Sunday 21 July 2024

ஹயாத்துந் நபி ‎ﷺ ‏



இமாம் தாரிமி رضي الله عنه ( மறைவு - ஹிஜ்ரி 255 எழுதுகின்றார்கள் ) : 

ஹழ்ரத் ஸெய்யிதினா ஸயீத் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , ( கொடுங்கோலன் யஜீத் மதீனாவை  தாக்கிய பொழுது ) மதீனா முனவ்வராவில் , மஸ்ஜிதுந் நபவியில் மூன்று நாட்கள் பாங்கு மற்றும் இகாமத் தடைபட்டது ( யஜீதிய படைகளால் தாக்கப்பட்டதால் ) ,அவ்வேளையில் தாபஈயான ஹழ்ரத் ஸெய்யிதினா ஸயீத் பின் முஸப் رضي الله عنه மஸ்ஜிதுந் நபவியில் இருந்தார்கள். அவர்கள் தொழுகையின் வக்தை கண்மணி நாயகம்  ﷺ அவர்களது  புனிதமிகு ரவ்ழா ஷரீபில் வரும் பாங்கு சத்தம் மூலம் அறிந்து கொண்டார்கள்.

📚 முஸ்னத் தாரிமி ,பாகம் 1,பக்கம் 89 ,ஸனத் ரிஜால் திகா

Wednesday 10 July 2024

வலிமார்களை நேசிப்பது !

இமாம் இப்னு ரஜப் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு - 795 ஹிஜ்ரி) அவர்கள் எழுதுகின்றார்கள் , 

" அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்களை நேசிப்பது ஈமானின் அடையாளமாகும். அவர்களை வெறுப்பது ஹராமாகும் ,ஏனெனில் அது முனாபிக்தனத்தின் அடையாளமாகும் " 


📚 பத்ஹுல் பாரி ஷரஹ் புஹாரி , பாகம் 1 ,பக்கம் 66

Tuesday 9 July 2024

பூமான் நபியின் புகழ் !

" பூமான் நபி  ﷺ அவர்களது புகழ் அகிலத்தாருக்குள் இன்று நேற்று வந்ததல்ல.பூர்வீகத்திலே அந்தப் புகழைக் கொண்டு மழைமேகம் மழையை வரிசிப்பது போல் வரிசித்துக் கொண்டே இருக்கின்றது.ஆகையால் எந்த மடையனாவது சாடை,சைக்கினைக்காவது நாயகத்தைப் புகழ்வதில் என்னைப் பழித்தால்.எனக்கு இடையூறு செய்கின்ற அவர்களை,கோள் சொல்கின்றவர்களை,அவர்களுடைய தலைகளை நான் நாயகத்தின் மீது செய்யும் புகழைக் கொண்டு உடைத்து நொறுக்கிடுவேன் " 


 📚 வித்ரியா ஷரீப், மாதிஹுர் ரஸூல்,ஷரஹுப் புலி  இமாம் ஸதகத்துல்லாஹ் காதிரி காஹிரி قدس الله سره العزيز

வழிகேடர்களுக்கு மறுப்புரை !

ஏந்தல் நபி  ﷺ அவர்களது அருமைத் தோழர்கள்,வழிகாட்டும் நட்சத்திரங்களான ஸஹாபா பெருமக்களை சந்திந்த தாபஈ ஸெய்யிதினா இப்ராஹீம் அந்நகாயி رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , "( அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான)  வழிகெட்ட கொள்கைவாதிகளை பின்பற்றுவோரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது புறம்பேசுவதாகாது " 
📚 *ஷரஹ் உஸுல் அகாயித் ,1/140*
Related Posts Plugin for WordPress, Blogger...