இமாம் தாரிமி رضي الله عنه ( மறைவு - ஹிஜ்ரி 255 எழுதுகின்றார்கள் ) :
ஹழ்ரத் ஸெய்யிதினா ஸயீத் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , ( கொடுங்கோலன் யஜீத் மதீனாவை தாக்கிய பொழுது ) மதீனா முனவ்வராவில் , மஸ்ஜிதுந் நபவியில் மூன்று நாட்கள் பாங்கு மற்றும் இகாமத் தடைபட்டது ( யஜீதிய படைகளால் தாக்கப்பட்டதால் ) ,அவ்வேளையில் தாபஈயான ஹழ்ரத் ஸெய்யிதினா ஸயீத் பின் முஸப் رضي الله عنه மஸ்ஜிதுந் நபவியில் இருந்தார்கள். அவர்கள் தொழுகையின் வக்தை கண்மணி நாயகம் ﷺ அவர்களது புனிதமிகு ரவ்ழா ஷரீபில் வரும் பாங்கு சத்தம் மூலம் அறிந்து கொண்டார்கள்.
📚 முஸ்னத் தாரிமி ,பாகம் 1,பக்கம் 89 ,ஸனத் ரிஜால் திகா
No comments:
Post a Comment