனமானதென்று நம்புகிறார் .எவ்வாறெனில் அப்பொருள் குளிப்பாட்டுபவரின் கையிலுள்ள மையித்தை 
போல அது எந்தவொரு பொருளின் மீதும் சுயமானதத்துவம்உடையதல்ல என்பதாக நம்புகிறான். 

அதேநேரம் அல்லாஹ் அவனைக்   கொண்டு ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்றுநாடுவானேயாயின் அவன் அல்லாஹ்வுடைய உத்திரவைக் கொண்டும், அனுமதியை கொண்டும்,நாட்டத்தை கொண்டும்உதவி செய்வான் என்றும் ,ஒருவனுக்கு லாபத்தையோ அல்லது நஷ்டத்தையோ அவனால் ஏற்படுத்தமுடியுமென்றும்நம்புவானேயாயின் அவன் முவஹ்ஹிதாகும். முஷ்ரிக்கல்ல.இந்திலையில் உதவுகின்ற அவன் உயிரோடு இருந்தாலும் சரி,அல்லது இறந்து போயிருந்தாலும் சரி.

அதாவது இதனை இன்னும் கொஞ்சம் விளக்கமாகசொல்வதாயின் ஒருவன் ஒருவர் தானாக உருவாகிறதென்றோ, அல்லது நெருப்பு தானாக எரிகிறதென்றே நம்புவானாயின்அவன் முஷ்ரிக்காகும். அவ்வாறின்றி ஒருவர் உருவாவதும்நெருப்பு எரிவதும் அல்லாஹ்வுடைய கட்டளை மற்றும்நாட்டத்தை கொண்டு என நம்புவானாயின் அவன்தான்முவஹ்ஹிதாகும்" 
[நால்: ஹத்யத்துல் மஹதி, பக்கம்-17]

இதே கொள்கையை தான் முன்னால் நாம் இமாம் அஹ்மத் ரிழா கான் பாழில் பரேலவி ரஹிமஹல்லாம் அவர்களின் நூலாகிய 'பரகாத்துல் இஸ்த்திம்தாத் ' என்பதிலிருந்து, ஒரு சிருஷ்டிப்பொருளை சுயமாக லாப நஷ்டத்தை தரக்கூடியது என நம்புதல் ஷிர்க்காகும் என்றும் அவ்வாறின்றி அப்பொருள் இறையருளைகொண்டு லாப நஷ்டத்தை ஏற்படுத்த முடியுமென்று நம்புதல் ஷிர்க்காகாது என்றும் கூறியிருப்பதை பார்க்க வேண்டுகிருேம்.

இனி அல்லாமா காழி ஷவ்கானி என்பார் கூறுவதைபாருங்கள்.


"ஒருவன் உயிரோடுள்ள அல்லது இறந்து போய்விட்டஒருவனை சுயமாகவோ அல்லது அல்லாஹ்வுடன் இணைத்தோஒருவனுக்கு லாப நஷ்டத்தை ஏற்படுத்த முடியுமென்றுநம்பிய நிலையில் அவனை நோக்கி தனது முகத்தை திருப்புவானேயாயின் அல்லது அவனது சக்திக்கு மீறிய ஒருபொருள்அவனிடம் கேட்பானாயின் அவனுடைய தௌஹீத் சுத்தமானதல்ல. அத்துடன் அவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவனாகவும் ஆக மாட்டான்"

[நூல்: ஹத்யத்துல் மஹ்தி, பக்கம்-19]

காழி ஷவ்கானியின் மேற்கண்ட கூற்றை கொண்டு ஷிர்க் என்பது மூன்று வகையான நிலைகளில் உருவாகிறதென தெளிவாகிறது. அதாவது........,

1) எவரையேனும் லாப நஷ்டத்தை ஏற்படுத்துவதில்சுயார்த்தமுடையவர் என நம்புதல்.


2) எவரையேலும் வய தஷ்டத்தை ஏற்படுத்துவதில்இறைவனுடைய கூட்டாளி என நம்புதல்.


3) ஒரு சிருஷ்டியின் சந்திக்கு அப்பாற்பட்ட பொருளைஅந்த சிருஷ்டியிடம் கேட்குதல்.


இனி அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை இது விஷயத்தில் எவ்வாறு அமைத்துள்ளது என்பதைப்பாருங்கள். லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் அது இறைவனுடைய தரப்பிலிருந்தே நிகழுகிறது. அடுத்து சிருஷ்டி என்பது இறைவனுக்கும் உதவி தேடுபவனுக்கும் இடையில் நிறுத்தப்படும் ஒரு வாஸிதாவாக - வஸீலாவாக மட்டுமே இருப்பதால் இந்திலையில் ஷிர்க் என்பது எப்படி நிகழும்?


இதைத்தான் நவாப் வஹீதுஸ்ஸமானும், காழி ஷவ்கானியும்,  இறைவனல்லாத ஒருபொருள் லாபத்தையோ அல்லது

நஷ்டத்தையோ எப்படிப்பட்ட நிலையில் ஏற்படுத்த முடியுமெனில், ஒன்று அது சுயார்த்தமுடையதென்றோ  அல்லது  அது இறைவனோடு கூட்டு சேர்த்துள்ளதென்றோ  நம்பும் போது தான் அது ஷிர்க்காகும். இதுபோன்றே இறைவனல்லாதவரை அழைப்பதும், அவரை நோக்கி முகத்தை திருப்பு

வதும் அவரிடம் உதவி தேடுவதும் எப்போது ஷிர்க்கான

எனில் அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை கேட்டு

போதுதான் என்றும் கூறுகிறார்.



 " இனி ஒருபொருள் ஒரு சிருஷ்டியின் சக்திக்கு உட்பட்டநிலையிலுள்ள போது அப்பொருளை குறித்து அவரிடம் கேட்பதோ, அதற்காக அவரை அழைப்பதோ, அவரை நோக்கி முகத்தை திருப்புவதோ அவரும் இறைவனுடைய உத்திரவை கொண்டும் நாட்டத்தை கொண்டும் லாப நஷ்டத்தை ஏற்படுத்துவார் என்று நம்புவதோ ஷிர்க்காகாது" .

[நூல்: ஹத்யத்துல் மஹ்தி. பக்கம் 20]

பின்னும் இக்காலத்தை சேர்த்த நவீனவாதிகளாகிய இந்தமுப்ததியீன்களுக்கு என்னவென்று சொல்லி புரியவைப்பது ?எந்தவொரு முஸ்லிமும்  நபிமார்களிடமோ , வலிமார்களிடமோ உதவி தேடும் போது அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட எதையும் அவர்களிடம் கேட்பதில்லை . அத்துடன் அவர்கள் சுயமாக லாப நஷ்டத்தை ஏற்படுத்த முடியுமென்றும் நம்புவதில்லை . இது இந்த வஹாபிகளின் சந்தேகத்தில் இருந்து ஜனித்த குழந்தையாகும் . 

இன்னும் இது பற்றி அல்லாமா  தகிய்யுத்தீன் சுப்கீ رحمه الله அவர்கள்  சொல்வதை பாருங்கள்...., 

நாயகம் صلى الله عليه و سلم  அவர்கள் ஒரு செயலை படைப்பவர்கள் என்பதோ அல்லது அதில் அவர்கள் சுயமான தத்துவமுடையவர்கள் என்பதோ நமது கருத்தல்ல . இப்படி எந்த முஸ்லிமும் சொல்வதுமில்லை நினைப்பதுமில்லை.இனி இவ்வாறு கருத்து கொள்வதும் , இதையே காரணமாக்கிநபிமார்களிடமும் வலிமார்களிடமும் கேட்கக் கூடாதென்று சொல்வதும் இஸ்லாத்தை திசை திருப்புகின்ற வேலையாகும்.அத்துடன் இது பாமரர்களாகிய ஏகத்துவவாதிகளை  குழப்புவதுமாகும்" 
[நூல்: ஷிஃபாவுஸ் ஸகாம், பக்கம்-175]


அடுத்து நவாப் வஹீதுஸ்ஸமான் (அஹ்லே ஹதீஸின்ஆலிம்) மேற்கண்ட இஸ்த்திஃகாதா (உதவி தேடுதல்)ஷிர்க்காகாது என்பதை ஆதாரப்படுத்தும் வகையில் ---

"ஜாமிவுல் பயானுடைய ஆசிரியர் தமது தப்ஸீரின் துவக்கத்தில் நாயகம் صلى الله عليه و سلم  அவர்களிடம் உதவி தேடுகிறார். இந்நிலையில்  பொதுவாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் என்பது ஷிர்க்கென்று இருக்குமாயின் மேற்படி ஆசிரியரை நாம் முஷ்ரிக்கென்று சொல்லவேண்டி வரும். அப்படியானால் அவருடைய 
தப்ஸீரைநாம் எவ்வாறு ஏற்க முடியும் ? ஆனால்  அதேநேரம் எல்லாஅஹ்லே ஹதீஸ்வாதிகளும் அவருடைய தப்ஸீரை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி அல்லாமா (சித்திக் ஹலன் கான் போபாலி) அவர்களும் தமது கவிதையொன்றில்,....




“எனது தலைவரே! எனது ஆதரவே! என்னுடையவஸீலாவே! இன்பத்திலும் துன்பத்திலும் எனக்கு உதவுகின்றவரே !

நான் உமது வாயிலுக்கு வந்திருக்கிறேன். நான் கேவலமான நிலையிலிருக்கிறேன். தேம்பித்தேம்பி அழுகிறேன். நொந்துபோயிருக்கிறேன். என் மூச்செல்லாம் விரிந்து போய் விட்டது.

உம்மைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை .யாரிடம் நான் உதவி தேடுவேன் . ஏ ! ரஹ்மத்துல் ஆலமீனே ! என்னுடைய இழிந்த நிலை மீது இரக்கம் காட்டுங்கள் ".

என்றும் பாடுகிறார் . ஒருவேளை இதை பாடியவருடைய பெயரை சொல்லாமல் இன்று நம்மிடையே உள்ள வஹாபிகளிடம் இக்கவிதைகளை சொல்லிக் காட்டுவோமாயின் ,உடனே அவர்கள் கொஞ்சம் கூட தாமதிக்காமல் இக்கவிதை ஷிர்க் மற்றும் குப்ர் என்று பத்வா கொடுத்திருப்பார்கள் . அதுமட்டுமின்றி இக்கவிதையை பாடியவர் அறியாமை காலத்தை சேர்ந்த முஷ்ரிக்குகளை விட , மக்காவிலிருந்த விக்ரஹ ஆராதனைக்காரர்களை விட ஷிர்க்கில் எல்லைக் கடந்தவர் என்று என்றும் கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள் .

அதேநேரம் இக்கவிதையைப் பாடியவர் தங்களால் பெரிதும் மதிக்கக் கூடிய நவாப் சித்திக் ஹசன் போபாலி தானென்பதை நாம் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுவோமாயின் உடனே பத்வா எழுதும் அவர்களுடைய பேனாவிலுள்ள மை தீர்ந்துவிடும் . இதுதான் இறைவன் மற்றும் மறுமை  மீதுள்ள பயமற்ற நிலை கொண்ட இவர்களது வருத்தத்திற்குரிய நிலையாகும் . மேலும் இதைப்பற்றி நாம் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் , அது செவிடன் காதில் ஊதிய சங்குதான் என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை .

அடுத்து இந்த வஹாபிகள் இறந்து பலகாலமாகிவிட்ட இவர்களுடைய முன்னோர்களிடம் எப்படியெல்லாம் உதவி ஒத்தாசை தேடுகிறார்களென்று பாருங்கள் .

" கிப்லயே தீன் மததே ! கஃபயே ஈமான் மததே ! 
  இப்னு கையிம் மததே ! காழி ஷவ்கான் மததே !  "

[ நூல் - ஹாஷியா ஹத்யத்துல் மஹ்தி ,பக்கம் 23] 

அல்லாஹு அக்பர் ! பார்த்தீர்களா  ! ஸுன்னத் வல் ஜமாத்தை சார்ந்தவர் யா அலீ , யா கவ்ஸ் , யா க்வாஜா என்று சொல்லிவிட்டால் போதும் . உடனே அவர்கள் மீது குப்ர் என்றும் ஷிர்க் என்றும் பத்வா தந்து விடுவார்கள் . ஆனால் இதையே அவர்கள் செய்தால் அதனுடைய தீர்ப்பு வேறு மாதிரி ஆகிவிடும் . 

இன்னும் இந்த இஹ்ஸான் இலாஹி சொல்வதை பாருங்கள் ...,

" பரேலிகளின் எல்லை மீறிய கொள்கைகளில் ஒரு கேலிக்குரிய கொள்கையானது, பலநகரங்களில் மத்தியத்தர நிலையை சேர்ந்த சூஃபிகளிடம் இக்கொள்கைகளை  நாம் பார்க்கலாம். இவைகள் இஸ்லாத்தின் பெயரால் சிலைகளை வணங்குகின்றவர்களிடமிருந்தும் ,கிறிஸ்தவர்களிடமிருந்தும், யூதர்களிடமிருந்தும், முஷ்ரிக்குகளிடமிருந்தும் இஸ்லாமிய மக்களிடையே கொண்டு வந்து நுழைக்கப்பட்டவைகளாகும். இதை முஸ்லிம்களிடையே உள்ள முஜத்திதுகள் பல்வேறு கோணங்களில்
பலவாறாக இவைகளை எதிர்த்து போராடியுள்ளனர். அக்கொள்கைகளில் சில அறியாமை காலத்திலும் இருந்தன. அப்போது குர்ஆனும் குர்ஆனை உடையவர்களும் அவைகளை  எதிர்த்து போராடினார்கள். இருப்பினும் அவைகளெல்லாம் இன்று இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளாக மாறிப்போய்விட்டன. அதிலொன்று இறைவனல்லாதவர்களிடம் உதவி
தேடுவதை உதாரணமாக சொல்லலாம்" . 
[நூல்: அல்பரேலவிய்யா, பக்கம் 55]

இனி யார் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும்
காபிரென்றும் , முஷ்ரிக்கென்றும் சொல்வதற்கு கொஞ்சங்கூட
வெட்கப்படவில்லையோ அவர்கள் நம்மைபற்றி கூறுவதை
கேட்டு நாம் சங்கடப்பட வேண்டியதில்லை. ஆனால் அதே
நேரம் அவர்கள் தருகின்ற பத்வாவில் கொஞ்சத்தை நவாப்
வஹீதுஸ்ஸமான், நவாப் சித்தீக் ஹஸன் கான் போபாலி
மற்றும் அவர்களை பின்பற்றுவோர்களுக்கும் பங்குவைத்து
கொடுத்தால் நலமாக இருக்குமென்று நினைக்கிறோம். ஏனெனில்
இவர்கள் முதலில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி
தேடுவதை ஜாயிஸென்று கூறுகின்றனர். அதன்பின் இவர்களே
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவியும் தேடுகின்றனர்.
ஆனால்  இவர்கள் தமது பத்வாவை இவர்களை நோக்கி திருப்ப
மாட்டார்களென்று நமக்கு நிச்சயமாகத் தெரியும்.


ஏனெனில் குப்ரு மற்றும் ஷிர்க்குடைய பத்வா என்பது பாமர முஸ்லிம்
ளுக்குரியதே அன்றி இவர்களின் தலைவர்களுக்குரியதல்ல.
இன்னும் இத்தலைப்பில் நவாப் வஹீதுஸ்ஸமான் பல 
அத்தியாயங்களை தொகுத்துள்ளார். அதிலொன்று, படைப்பு
களின் சக்திக்கு உட்பட்ட காரியங்களில் அவைகளிடம் உதவு
தேடுவது ஆகுமான ஒன்றெனில் நபிமார்களிடமும்
ஷுஹதாக்களிடமும் ஸாலிஹீன்களிடமும் அவர்கள் வாழும்
காலத்தில் எதையெல்லாம் அவர்களிடம் கேட்கப்பட்டதோ
அதையெல்லாம் அவர்களின் மறைவுக்குப்பின்னரும் அவர்களிடம் கேட்கலாம். உதாரணமாக இறைவனிடம் துஆ செய்யச் 
சொல்வதும் இன்னும் இதுபோன்ற மற்றவைகளுமாகும்.

ஆனால் இவ்வாறு கேட்பது கூடாதென்றும் பித்அத்தென்றும் இப்னு தைமிய்யா, இப்னு கையிம், காழிஷவ்கானி போன்றோர் கூறுகின்றனர். இதைபற்றி இப்னு கையிம் சொல்லும்போது, ஒருவர் இறந்துபோய்விட்டால் அத்துடன்அவரது செயல்பாடுகளனைத்தும் துண்டிக்கப்பட்டுப் போய்
விடுகின்றன. ஆதலால் இப்போது அவர் தனக்கே எந்தவொரு
லாபத்தையும் நஷ்டத்தையும் செய்துகொள்ள முடியாத
போது, அவரிடம் கேட்போருக்கு அவரால் எவ்வாறு உதவ
முடியுமென்று கேட்டுவிட்டு தனது கொள்கைக்கு மாற்றமான
வர்களை குறித்து கீழ்கண்டவாறு எழுதுகிறார்,......

"(இறந்தோரிடம் கேட்பதை ) ஆகுமானதென்று சொல்லக்கூடியவர்கள் இமாம் சுப்கீ رحمه الله , இமாம் இப்னு ஹஜர் மக்கி رحمه الله ,அல்லாமா கஸ்த்தலானி رحمه الله போன்றோரும் மற்றுமுள்ள பெரும்பான்மையான ஷாபிய்யாக்களுமேயாகும். இவ்விஷயத்தில் உயிரோடு இருப்பவர்களும் இறந்தவர்களை போன்றவர்கள்தானென்று இவர்கள் கூறுகின்றனர். அதாவது, இறைவன் தனது வேதத்தில், "குல்லா அம்லிகுலி நப்ஸீநஃப் அன் வலழர்ரன்" என்பதாகக் கூறுகிறான்.

 அதாவது, எவ்வாறு உயிரோடிருப்பவர் இறைவனுடைய கட்டளை, திருப்தி, பொருத்தம் நாட்டம் மற்றும் தத்துவமின்றி ஒரு காரியத்தை செய்ய
முடியாதோ அவ்வாறே இறந்து போனவரும் இருக்கிறார்.
பின்னும் இறப்பை கொண்டு இறந்தவரின் செயல்பாடுகள
னைத்தும் துண்டிக்கப்பட்டு போய் விடுவதால் அவருக்குள்
செயல்பாடே நிகழ முடியாதென்றும் சொல்ல முடியாது.

ஏனெனில் வானவர்களின் செயல்பாடுகளும் இதுபோன்றே
துண்டிக்கப்பட்டுப் போய் தானுள்ளன. ஆனால் இறைவன்
அவர்களுக்கு கட்டளையிட்டால் எதைகுறித்து கட்டளையிடப்
படுகிறதோ அதை அவர்கள் செயல்படுத்துவார்கள்.


மேலும் நான் ஒருமுறை கனவில் ஹழ்ரத் ஹஸன் பின்
அலியை கண்டேன். அவர்கள் ஜமாஅத்தாக தொழுகை
நடத்திக் கொண்டிருந்தனர். நானும் அவர்களுக்கு பின்னால்
தொழுதேன். அதன்பின் அவர்களிடம், நீங்கள் இங்கே
எவ்வாறு தொழுகிறீர்கள்? பர்ஸகுடைய உலகமாகிய இங்கே
தொழுகை என்பது கடமையில்லையே! எனக்கேட்க, அதற்க
வர்கள்; இங்கே தொழுகை கடமையில்லை தான். இருப்பினும்
வலிமார்கள் நபிலுடைய எண்ணத்தில் இறைவனுடைய
சமீபத்துவத்தை பெறுவதற்காகவும் அவனுடைய வணக்கத்தை கொண்டு இன்பத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்வதற்காகவும் இங்கே தொழுகின்றனரென்று கூறினர்.

அவர்கள் சொன்னதை கேட்டு எனக்கு நபியவர்களின்
ஹதீஸொன்று நாடகத்திற்கு வந்தது. அதாவது, ஹழ்ரத் மூஸா
அலைஹிஸ்ஸலாமவர்கள் தமது கப்ரில் தொழுது கொண்டி
ருப்பதை நான் பார்த்தேன் என்று செள்ளதாகும். அதுசரி.
தொழுகையும் பிரார்த்தனைக்குரிய வகையை சேர்ந்தது தானே.
இதுபோன்றே இன்னொரு ஹதீஸில் நபியவர்கள், நான் மூஸா
அலைஹிஸ்ஸலாமவர்களை கண்டபோது அவர்கள் சப்தமிட்டு
தல்பிய்யா ஓதியவர்களாக தம்மிறைவனை சமீபித்துக் கொண்டி
ருந்ததை பார்த்தேன் என்பதாகும்.

 மேலும் அல்லாமா தீபி என்பார் கூறுகின்றனர். நபிமார்கள், பிரார்த்தனையை கொண்டு இறைவனை சமீபித்தல் என்பது அவர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்றல்ல. ஏனெனில் அவர்கள் ஷுஹதாக்களை விட மேன்மையானவர்களாகும். அத்துடன் மறுமை என்பது துன்பத்தை 
அனுபவிக்கக்கூடிய இடமல்ல என்றும் கூறுகின்றனர்.

எனவே ஸியாரத்துச் செய்வோருக்காக இறந்து போனவர்கள் பிரார்த்தனை செய்வதற்கு என்ன தடை இருக்கமுடியும்.ஆனால் இந்த இடத்தில் கேள்வி இறந்தோரை பற்றியதல்ல மாறாக வலிமார்களை குறித்த விஷயமாகும். அத்துடன் ஆன்மாக்கள் என்பது மரணத்தின் ருசியை அனுபவிப்பது
மில்ல. அதனால் அழிந்து போவதுமில்லை. அதேநேரம்
அவைகளின் உணர்வும் அறிவும் அப்படியே தான் இருகின்றன.

 குறிப்பாக நபிமார்கள் ஷுஹதாக்கள் போன்றோரது
விஷயத்தில் குர்ஆன் ஹதீஸ்  உடைய தெளிவான ஆதாரங்கள்
கொண்டு அவர்கள் உயிரோடு இருப்பவர்களின் படித்தரத்தில்
இருக்கின்றார். ஆகையால் அவர்களுடைய கப்ருகளுக்கு
சென்று கண்டிப்பாக உதவி தேடப்பட்டாக வேண்டும் என
கூறுதல் எப்படி சரியாகும்?

காரணம் இவர்கள் தாம் வாழுகின்ற காலத்திலேயே தூரத்திலுள்ள செய்திகளை கேட்க முடியாது போது இறப்புக்குப் பின்னால் பட்டும் எப்படி கேட்ட  முடியும் " என்று கேட்கிறார்.

இது சம்பந்தமான ஒரு ஹதீஸை  நாம் முன்னால்  குறிப்பிட்டிருக்கிறோம் . அதாவது ஒரு அடியான் -அதிகமதிகம் நபிலான வணக்கங்களை கொண்டு எப்படிப்பட்ட படித்தரத்தை எய்தி விடுகிறானெனில் அவனுடைய ஒவ்வொரு உடறுப்பும் இறைவன் தஜல்லியாகும் மழ்ஹராகவே மாறிப்போய் விடுகின்றன என்பதாம்.

 அத்துடன் இந்த ஹதீக்கு இமாம்  பக்ரூத்தின் ராஜி رحمه الله அவர்கள், அடியான் அவ்வுயர்  நிலையை பெற்றுக் கொள்ளும்போது சமீபத்திலுள்ளவைகளையும் ,தொலைவில் உள்ளவைகளையும்  பார்க்கவும் கேட்கவும் செய்கிறன். ஆனால் தன் அறிவுக்குப் பின்னால் ஓடி கொண்டிருப்போருக்கு இதோர் ஆச்சரியமான விஷயம்தான். 

இருப்பினும் இறைவனால்  இவ்வுயர் நிலை கொடுக்கப்படும் அடியார்களுக்கு தொலைவிலுள்ள பொருட்களையோ செய்திகளையோ பார்ப்பதும் , கேட்பதும் சிரமமான காரியம் இல்லை  கூறுகின்றனர் .

மேலும் இஸ்த்திஆனத்தை மறுப்பவர்களிடம் அது ஆகுமான ஒன்று தான்   என்று உறுதிப்படுத்துதற்காக குர்ஆன் , ஹதீஸிலிருந்து அதற்குரிய ஆதாரத்தை நாம் எடுத்துக் காட்டினால் அதற்கவர்கள் , இது உயிரோடிருப்பவர் சம்பந்தமான விஷயமாகும் .இதைத்தான் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோமே ! இனி நாங்கள் ஷிர்க் என்று சொல்வதெல்லாம் இறந்து போனவர்களிடம் உதவி தேடுவதை பற்றித்தான் என்கின்றனர் . இக்கருத்தை மறுத்து இவர்களின் உலமாக்களில் ஒருவரான நவாப் சித்திக் ஹசன் கான் போபாலி  என்பவர் சொல்கிறார் ,.......

" ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் நமது சகோதரர்களில் சிலர் இஸ்த்திஆனத்     என்னும் உதவி தேடுதல் சம்பந்தமான விஷயத்தில் உயிரோடிருப்பவர் , இறந்து போனவர் என்று பிரிக்கின்றனர் . இதில் உயிரோடிருப்பவரிடம் அவரது சக்திக்குட்பட்ட எதையெல்லாம் கேட்கப்படுமோ அதெல்லாம் ஷிர்க்காகாது என்றும் , ஆனால் அதையே இறந்து போனவரிடம் கேட்பது ஷிர்க் ஆகும் என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டுள்ளனர் .

இது பகிரங்கமான வழிகேடாகும் . ஏனெனில் அல்லாஹ் அல்லாதவை என்று வரும்போது உயிரோடிருப்பதோ , அல்லது இறந்து போனதோ இரண்டும் சமம்தான் . இவ்விஷயத்தில் அதிகமாக சொல்வதாயின் இறந்து போனோரிடம் உதவி தேடுவதென்பது ,உயிரோடிருப்பவரை இறந்தோருக்கு இணையாக்குவது என்று வேண்டுமானால் சொல்லலாம் . மற்றபடி இது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாகாது . "

இதே கொள்கையைத்தான் இமாம் அஹ்மத் ரிழா கான் பாழில் பரேல்வி அவர்களும் , ஷிர்க் என்பது யாரோடு வைக்கப்பட்டாலும் ஷிர்க் தான் என்றும் , அவ்வாறின்றி ஒருவருடைய விஷயத்தில் மட்டும் ஷிர்க்காகாது எனில் அந்நிலையில் அது யாருடைய விஷயத்திலும் ஷிர்க் ஆக முடியாது என்று கூறுகின்றனர் . கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் . அல்லாஹ்வுக்கு இறந்தோர் இணையாக மாட்டார்களா, என்றால் உயிரோடிருப்பவர்கள் மட்டும் இணையாவார்களா ? இவ்வாறே  தூரத்திலிருப்போர் இணையாக மாட்டார்களென்றால், சமீபத்திலிருப்போர் மட்டும் இணையாவார்களா ? நபிமார்கள் இணையாக மாட்டார்களென்றால் , மருத்துவர்கள் மட்டும் இணையாவார்களா ? மனிதன் இணையாக மாட்டான் என்றால், மலக்குகள் இணையாவர்களா ?   ஆனால் உண்மை நிலை என்னவெனில் சர்வ வல்லமை படைத்த ஏக நாயன் அல்லாஹ்வுக்கு யாருமே இணையாக மாட்டார்கள் என்பது தான் சத்தியமாகும் .






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...